#BREAKING :ஐபிஎல் 2026: குஜராத்தை வீழ்த்தி வெற்றி வாகை சூடிய பஞ்சாப் அணி..!!

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
PBKS vs GT
PBKS vs GT
Published on

19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் 4-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்சுடன் மோதுகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 6 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியதில் தலா 3-ல் வெற்றி பெற்றுள்ளன.

இதற்கிடையே இந்த போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில், சாய் சுதர்சன் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பஞ்சாப் பந்துவீச்சாளர்களால் கடுமையான நெருக்கடிக்கு ஆளான குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. கடைசியில் குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் தரப்பில் வைஷாக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையும் படியுங்கள்:
ரசிகர்களுக்கு அதிர்ச்சி.! ஐபிஎல் 2026 தொடக்க நிகழ்ச்சிகள் ரத்து.!
PBKS vs GT

இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணி, அபாரமாக விளையாடி கடைசியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com