ஜெய்ஷா எடுத்த முடிவு… அதிருப்தியில் கிரிக்கெட் வட்டாரம்!

Jay shah
Jay shah
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முக்கிய முடிவை ஐசிசி தலைவர் ஜெய்ஷா எடுத்திருக்கிறார். இது கிரிக்கெட் வட்டாரத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சில காலத்திற்கு முன்னர்தான் ஐசிசி தலைவராக ஜெய்ஷா பதவியேற்றார். அதற்குள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒரு பெரிய முடிவை எடுத்து விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் 9 அணிகள் மோதவுள்ளன. அதற்கான அட்டவணை ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், ஒரு புது முடிவை ஐசிசி தலைவர் எடுத்திருக்கிறார். அதாவது இந்த 9 அணிகளும் நேருக்கு நேர் மோதப்போவது இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது. சில அணிகளுக்கு ஒரு வருடத்தில் குறைந்த டெஸ்ட் போட்டிகள் மட்டுமே இருக்கிறது. இந்திய அணி, கடைசி 3 மாதத்தில் 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய நிலையில், இலங்கை அணி, கடந்த ஆண்டில் மொத்தமே 4 டெஸ்ட் போட்டிகளில்தான் ஆடியது. இப்படி, சில முரண்பாடுகள் இருப்பதால், இதனை ஐசிசி தலைவர் ஜெய் ஷா, தீர்க்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
HMPV வைரஸ் நம்மை விரட்டுகிறது; விழிப்புடன் இருங்கள் மக்களே! என்ன நடக்கும்? என்ன செய்யணும்?
Jay shah

இப்படியான நிலையில், ஜெய்ஷாவின் புது முடிவு விமர்சனங்களை கொடுத்துள்ளது. அதாவது இந்த தொடரில் இரு குழுக்களை உருவாக்க உள்ளாராம். இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மிகமுக்கிய அணியாக இருப்பதால், இந்த மூன்று நாடுகளுக்கு இடையில் மட்டும் அதிக போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளாராம்.

மற்ற நாடுகளுக்கிடையே குறைந்த போட்டிகளையும், இந்த மூன்று நாடுகளுக்கும் இடையே அதிக போட்டிகளையும்  நடத்த ஜெய்ஷா விரும்புவதாகவும், அதற்கேற்றவாரு அட்டவணையை தயார் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த முடிவு பல நாடுகளுக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம், கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது. இது பிரிவினையை உண்டாக்கும் என்றும், மேற்கிந்தியத் தீவுகள் போன்ற டெஸ்டில், மீண்டும் உச்சத்தை தொட நினைக்கும் அணிகளுக்கு இது பின்னடைவாக மாறும் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
'நவீன ஊட்டச்சத்து அறிவியல்': ஒரு புதிய பார்வை
Jay shah

மேலும்  மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரரான கிளைவ் லாயட் ஒரு கேள்வியை முன்வைத்திருக்கிறார். டெஸ்ட் விளையாடி வரும் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே போன்ற நாடுகளை, இன்னமும் ஏன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வட்டத்திற்குள் கொண்டு வரவில்லை என்று கேட்டிருக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com