மொனாக்கோ கிராண்ட் ப்ரீயை தட்டித்தூக்கிய கிமி அன்டோனெல்லி!

மொண்டே கார்லோவின் குறுகிய தெருக்களில், மழையில் 19 வயது கிமி அன்டோனெல்லி மெர்சிடிஸ் அணிக்கு 5வது தொடர் வெற்றியைத் தந்து வரலாறு படைத்தார்!
Monaco Grand Prix and Kimi Antonelli
mercedes-monaco-grand-prix-2026
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

ஃபார்முலா 1 (F1) பந்தய உலகிலேயே மிகவும் சவாலான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க பந்தயம் என்றால் அது மொனாக்கோ கிராண்ட் ப்ரீக்ஸ் தான்(mercedes-monaco-grand-prix-2026). அந்த வகையில் இப்பந்தயத்தின் இறுதிப் போட்டி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

மொனாக்கோவின் சர்க்யூட் என்பது வீரர்களுக்கு மிகப்பெரிய சவாலான ஒன்றாகும். ஏனெனில், இதில் வேகத்தை விட துல்லியமும், தைரியமும்தான் முக்கியம். ஒரு மில்லிமீட்டர் தவறினாலும் கார் சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்திவிடும். நேற்று நடைபெற்ற போட்டியும் மொண்டே கார்லோவின் மிகக் குறுகிய, வளைவுகள் நிறைந்த தெருக்களில் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி சுற்றுகளில் பெராரி (Ferrari) அணியின் லூயிஸ் ஹாமில்டன் மற்றும் மொனாக்கோவின் சொந்த மண்ணின் நாயகன் சார்லஸ் லெக்லெர்க் (Charles Leclerc) ஆகியோரே ஆதிக்கம் செலுத்தினர். ஆனால், இறுதி தகுதிச் சுற்று (Q3) வந்தபோது ஆட்டம் தலைகீழாக மாறியது.

1:12.051 வினாடிகளில் இலக்கை எட்டி கிமி ஆண்டோனெல்லி முதலிடத்தைப் பிடித்தார். இவரைவிட ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் வெறும் 0.043 வினாடிகள் வித்தியாசத்தில் பின்தங்கி இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

மெர்சிடிஸ் அணியின் 19 வயது இளம் வீரர் கிமி ஆண்டோனெல்லி (Kimi Antonelli) முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த எஃப்1 உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கிமி தனது ஏழாவது வயதிலேயே கார்டிங் (Karting) பந்தயங்களில் பங்கேற்கத் தொடங்கி, மிக விரைவாகவே தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தினார். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய கார்டிங் சாம்பியன்ஷிப் (CIK-FIA European Championship) பட்டங்களை வென்று உலக அரங்கின் கவனத்தை ஈர்த்தார். இவரின் வேகமும் விவேகமும் இவர் பங்கேற்ற அனைத்து ஜூனியர் ஃபார்முலா பிரிவுகளிலும் சாப்பியன் பட்டத்தை பெற்று தந்திருக்கிறது.

அந்த வகையில் நேற்று விருவிருப்பாக நடைபெற்று முடிந்த மொனாக்கோ கிராண்ட் ப்ரீக்ஸ் இறுதிபோட்டியில் ரெட் புல் (Red Bull) அணியின் நட்சத்திர ஓட்டுநரும், 4 முறை உலக சாம்பியனுமான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (Max Verstappen), பந்தயம் தொடங்கிய முதல் சுற்றிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடந்த விபத்தில், போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். வெர்ஸ்டாப்பன் காரை இடதுபக்கம் திருப்பி, ஃபெராரி அணியின் சார்லஸ் லெக்லெர்கிற்கு வழிவிட்டார்.

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாத, விபத்துக்கள் நிறைந்த 2026 மொனாக்கோ கிராண்ட் ப்ரீ ஃபார்முலா 1 கார் பந்தயத்தில், மெர்சிடிஸ் அணியின் இளம் நட்சத்திரம் கிமி அன்டோனெல்லி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் அவர் தனது 5-வது தொடர் வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் ஒரு பார்வை!
Monaco Grand Prix and Kimi Antonelli

பல்வேறு திருப்பங்கள் நிறைந்த இந்த சவாலான போட்டியில், ஃபெராரி அணியின் லூயிஸ் ஹாமில்டன் இரண்டாம் இடத்தையும், ரெட் புல் அணியின் இசாக் ஹாட்ஜர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். நான்காம் இடத்தை ஜார்ஜ் ரஸ்ஸல் மற்றும் ஐந்தாம் இடத்தை பியர் காஸ்லி ஆகியோர் பிடித்துள்ளனர்.

பலமுறை விபத்துக்கள் நடந்தும், சாதுர்யமாக காரை இயக்கி 19 வயதான கிமி அன்டோனெல்லி மெர்சிடிஸ் அணிக்கு மற்றுமொரு மகுடத்தைச் சூட்டியுள்ளார். இளம் வயத்தில் வரலாற்று சாதனை புரிந்து உலக மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார் கிமி அன்டோனெல்லி .

logo
Kalki Online
kalkionline.com