
குகேஷ் மற்றும் டிங் லிரன் இடையேயான உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் தரத்தை விமர்சித்த மேக்னஸ் கார்ல்சனுக்கு டி.குகேஷ் பதிலளித்தார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் லிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான டி.குகேஷ். இதன் மூலம் இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார்.
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக வீரர் குகேசுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவருக்கு, உலகின் முதல் நிலை வீரரரும் உலக சாம்பியன்ஷிப்பில் 5 முறை பட்டம் வென்றவருமான நார்வே நாட்டைச் சேர்ந்த பிரபல வீரரான மேக்னஸ் கார்ல்சன், 'இரு உலக சாம்பியன்ஷிப் போட்டியாளர்களுக்கு இடையிலான போட்டி போல இது இல்லை' என மேக்னஸ் கார்ல்சன் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளின் தரத்தை கடுமையாக விமர்சித்ததோடு, தனது 18 வயதில் இளைய சாம்பியனான குகேஷ், தனது பட்டத்தை வென்றது அவரது குணாதிசயம் மற்றும் விருப்பத்தின் சக்தி என்று விமர்சனம் செய்துள்ளார்.
லிரனுக்கு எதிரான தனது டைட்டில் போட்டி குறித்து கார்ல்சன் தெரிவித்த கருத்துக்களால் குகேஷிடம் காயம் ஏற்பட்டதா என்று கேட்டபோது, அவர் அளித்த பேட்டியில், "உண்மையில் இல்லை" என்று மேற்கோள் காட்டினார்.
மேலும் அவர் ,உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் சில விளையாட்டுகளின் தரம் மிகவும் அதிகமாக இல்லை என்றும் குகேஷ் விளக்கினார். ஆனால் அதே நேரத்தில், வீரரின் குணாதிசயத்தால் இந்த நீண்ட மற்றும் கடினமான போட்டிகள் எவ்வாறு வெற்றி பெறுகின்றன மற்றும் தோல்வியடைகின்றன என்பதை அனைவருக்கும் நினைவூட்டினார்.
மேலும் அவர் , "சில விளையாட்டுகளில், தரம் அதிகமாக இல்லை என்று நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் செஸ் திறமைகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை, யாருக்கு சிறந்த குணம் இருக்கிறது, யாருக்கு சிறந்த மன உறுதி இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது என நினைக்கிறேன். அந்த குணங்களை நான் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினேன் என்று நினைக்கிறேன். போட்டி ரீதியாக பார்த்தால் நான் விரும்பிய அளவுக்கு உயர்வாக இல்லை. ஏனெனில் இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. போட்டியில் ஏற்பட்ட அழுத்தம் வேறாக இருந்தது. எனவே நான் சற்று சிறப்பாக வெளிப்படுத்தவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் முக்கிய தருணங்களில் என்னால் சிறப்பாக செயல்பட முடிந்தது. அது எனக்கு மகிழ்ச்சியே" மேக்னஸ் கார்ல்சன் கருத்துக்கு நச்சென பதிலளித்துள்ளார்.
தற்போதைய சர்வதேச தரவரிசை பட்டியலில் 2,755.9 புள்ளி பெற்று சர்வதேசப் பட்டியலில் 10 இடங்களுக்குள்ளும், இந்தியாவின் நம்பர் 1 வீரர் என்ற இடத்தையும் குகேஷ் பிடித்துள்ளார். சர்வதேச தரவரிசையில் விஸ்வநாதன் ஆனந்த் 2,754.0 புள்ளிகளை பெற்று உள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயதான இளம் செஸ் வீரர் குகேஷ், விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் என்ற நிலையை அடைந்துள்ளார்.