நியூசிலாந்து வீரர் லூயி வின்சென்ட் சூதாட்டம் பற்றிய உண்மையை முதல்முறை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
நியூசிலாந்து முன்னாள் வீரர் லூயி வின்சென்ட் இதுவரை நியூசிலாந்து அணிக்காக 108 ஒரு நாள் தொடர் போட்டிகளிலும், 23 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆனால், இவர் சூதாட்ட குற்றத்தில் சிக்கப்பட்டதால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் தடை விதிக்கப்பட்டார். தற்போது அவர் இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இவர் சூதாட்ட நிகழ்வுகளை பற்றிய உண்மைகளை பகிர்ந்துள்ளார். அதாவது, “நான் சிறு வயதில் இருந்தே சண்டை சச்சரவான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் மேலும் எனக்கு நண்பர்கள் யாரும் கிடையாது. தனிமையில் இருந்தேன் என்னிடம் பேச கூட யாரும் இருந்ததில்லை.
இந்த மாதிரியான சூழ்நிலையில்தான் நான் இந்தியா வந்தேன். அப்போது ஒரு சூதாட்ட கும்பல் எண்ணை கட்டாயப்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபட வைத்தனர். நான் நண்பர்கள் இல்லாதவன் என்பதால் அவர்களுடன் பழகிவிட்டேன். அவர்களோடு இணைந்து ஒரு முக்கிய நபராகவே மாறிவிட்டேன். அவர்களும் எனக்கு என்ன வேண்டுமோ அனைத்தையும் செய்தனர்.
ஒரு கட்டத்தில் நான் செய்த அனைத்தும் தவறு என்பது புரியவந்தது. ஆகையால் அதிலிருந்து விலக நினைத்தேன். ஆனால், அவர்களிடமிருந்து என்னால் தப்பிக்கவே முடியவில்லை. என்ன செய்தாலும் தப்பிக்கவே முடியாத அந்த சூழ்நிலையில் ஒரு முடிவு எடுத்தேன். உண்மையை ஒப்புக் கொண்டு தண்டனை பெறுவது தான் சிறந்தது என்று ஒப்புக்கொண்டேன். நான் செய்த தவறிலிருந்து வெளிவர 10 ஆண்டுகள் ஆனது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தான் அரவணைத்தது.” என்று பேசியுள்ளார்.
அனைத்து நாடுகளின் கிரிக்கெட் உலகிலும் மேட்ச் ஃபிகிஸிங் சட்டவிரோதமாக நடந்துதான் வருகின்றது. அதில் பலரும் தெரிந்தோ தெரியாமலையோ சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள். இதுபோல உண்மையை உரைத்துவிட்டு சரணடைபவர்களுக்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தண்டனை அழித்தாலும், நன்றாகவே பார்த்துக்கொள்கிறது. ஆனால், சிலர் எவ்வளவு சொன்னாலும் சூதாட்டத்தில் இணைந்து தங்களது முழு கிரிக்கெட் வாழ்க்கையையும் இழந்துவிடுகிறார்கள் என்பதே உண்மை.
அதுவும் இந்த நியூசிலாந்து வீரர் இந்தியாவில்தான் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுப்பட்டார் என்பது மிகவும் வருத்தத்திற்குரியது.