'மிஸ் ஒலிம்பியா' உடற்கட்டமைப்புப் போட்டிகள்... சுவாரஸ்ய தகவல்கள்!

Miss Olympia
Miss Olympia

ஸ்பெயின் நாட்டிலுள்ள லாஸ் ரோசாஸ் (மாட்ரிட்) எனுமிடத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு உடற்கட்டமைப்பு மற்றும் உடற்தகுதி கூட்டமைப்பு (International Federation of Bodybuilding and Fitness - IFBB) மிஸ்டர் ஒலிம்பியா, மிஸ் ஒலிம்பியா, வீல்சேர் ஒலிம்பியா, ஆரோக்கிய ஒலிம்பியா, பெண்களுக்கான உடலமைப்பு ஒலிம்பியா, பிகினி ஒலிம்பியா, பிகர் ஒலிம்பியா, செம்மையான உடலமைப்பு ஒலிம்பியா என்று பல்வேறு உடற்கட்டமைப்புப் போட்டிகளை உலகளாவிய நிலையில் நடத்தி வெற்றியாளர்களை அறிவித்து வருகிறது.

இந்த அமைப்பு, 1980ஆம் ஆண்டிலிருந்து மிஸ் ஒலிம்பியா எனப்படும் பெண்களுக்கான உடற்கட்டமைப்புப் போட்டிகளை நடத்தி, அதில் வெற்றியடைபவர்களுக்குப் பரிசுத்தொகையுடன் மிஸ் ஒலிம்பியா எனும் பட்டத்தையும் வழங்கி வருகிறது.

இப்போட்டிகள் குறித்த சிவ சுவாரஸ்ய தகவல்கள்:

  • 1980ஆம் ஆண்டில் முதன்முதலாக நடத்தப்பட்ட இப்போட்டியில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஹார்லிங்கன் நகரில் பிறந்த ரேச்சல் மெக்லிஷ் எனும் பெண்மணி முதல் மிஸ் ஒலிம்பியா பட்டத்தினை வென்றார்.

  • 1984ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை நடத்தப் பெற்ற போட்டிகளில் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்திலுள்ள ரேஸின் நகரில் பிறந்த கொரின்னா எவர்சன் எனும் பெண்மணி ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக மிஸ் ஒலிம்பியா பட்டத்தை வென்றார்.

  • அதனைத் தொடர்ந்து, 1990ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டு வரையிலான போட்டிகளில் அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்திலுள்ள டெட்ராயிட் நகரில் பிறந்த லெண்டா முர்ரே எனும் பெண்மணி ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக மிஸ் ஒலிம்பியா பட்டத்தை வென்றார்.

  • 1996ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை நடைபெற்ற போட்டிகளில், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்திலுள்ள சார்லெஸ்டன் நகரில் பிறந்த கிம் சிசெவ்ஸ்கி – நிக்கோலஸ் எனும் பெண்மணி தொடந்து நான்கு ஆண்டுகள் மிஸ் ஒலிம்பியா பட்டத்தை வென்றார்.

  • 2000ஆம் ஆண்டில் இப்போட்டியானது மிகு எடை, இலகு எடை மற்றும் ஒட்டு மொத்தம் என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டது. ஆனால், 2000ஆம் ஆண்டில் ஒட்டு மொத்தத்திற்கான போட்டி நடைபெறவில்லை.

  • 2002 மற்றும் 2003ஆம் ஆண்டில் மிகு எடைப் பிரிவிலும் ஒட்டு மொத்தப் பிரிவிலுமாக 1990ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டு வரை பட்டம் வென்ற அமெரிக்காவின் லெண்டா முர்ரே எனும் பெண்மணி வென்றார்.

  • 2005ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை இலகு எடைப் பிரிவு, கன எடைப் பிரிவுக்கான போட்டி நடத்தப்பெறவில்லை. ஒட்டுமொத்தப் பிரிவு மட்டும் நடத்தப் பெற்றது.

  • 2014ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை இப்போட்டிகள் நடத்தப் பெறாமல் போனது.

  • 2020, 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் நடத்தப் பெற்ற போட்டிகளில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரியா ஷா எனும் பெண்மணி தொடர்ச்சியாகப் பட்டம் வென்றார்.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்திலுள்ள பெண்டன் ஹார்பர் நகரில் பிறந்த ஐரிஸ் கைல் எனும் பெண்மணி ஒட்டுமொத்தப் பிரிவில் 10 முறையும், மிகு எடைப் பிரிவில் இரு முறையும் வென்று முதலிடத்தில் இருக்கிறார். அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்திலுள்ள டெட்ராயிட் நகரைச் சேர்ந்த லெண்டா முர்ரே எனும் பெண்மணி ஒட்டுமொத்தப் பிரிவில் 8 முறையும், மிகு எடைப் பிரிவில் இரு முறையும் வென்று இரண்டாமிடத்திலும், அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்திலுள்ள ரேஸின் நகரில் பிறந்த கொரின்னா எவர்சன் எனும் பெண்மணி ஒட்டுமொத்தப் பிரிவில் 6 முறை வென்று மூன்றாமிடத்திலும் இருக்கின்றனர்.

படம்:

2020, 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பெற்ற போட்டிகளில் மிஸ் ஒலிம்பியா பட்டம் வென்று. 2024 ஆம் ஆண்டுப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரியா ஷா படம் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com