முகமது கைஃப் கணிப்பு: இந்திய அணியில் விரைவில் களமிறங்கப் போகும் வைபவ் சூர்யவன்ஷி!

இந்திய அணியின் எதிர்கால ஸ்டார் வைபவ் சூர்யவன்ஷி குறித்து முகமது கைஃப் அதிரடி பேட்டி.
Kaif vaibhav Suryavanshi
Mohamad KaifABP , X
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முகமது கைஃப் இந்திய அணியின் எதிர்கால வீரர் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய அணியின் ஒரு வீரரைக் குறித்து முன்னாள் வீரர்களும் , மற்ற வீரர்களும் பேசுகிறார்கள் என்றால் , அது நிச்சயம் வைபவ் சூர்யவன்ஷி பற்றியதாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு கிரிக்கெட் உலகில் தினசரி பேசு பொருள் ஆகியுள்ளார் அந்த சிறுவன்.

சமீப காலமாக இந்தியத் தேர்வுக் குழுவின் மீது அடிக்கடி வைக்கப்படும் விமர்சனம் , அவர்கள் இளம் வயதிலேயே திறமையை நிரூபித்தும் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் உக்கார வைக்கப்படும் அந்த சிறுவனுக்காகத் தான். வைபவ் முந்தைய தொடர்களில் தேர்வு செய்யப்பட்டதில், பல முன்னாள் வீரர்களின் தேர்வுக் குழு மீதான காட்டமான விமர்சனமும், சமூக வலைதளங்களில் ஏற்பட்ட எதிர்ப்பும் முக்கிய காரணமாக இருந்தது.

சமீப காலத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான், ஜப்பானுக்கு எதிரான போட்டிகளில் கூட வைபவை தேர்வு செய்யாமல் தேர்வுக் குழு புறக்கணித்தது. இந்திய அணி பெற்ற சமீப வெற்றிகள் அனைத்தும் கடை நிலை அணிகளுடன் மோதி பெறப்பட்டது. விரைவில் வைபவை இந்திய அணியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் தேர்வுக் குழுவிற்கு ஏற்படும் என்று முகமது கைப் கூறியுள்ளார்.

இந்திய அணியின் துணைக் கேப்டனாக இருப்பது மட்டுமே திலக் வர்மாவிற்கு நிரந்தர இடத்தினை வழங்காது. வரலாற்றில் பல துணைக் கேப்டன்கள் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் திலக்கின் செயல்பாடு சொல்லும் அளவிற்கு இல்லை. 23 போட்டிகளில் பங்குபெற்ற அவர் வெறும் 483 ரன்களை மட்டுமே குவித்து 34.50 என்ற குறைவான பேட்டிங் சராசரியை வைத்துள்ளார். அவருக்கு சுழற்பந்து வீச்சை சமாளிக்கும் திறன் குறைவு என்பதால் நிலையான பேட்டிங் வரிசையிலும் இடம் கிடைக்காமல் , இறுதி இடங்களில் இறக்கப்படுகிறார்.

Vaibhav Suryavanshi
vaibhav Suryavanshi x

அணியில் மிடில் ஆர்டரில் களமிறங்கும் சிவம் துபேவின் ஆட்டமும் சொல்லும் படியாக இருப்பது இல்லை. அவருக்கு பேட்டிங் தவிர வேறு எதுவும் வருவதில்லை , பந்து வீச்சில் ஈடுபட்டாலும், ஆல்ரவுண்டர் தகுதியை பெரும் அளவிற்கு அவரது பந்து வீச்சு இருப்பது இல்லை. இந்த ஆண்டில் அவர் இதுவரை 502 ரன்களும், 15 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். அவரது பவுலிங் சராசரி போதுமான அளவில் இல்லை , பில்டிங்கில் அவரது செயல்பாடுகள் மோசமானதாக உள்ளது.திலக் அல்லது சிவம் துபே ஆகிய இருவரில் ஒருவரை அணி , 6 மாதங்கள் கழட்டி விடும். வைபவிற்கு இடம் கொடுக்க இவர்கள் தூக்கப்பட வேண்டும் என்று நானே சொல்கிறேன் , என்று கைப் கூறியுள்ளார்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் யஷ் தாக்கூர் போன்ற சாதாரண பந்துவீச்சாளரை அணியில் சேர்ப்பதற்கு பதில் வைபவை செய்திருக்க வேண்டும். யாஷிற்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் பந்துவீச்சிற்கு போதுமானதாக இருப்பார்கள். துலிப் டிராபியில் வைபவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவர் வீரந்திர சேவாக் ஓபரா வெற்றிகரமான பேட்ஸ்மேனாக இருப்பார். அதிவேக ஆட்டக்காரரான சேவாக் கூட டி 20 , டெஸ்ட் என அனைத்திலும் விளையாடி சாதித்துள்ளார். என்று நம்பிக்கை கொடுத்து முகமது கைப் பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
57 ஆண்டுகால வரலாற்று சாதனை தகர்ப்பு: துலீப் டிராபியில் வைபவ் சூர்யவன்சி நிகழ்த்திய இமாலய மேஜிக்!
Kaif vaibhav Suryavanshi
logo
Kalki Online
kalkionline.com