

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் லீக் இன்று துவங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே முதல் போட்டி மாலை 7:30 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் சில நாட்கள் மோதப் போகும் அணிகள் இவைகள்.
Mar 28 → RCB vs SRH
Mar 29 → MI vs KKR
Mar 30 → RR vs CSK
Mar 31 → PBKS vs GT
Apr 1 → LSG vs DC
ஐபிஎல்லில் ரசிகர்கள் கொண்டாடும் சிஎஸ்கே இடம்பெறும் முக்கியப் போட்டிகளின் பட்டியல் இது.
Mar 30 → CSK vs RR
Apr 5 → RCB vs CSK
Apr 12 → MI vs RCB
Apr 23 → MI vs CSK
May 2 → CSK vs MI
May 10 → RCB vs MI
இந்தப் போட்டிகளில் கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனான மகேந்திர சிங் தோனி இந்த 2026 சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாகத் தொடர்ந்து விளையாடுகிறார்.. அவர் தற்போது அணியின் கேப்டனாக இல்லாவிட்டாலும், ஒரு மூத்த வீரராக இருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோனி 2008 முதல் CSK அணியின் சார்பாக அந்த அணியின் தூணாக உள்ளார். IPL-ல் ~5500 ரன்கள் runs மற்றும் 200+ விக்கெட்டுகள் (dismissals ) என சாதனை புரிந்த தோனியின் அதிரடி விளையாட்டை கண்டு களிக்க ஆர்வமுடன் உள்ள ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் செய்தியாக உள்ளது ஒன்று வந்துள்ளது என்னவென்றால் முதல் இரண்டு போட்டிகளில் அவர் விளையாட முடியாது என்பதுதான்.
இந்நிலையில், வரும் 30-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியை சிஎஸ்கே எதிர்கொள்ள உள்ள நிலையில், சிஎஸ்கே நிர்வாகம் தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில்,'CSK வீரர் தோனி காலில் ஏற்பட்டுள்ள தசை பிடிப்பு காரணமாக, முதல் 2 வாரங்களில் விளையாடமாட்டார்' என தெரிவித்துள்ளது. இது சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காரணம் தோனி தனது வயது மற்றும் உடல்நிலை காரணமாக இந்த சீசனுடன் ஓய்வு பெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.
எனினும், தனது உடற்தகுதி (Fitness) சரியாக இருக்கும் வரை விளையாடலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் தோனி, இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் வெற்றிக்குப் பின் தோனி முடிவு செய்யலாம் எனும் நிலையில் இந்த செய்தி ரசிகர்களுக்கு கவலை தருகிறது.
விரைவில் அவரது தசைப்பிடிப்பு விலகி அதிரடியான விளையாட்டைப் பார்க்க விரும்புகின்றனர் லட்சக்கணக்கான அவரது நலம் விரும்பிகள்.