கிரிக்கெட் வரலாற்றின் மர்மமான நிகழ்வுகள்! நீங்கள் அறிந்திடாத 3 அதிசயங்கள்

150 வருட கிரிக்கெட் வரலாற்றில், சில சம்பவங்கள் இன்றும் வியப்பை அளிக்கின்றன. என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்!
Andy Lloyd - Jimmy Matthews - Sid Barnes - Don Bradman
Andy Lloyd - Jimmy Matthews - Sid Barnes - Don BradmanAI Image

1. ஒரே டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஹாட் ட்ரிக் சாதனை:

Jimmy Matthews
Jimmy MatthewsImg Credit: Wikipedia

டெஸ்ட் ஆட்டங்களில் ஹாட்ரிக் சாதனை எப்பொழுதாவது தான் நடைப்பெறும். 150 வருடங்களை நெருங்கும் டெஸ்ட் ஆட்டங்களில் ஒரே ஒரு முறை தான் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஹாட்ரிக் சாதனை ஒரே வீரராலேயே நிகழ்த்தப் பெற்றுள்ளது!

1912 ல் நடைபெற்ற மன்செஸ்டர் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஜிம்மி மாத்யூஸ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் தலா மூன்று விக்கெடுக்கள் எடுத்தார் (இந்த டெஸ்டில் அவர் எடுத்தது மொத்தம் இந்த 6 விக்கெட்டுக்கள் மட்டுமே). ஒவ்வொரு முறையும் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். அதுவும் ஒரே நாளில் (28 மே, 1912) இந்த அரிய நிகழ்வு நடந்தேறியது!

அவரது சாதனை விவரங்கள்:

ஓவர்கள் / மெய்டன்கள் / ரன்கள் / விக்கெட்டுக்கள்

12 / 03 / 16 / 03

08 / 01 / 38 / 03

இவர் வீழ்த்திய வீரர்கள்

முதல் இன்னிங்ஸ்

  • ஆர். பேமோன்ட்

  • எஸ். ஜே பேக்லர்

  • டாமி வார்டு

இரண்டாவது இன்னிங்ஸ்

  • எச் டபுள் யூ டெய்லர்

  • ஆர் ஓ ஸ்கவார்ஸ்

  • டாமி வார்டு

இரண்டு இன்னிங்ஸ்களிலும் மூன்றாவதாக அவுட் ஆனவர் விக்கெட் கீப்பர் டாமி வார்டு.

அதுவும் முதல் பந்தில் அவுட் ஆகி 'King Pair' சாதனை புரிந்தார்.

இந்த டெஸ்டில் மூன்று சதங்களில் இரண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் சார்லாஸ் கீல்லேவே (114 ரன்கள்) வர்றேன் பார்டஸ்லே (121 ரன்கள்) குவித்தனர். மூன்றாவதாக அதிகப் படி ரன்கள் 49 எடுத்தவர் ஜிம்மி மாத்தயூஸ்.

ஒரு இன்னிங்ஸ் 88 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றியை பதிவு செய்தது.

2. ஆட்டத்தை துவக்கி அவுட்டே ஆகாதவர்:

Andy Lloyd
Andy LloydImg Credit: ESPNcricinfo

முதல் தர கிரிக்கெட்டில் 17200 ரன்களுக்கு மேல் எடுத்துள்ள வீரர் ஆண்டி லாயிட்.

தனது அறிமுக டெஸ்டில் இங்கிலாந்து அணி சார்பாக துவக்க வீரராக களம் இறங்கினார்.

இவர் இந்த பர்மிங்ஹாம் டெஸ்டில் மைதானத்தில் விளையாடியது சுமார் 30 நிமிடங்கள். தலையில் ஹெல்மெட் அணிந்து இருந்தார். 10 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் மேற்கு இந்திய தீவுக்கள் அணி வேக பந்து வீச்சாளர் மால்கம் மார்ஷல் பந்தை சரிவர எதிர்கொள்ள முடியாமல், ஹெல்மெட்டில் பட்டு அவரது கண்களுக்கு அருகில் தாக்கியது, காயம் அடைந்த இவரை மருத்துவ மனையில் சேர்த்தனர். ஒரு வாரம் சிகிக்சைப் பெற்றார். அதனால் அந்த அறிமுக டெஸ்டில் இவரால் தொடர்ந்து பங்கு பெறவே முடியவில்லை. ஸ்கோர் கார்டில் ரிடயர்ட் ஹர்ட் (Retired Hurt) என்று பதிவு செய்யப்பட்டது.

ஆண்டி லாயிட் ஒருவர் தான் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆட்டத்தை துவக்கி அவுட்டே ஆகாதவர் என்ற சாதனைக்கு உரியவராக கருதப் படுகின்றார்.

இதற்கு பிறகு இவருக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வாய்ப்பே கிட்டவில்லை.

இந்த அரிய நிகழ்வு மேற்கு இந்திய தீவுக்கள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஆன பர்மிம்ஹாமில் 1984ல் ​​நடைப்பெற்றது. ஒரு இன்னிங்ஸ் 180 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுக்கள் அணி வெற்றியை பதிவு செய்தது இந்த டெஸ்டில்.​​​​​​

இதையும் படியுங்கள்:
அமெரிக்க வீதிக்கு ஏன் 'பீலே' பெயர்? கால்பந்து சக்கரவர்த்தியின் அறியப்படாத வரலாறு!
Andy Lloyd - Jimmy Matthews - Sid Barnes - Don Bradman

3. ஒரே அணியின் இரண்டு வீரர்கள் இரட்டை சதங்கள்:

Sid Barnes - Don Bradman
Sid Barnes - Don BradmanImg Credit: Wikipedia

டெஸ்ட் ஆட்டங்களில் ஒரே அணியின் இரண்டு வீரர்கள் இரட்டை சதங்கள் எடுப்பது என்பது எப்பொழுதாவது தான் நடைப் பெரும்.

இந்த டெஸ்டில் வித்தியாசமான அரிய நிகழ்வு நடைப் பெற்றது.

ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் சிட் பர்ன்ஸ், அணி தலைவர் டான் பிராட்மன் எடுத்த ரன்கள் சமம். அது மட்டும் அல்லாமல் இருவரும் நீண்ட நேரம் சேர்ந்து விளையாடி பார்ட்னர்ஷிப்பிலும் ரன்கள் குவித்து அசத்தினர்.

1946 ல் சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலிய துவக்க வீரர் சிட் பர்ன்ஸ் 667 பந்துக்கள் எதிர் கொண்டு 17 பவுண்டரிகளுடன் எடுத்த ரன்கள் 234.

இவரது கேப்டன் டான் ப்ராட்மன்வுடன் சேர்ந்து எடுத்த ரன்கள் 405.

டான் ப்ராட்மன் 396 பந்துக்களில் 24 பவுண்டரிகளுடன் எடுத்ததும் அதே 234 ரன்கள் தான்.

இதில் அதிசய தக்க விஷயம் என்னவென்றால், இந்த இரண்டு வீரர்களும் அணியின் ஸ்கோர் 564 ரன்கள் இருந்த பொழுது அடுத்து அடுத்து அவுட் ஆனார்கள்.

ஸ்கோர் இப்படி இருந்தது:

564 - 5

564 - 6

முதலில் டான் ப்ராட்மன் விக்கெட்டை எடுத்தவர் இங்கிலாந்து வீரர் யார்டலே. அடுத்து துவக்க வீரர் சிட் பர்ன்ஸ் விக்கெட்டை எடுத்தது இங்கிலாந்து பவுலர் அலெக் பெட்ஸர்.

இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற இந்த இரண்டு வீரர்களின் தலா 234 ரன்கள் பெரிதும் உதவின.

logo
Kalki Online
kalkionline.com