இரண்டு முறை 1000 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே ஒரு அணி - அடேங்கப்பா!

Cricket team
Cricket team
Published on

150  வருடங்களாக விளையாடப்படும் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா அணி இரண்டு முறை 1000 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியுள்ளது.

முதல் முறை:

. டாஸ்மானியா அணிக்கு எதிராக. பிப்ரவரி 1923 மெல்போர்ன் மைதானத்தில்.

. ஒரு இன்னிங்ஸ் 666 ரங்கள் வித்தியாசத்தியில்  வென்ற  விக்டோரியா அணி ஸ்கோர் 1059.

. டாஸ்மானியா ஸ்கோர்  217 & 176

. விக்டோரியா அணி கேப்டன் பில் பான்ஸ்போர்ட் எடுத்த ரன்கள் 429

. விக்கெட் கீப்பர் ஹாம்மி லவ் ரன்கள் 156

. டாஸ்மானிய  5 பவுலர்கள் 100 ரன்களுக்கும் அதிகமாக விட்டு கொடுத்தனர்.

. ஆஷ்லே பேசி 228,  அலன் நியூட்டன் 182 ரன்கள் விட்டு கொடுத்தனர்.

இரண்டாம் முறை:

. 1926 ல் மேலும்  ஒரு முறை விக்டோரியா அணி 1000 ரன்களுக்கு மேல் குவித்தனர்.

. இந்த மேட்சில் விக்டோரியா அணி ஒரு இன்னிங்ஸ் 656 ரன்கள் வித்தியாசத்தில் வென்றனர்.

. விக்டோரியா  அணியின் ஸ்கோர் 1107. நியூ  சவுத்வேல்ஸ்   அணி 221  &  230

. இந்த ஷேஃபீல்ட் ஷீல்ட் ஆட்டம் டிசம்பர், 1926ல் மெல்போர்ன் மைதானத்தில் நடைப் பெற்றது.

இதையும் படியுங்கள்:
அமெரிக்காவில் கடும் பனிப்புயல்… பள்ளிகளுக்கு விடுமுறை!
Cricket team

. விக்டோரியா அணியில் 4  வீரர்கள் சதங்கள் எடுத்தனர்.

. கேப்டன் பில் வுட்புல் 133, பில் பான்ஸ்போர்ட் 352, ஸ்டோர்க் ஹென்ட்ரி 100,  ஜாக்  ரைடர் 295.

. நியூ சவுத்வேல்ஸ் 5 பவுலர்கள் விட்டு கொடுத்த ரன்கள் எண்ணிக்கை சதத்தை கடந்து விட்டது.

. 4  விக்கெட்டுக்கள் எடுத்த பவுலர்  அர்தர் மயிலே கொடுத்த ரன்கள் 362.

. 27 உபரி ரன்களில் (Extras), 2  நோ பால்கள் மட்டும் வீசப்பட்டன.

. முதல் விக்கெட் விழுந்த பொழுது  விக்டோரியா அணியின் ஸ்கோர் 375 - 1

. 5 வது விக்கெட்டின் பொழுது 657.

. மொத்த ஆட்டமும் 4 நாட்களில் முடிவடைந்தது.

இதையும் படியுங்கள்:
திபெத்தில் வலுவான நிலநடுக்கம்... 9 பேர் பலி!
Cricket team

. ஒவ்வொரு ஓவருக்கும் 8 பந்துக்கள் வீசப் பட்டன.

. ப்ளாக்கி  என்ற பவுலர் இந்த ஆட்டம் ஆடிய பொழுது அவருக்கு வயது 44. இவர்  46 வயதிலும் டெஸ்ட் விளையாடியவர்.

. விக்டோரியா அணியில் மோர்ட்டன் மட்டும்தான் ரன்  எதுவும் எடுக்கவில்லை; (0) ரன் அவுட்.  ஆனால் இவர்  100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பில் ரன்கள் குவிக்க உதவினார்!

. விக்டோரியா அணி பவுலர்கள் அர்த்தர் லிட்டி கட் (8) ஆல்பர்ட் ஹார்டகோப்  (7) விக்கெடுக்கள் வீழ்தினார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com