சமீபத்தில், பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.
வேக பந்து பவுலர் ஸ்காட் போலண்ட் நேர்த்தியாக பந்துக்கள் வீசி தனது பங்களிப்பை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
நமது அணியின் அனுபவ பேட்ஸ்மன் விராட் கோலியிடமிருந்து அதிகம் எதிர் பார்க்கப்பட்டது. இந்த அனுபவ வீரர் நின்று ஆடி மற்றவர்களுக்கு நம்பிக்கையும் அளிப்பார்; இவரும் அதிக படியான ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி பெற உதவுவார் என்று பெரிதும் எதிர் பார்க்கப்பட்டது.
இவருடைய ஆட்டங்கள் ஏமாற்றம் மட்டும் அளிக்காமல், 'விராட் கோலிக்கு என்னவாயிற்று?' என்று எண்ண வைத்து இருப்பது வேதனை அளிக்கின்றது.
ஒரு காலத்தில் இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் பொழுது விக்கெட் கீப்பர் தவிர்த்து 4 ஸ்லிப்கள் ஒரு கல்லி ( 4 slips and 1 gully) என்று வீரர்கள் வரிசை கட்டி நிற்பது கண் கொள்ளா காட்சியாக இருக்கும். புது பந்து வேகமாக வீசும் பொழுது அத்தகைய வகை பீல்ட் செட்டிங் தேவையாக இருந்தது.
தற்பொழுதிய ஆடும் முறையில் 2 ஸ்லிப் பீல்டர்களே அதிகம் என்று கருதப் படுகின்றது. இத்தகையை சூழ்நிலையில் விராட் கோலி விளையாடும் பொழுது, அதுவும் வேக பந்து வீசும் பவுலர் ஸ்காட் போலண்ட் அருமையாக பந்து வீசும் சமயத்தில், 4 வது ஸ்லிப் பீல்டர் நிறுத்தி வைத்த நேரத்தில், வீராட் கோலி சுதாரித்துக் கொண்டிருக்க வேண்டும்.
அவர் சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து செயல் பட தவறினார். ரிசல்ட் எதிர் வந்த அவுட் சைட் தி ஆப் ஸ்டம்ப் பந்தை சரிவர விளையாட முடியவில்லை. 4 வது ஸ்லிப் பீல்டர் கேட்ச் பிடித்தார். அவுட் ஆன கோலி பெவிலியனுக்கு திரும்பினார்.
கோலியின் அனுபவம் கை கொடுக்காதது ஆச்சரியபடுத்தியும், வருத்தப்படவும் செய்துள்ளது. கோலி மட்டும் அல்லாமல் இந்திய அணியின் பெரும் பாலான வீரர்கள் அவுட் ஆனதும் அவுட் சைட் தி ஆப் ஸ்டம்ப் மற்றும் வெளியே சென்ற பந்துக்களுக்கு தான் என்பதை சுலபமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இந்திய பவுலர்கள் வீசிய அவ்வகை பந்துக்களை ஆஸ்திரேலிய வீரர்கள் தன்னம்பிக்கையோடு எதிர் கொண்டு, நின்று விளையாடி ரன்களும் குவித்துள்ளனர்.
இந்திய வீரர்களை அலற வைத்த அவுட் சைட் திஆப் ஸ்டம்ப் பந்துக்கள் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற பெரிதும் உதவின என்பதும் மறுக்க முடியாத உண்மை.
எதிர் வரும் ஆட்டங்களில் (குறிப்பாக டெஸ்டுக்களில்) சிறப்பாக ஆட நம் வீரர்கள் தனி பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டியது அத்தியவசியமாகி விட்டது.
இடை விடாமல் அவுட் சைட் தி ஆப் ஸ்டம்ப் மற்றும் வெளியே போகும் பந்துக்களை வீச செய்து எப்படி பந்துக்களை ஆட வேண்டும், விட வேண்டும், தடுக்க வேண்டும் போன்ற அடிப்படை ஆடும் முறைகளை ஆடி பழக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் நம் வீரர்கள்.
அலற வைக்கும் அவுட் சைட் தி ஆப் ஸ்டம்ப் பந்துக்களை எதிர் கொண்டு அவற்றை வெல்வது, தனிப்பட்ட வீரர்கள் மற்றும் நமது ஒட்டு மொத்த அணிக்கும் காலத்தின் கட்டாயமாகி விட்டது என்றால் மிகையாகாது.
முழு ஈடுப்பாட்டுடனும், தன்னம்பிக்கை அதிகரித்துக் கொள்வது மூலமும், இடைவிடாத தேவை மிக்க முயற்சி, பயிற்சி இவைகளின் துணை கொண்டு நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.