ஆடுகளத்தில் இந்திய வீரர்களுடன் பாகிஸ்தான் வீரர்கள் நட்புறவுடன் பழகக் கூடாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் மோயின் கான் அறிவுரை வழங்கியிருக்கிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் 8 அணிகள் மோதவுள்ளன. பாகிஸ்தானில் ராவல்பிண்டி, லாகூர் மற்றும் கராச்சி ஆகிய மூன்று இடங்களில் போட்டிகள் நடத்தப்படும். ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபியின் ஒன்பதாவது தொடர் மொத்தமாக 19 நாட்கள் நடைபெறும். இந்த ஐசிசி சாம்பியன்ஷிப் தொடர் பிப்ரவரி 19ம் தேதி கராச்சியில் தொடங்குகிறது. இறுதிப் போட்டி மார்ச் 9 அன்று நடைபெறும்.
அதன்படி குரூப் ஏ வில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் இடம் பெற்றிருக்கிறது. குரூப் பி யில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பிடித்திருக்கின்றன.
இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடத்தப்படும்.
ஏனெனில், சில மாதங்களாக இந்திய வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாடமாட்டார்கள், ஆகையால் வேறு நாட்டில் நடத்த வேண்டும் என்று ஐசிசியிடம் பிசிசிஐ கோரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் தொடர்ந்து நிராகரித்து வந்தது. இறுதியாக சில விதிகளுடன் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது. அதாவது 2027ம் ஆண்டு வரை பாகிஸ்தானும் இந்தியாவிற்கு வந்து விளையாடாது என்று கூறிவிட்டது. இப்படி ஏற்கனவே சிக்கல் இருந்து முடிவுக்கு வந்தது.
மேலும் இந்திய ஜெர்சி பிரச்னை, இந்திய கேப்டன் போட்டோ எடுக்க பாகிஸ்தான் செல்லாத பிரச்னை என அடுக்கடுக்காக பிரச்சனைகள் வந்தன.
இதனால் இந்தியா, அரசையும், விளையாட்டையும் ஒன்றாக்குகிறது. மேலும் இந்தியா பகைமை பாராட்டுகிறது என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மேலும் இந்தியாவும், பாகிஸ்தானும் பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் உள்ள மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகிறது.
இப்படியான நிலையில், முன்னாள் வீரர் மோயின்கான், "பாகிஸ்தான் வீரர்களின் செயல் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கிறது. தற்போது எல்லாம் இந்தியா பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை பார்த்தால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு இந்திய வீரர் களத்திற்கு வந்தவுடன் பாகிஸ்தான் வீரர்கள் ஓடிப்போய் அவருடைய பேட்டை வாங்கி செக் செய்கிறார்கள் மற்றும் அவர்களுடன் நட்புடன் நடந்து கொள்கிறார்கள்.
நாங்கள் விளையாடும் களத்தில் இந்திய வீரர்களுடன் நட்புணர்வுடன் இருக்க மாட்டோம். எங்கள் சீனியர்கள் இதை அனுமதிக்க மாட்டார்கள். நீங்கள் நட்புணர்வுடன் பார்த்தால், அதை உங்கள் பலவீனமாக இந்திய வீரர்கள் பார்ப்பார்கள். இந்தப் பழக்கத்தால் போராட்ட குணம் குறைபட்டு விடும். இதனால் அழுத்தம்தான் ஏற்படும்.” என்று பேசினார்.