சாம்பியனை உருவாக்கிய தாய்: பங்கஜ் அத்வானியின் அம்மா காஜல் கூறும் வளர்ப்பு ரகசியங்கள்!

வெற்றி கோப்பைகளை விட மன அமைதியும் பணிவுமே முக்கியம் என உணர்த்தும் ஒரு தாயின் கதை.
குழந்தை வளர்ப்பு - Pankaj Advani Mother
குழந்தை வளர்ப்பு - Pankaj Advani Mother
கோவீ.ராஜேந்திரன்

வணக்கம், அடிப்படையில் நான் ஓர் ஆட்டோமொபைல் இன்ஜினியர், ரிலாக்சேஷனுக்காக பத்திரிகைகளில் ஆரம்பத்தில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் வரும் முன்னணி பத்திரிகைகளில் என்னுடைய கட்டுரைகள் 500க்கும் மேற்பட்டவைகள் வந்துள்ளது. பொது அறிவு சம்பந்தமாக இது வரை 12 புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்கி ஆன்லைன் பத்திரிகை குழு நிர்வாகம் மற்றும் அதன் ஆசிரியர் குழு அன்பாலும், ஆதரவாலும் இது வரை 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன் என்பதை நன்றியடன் தெரிவித்துக் கொள்கிறேன். வித்தியாமான தகவல்கள் அடங்கிய படைப்புகள் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

Updated on: 

பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் ஆகிய இரண்டின் அனைத்து வடிவங்களிலும் உலகப் பட்டங்களை வென்ற உலகின் ஒரே வீரர் , பங்கஜ் அத்வானி (Pankaj Advani) பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கரில் அதிக எண்ணிக்கையிலான IBSF உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை அவர் பெற்றுள்ளார்.

2021-ல் கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஸ்னூக்கர் உலகக் கோப்பையை வென்று, பங்கஜ் அத்வானி தனது 24-வது உலகப் பட்டத்தைக் கைப்பற்றியபோது, தனது வெற்றியைத் தனது "வழிகாட்டி ஒளியான" தாய் காஜலுக்கு அர்ப்பணித்தார். மேலும், தனது மன வலிமையையும் மன உறுதியையும் அவரிடமிருந்து பெற்றதாகவும் கூறினார்.

குழந்தை வளர்ப்பு:

ஆனால், பெங்களூரில் வசிக்கும் அவரின் 73 வயதான தனித்தாய் காஜல் அத்வானி, இதில் எந்தப் பெருமையையும் விரும்பவில்லை. பங்கஜ் அத்வானியின் தாய் என்று அறியப்படுவதில் அவர் பெருமைப்படுகிறார். "எங்கள் சொந்த சாதனைகளைவிட, எங்கள் குழந்தைகளின் சாதனைகளே எங்களுக்கு எப்போதும் மிகவும் விலைமதிப்பற்றவை. குறிப்பாக, அவன் நாட்டிற்காக விளையாடி இந்தியாவைப் பெருமைப்படுத்துவதால், அது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது," என்கிறார் அவர்.

1992-ல், கண்டறியப்படாத நோயால் தன் கணவர் இறந்த பிறகு, காஜல் தன் மகன்களைத் தனியாக வளர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அப்போது பங்கஜுக்கு ஆறு வயதுதான். குவைத், மும்பை மற்றும் ஹாங்காங்கில் பணியாற்றி, காஜல் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்கியிருந்தார். அவர் வேலை செய்வதை விரும்பினார்.

ஆனாலும், தன் பிள்ளைகளுக்குத் தாயாகவும் தந்தையாகவும் ஆக வேண்டிய கட்டாயத்தை வாழ்க்கை அவருக்கு ஏற்படுத்திய போது, அவர் அதை ஏற்றுக்கொண்டார். அவர் தன் வேலையை விட்டுவிட்டு, பெங்களூருக்குக் குடிபெயர்ந்து, நிதி நிச்சயமற்ற தன்மையைச் சமாளித்தார். ஆனாலும், லட்சியத்தைவிட எளிமையை அடிப்படையாகக் கொண்ட ஒரு வீட்டை அவரால் உருவாக்க முடிந்தது.

“அவர்கள் தவறான பாதையில் சென்றுவிடக் கூடாது என்பதற்காக நான் வீட்டிலேயே இருந்தேன். பையன்களும், பெண்களும்கூட, எளிதில் கவனம் சிதறக்கூடியவர்கள். நான் அவர்களுடன் இருக்க விரும்பினேன்,” என்கிறார் அவர்.

தனித்தாய் காஜல் அத்வானி, தன் மகன்களுக்குப் பதக்கங்களுக்கோ அல்லது மதிப்பெண்களுக்கோ அழுத்தம் கொடுக்கவில்லை; அவர்களைத் தங்கள் மனதிற்குப் பிடித்ததைச் செய்ய அனுமதித்தார். எழுபது வயதைக் கடந்த அவர், ஒரு பிரபல பத்திரிகைக்குத் தனது கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு, ஒரு ஜாம்பவானை உருவாக்குவதற்கான தனது தாரக மந்திரத்தையும் கூறியுள்ளார் அவற்றில் சில...

குழந்தை வளர்ப்பு - Pankaj Advani Mother
குழந்தை வளர்ப்பு - Pankaj Advani Mother

மனப் பயிற்சி தேவைப்படுவது குழந்தைகளுக்கு அல்ல. பெற்றோர்களுக்குத்தான். அது ”இன்றைய பெற்றோர்கள் பெரும் கவலையைச் சுமக்கிறார்கள். மேலும் அதை அறியாமலேயே தங்கள் குழந்தைகளுக்கும் கடத்துகிறார்கள் ".

“இப்போது அதிக அழுத்தம் இருக்கிறது. அது கல்வியாக இருந்தாலும் சரி, விளையாட்டாக இருந்தாலும் சரி, குழந்தைகள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”"ஒரு உலக சாம்பியனை உருவாக்க வேண்டும் என்ற பெரிய திட்டம் எதுவும் தனக்கு இருந்ததில்லை. தனக்குப் பிடித்ததைச் செய்யும் ஒரு குழந்தையை நான் வெறுமனே பார்த்தேன் அவ்வளவு தான்" என்கிறார்.

தொடர்ச்சியான எதிர்பார்ப்பை விடப் பாராட்டு குழந்தைகளை அதிகம் ஊக்குவிக்கும். ஒப்பீடு செய்வதற்கும் இதுவே பொருந்தும், ஒப்பீடு “வாழ்க்கையின் மிக மோசமான விஷயம்” என்று குறிப்பிடுகிறார்.

“நான் எப்போதும் என் மகன்களிடம் சொல்வது: ‘கடவுள் உங்களுக்குக் கொடுத்ததற்கு நன்றியுடன் இருங்கள். பணிவுடன் இருங்கள். உங்களுக்கு உண்மையாகவும், உங்கள் விளையாட்டுக்கு உண்மையாகவும், உங்கள் பாதைக்கு உண்மையாகவும் இருங்கள். பணமும் புகழும் எல்லாம் அல்ல. உங்களிடம் எல்லாம் இருந்து மன அமைதி இல்லையென்றால், உங்களிடம் எதுவும் இல்லை’,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

இன்றைய குழந்தைகளுக்கு அழுத்தத்திலிருந்து விடுதலை தேவை. அதைத்தான் அவர்கள் உண்மையில் விரும்புகிறார்கள். குழந்தைப் பருவம் ஒரு நீண்ட போட்டியாக மாறிவிட்டது. சில நேரங்களில், பழைய பாணி பெற்றோர்களான நாங்கள் செய்தது சரி என்று எனக்குத் தோன்றுகிறது. நாங்கள் குழந்தைகள் மீது அதிக அழுத்தம் கொடுக்கவில்லை, அவர்களும் நன்றாகவே வளர்ந்தார்கள்.”

இதையும் படியுங்கள்:
அண்ணன் - தம்பி இடையே சண்டையா? 'விட்டுக்கொடு' எனச் சொல்லாதீர்கள்... இதோ சிறந்த தீர்வு!
குழந்தை வளர்ப்பு - Pankaj Advani Mother

குழந்தைகள், தங்கள் பெற்றோரின் பேச்சைக் கேட்பதை விட, அவர்களைப் பார்ப்பதன் மூலமே அதிகம் கற்றுக்கொள்கிறார்கள் ."நான் எப்போதும் கோபமாகச் சுற்றித் திரிந்திருந்தாலோ அல்லது பகட்டான வாழ்க்கை வாழ்ந்திருந்தாலோ, அவர்களும் அதைப் பின்பற்றியிருப்பார்கள்."

தான் ஒரு உலக சாம்பியனை வளர்த்ததாக காஜல் அத்வானி நம்பவில்லை. அவர் இரண்டு நல்ல மனிதர்களை வளர்த்ததாகவும், அவர்களில் ஒருவர் தற்செயலாக உலக சாம்பியனாக ஆனதாகவும் நம்புகிறார்.

"வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் சகஜமான ஒன்று. தோல்வியில் கலங்கி நின்று விடக்கூடாது அதேபோல் நீங்கள் அமைதியாக வெற்றியை அனுபவித்துவிட்டு, அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டும், ஏனென்றால் அடுத்த போட்டி எப்போதும் அருகிலேயே இருக்கிறது," என்று அவர் கூறுகிறார்.

இன்றும் கூட, தன்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்வது கோப்பைகள் அல்ல . "தன் குழந்தைகள் மிகவும் பணிவான மற்றும் எளிமையான மனிதராக இருப்பதுதான். பதக்கங்களைவிட, அவர்கள் விரும்பியதைச் செய்து மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்ப்பதுதான் வெற்றி." என்று காஜல் கூறுகிறார்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் "ஏன், எப்படி" என அடிக்கடி கேள்வி கேட்கிறார்களா? இதைக் கண்டிப்பாக படிங்க!
குழந்தை வளர்ப்பு - Pankaj Advani Mother
logo
Kalki Online
kalkionline.com