விளையாட்டு என்பதற்கு வயது வரம்பே இல்லை. எந்தெந்த விளையாட்டு விளையாட நம் உடம்பு ஒத்துழைக்கிறதோ அந்த விளையாட்டுகளை நாம் மகிழ்ச்சியாக விளையாடலாம். இந்தியாவில் நடைபெறும் சில விளையாட்டு லீக்குகளுக்கு(Sports leagues) என பல பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இதைப் பார்க்கும் சிலர் அதில் நாமும் பங்கேற்று சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அதற்கான அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மற்றும் தேவையான பின்னணி இருக்காது. அப்படிப்பட்டவர்கள் இந்த லீக்குகளில் விளையாட முடியுமா? அதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்பதை தெரிந்துகொள்வோம்.
பிரீமியர் விளையாட்டு லீகுக்கள்(Premier sports leagues)
இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சில முதன்மை விளையாட்டு லீக்குகளில் கிரிக்கெட்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL), கால்பந்திற்கான இந்தியன் சூப்பர் லீக் (ISL), புரோ கபடி லீக் (PKL), அல்டிமேட் டேபிள் டென்னிஸ்(Ultimate Table Tennis) லீக் மற்றும் பிரீமியர் பேட்மிண்டன் லீக் (Premier Badminton League) ஆகியவை இருக்கின்றன. இந்த லீக்குகள் உலகெங்கிலும் உள்ள சிறந்த திறமைகளை ஒன்று சேர்த்து, பார்வையாளர்கள் விரும்பும் ஒரு அனல்பறக்கும் போட்டா போட்டியைக் கொடுக்கின்றன.
திறமைக்கு கொடுக்கும் முக்கியத்துவம்
ISL அல்லது PKL போன்ற லீக்குகள் கண்ணில் படாத திறமைகளை(undiscovered talent), அடையாளம் காண திறந்த சோதனைகள்(open trials), திறமையை வெளிக்கொண்டுவரும் நிகழ்வுகளை(talent scouting events) ஏற்பாடு செய்கின்றன. இத்தகைய நிகழ்வுகள் திறமை, உறுதிப்பாடு(determination) மற்றும் வீரர்களின் செயல்திறனை வைத்து தேர்வு செய்கின்றன.
முன் அனுபவம் மற்றும் திறமை
சில லீக்குகளில் நுழைவதற்கான குறைந்தபட்ச தகுதிகள் விளையாட்டைப் பொறுத்து மாறுபடும். கிரிக்கெட்டுக்காக, ஐபிஎல் உரிமையாளர்கள் சையத் முஷ்டாக் அலி டிராபி(Syed Mushtaq Ali Trophy) அல்லது மாநில அளவிலான அணிகள்(state-level teams) போன்ற போட்டிகள் மூலம் இளம் திறமைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். கால்பந்திற்கு, உள்ளூர் அணிகளில் சேர்ந்து விளையாடுபவர்களை இளைஞர் அகாடமி என்ற பெயரில் (youth academies) ISL உரிமையாளர்கள் நடத்தி, அதன் மூலம் வீரர்களைத் தேர்வு செய்கின்றனர்.
அதேபோல், கபடி வீரர்களும் மாநில மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் மூலம் புரோ கபடி லீக்கில்(PKL) ஒரு பின்னணியோடு வருகிறார்கள். எனவே, சில நேரங்களில் பேரார்வத்தை(Passion) வைத்து மட்டும் சில போட்டிகளில் விளையாட விரும்புவது கொஞ்சம் சவாலானது.
ஆனால், முற்றிலும் சாத்தியமற்றது அல்ல. நம் திறனை வெளிப்படுத்தவும், சம்பந்தப்பட்டவர்களின் கவனத்தை ஈர்க்கவும், சில அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை திறன்களை வளர்த்துக்கொண்டு உள்ளூர் அளவிலான போட்டிகளில் பங்கேற்பதும் மிகவும் தேவையான ஒன்று.
எந்த ஒரு விஷயத்திற்கும் பேரார்வம்(Passion) ஒரு சக்திவாய்ந்த உந்து சக்தியாகும். ஆனால், இந்த வகையான பிரீமியர் லீக்குகளுக்கு அதில் பங்கேற்கும் வீரர்கள் அவர்களின் திறமையை முன்கூட்டியே பறைசாற்ற வேண்டும். அவர்கள் ஏற்கனவே கற்ற திறன், அதன் மூலம் கற்றுக்கொண்ட விளையாட்டின் அனுபவம்தான் ஒரு லீக்கில் நுழைவதற்கு அடிப்படையான ஒன்று.
எனவே, ஒருவருக்கு முறையான பின்னணி இல்லை என்றால் அவர்கள் உள்ளூர் போட்டிகள், பயிற்சி திட்டங்கள்(Authorized own practice) மற்றும் திறந்த சோதனைகளில்(Open ground selection) பங்கேற்று அனுபவத்தைப் பெறலாம். நாம் கொடுக்கும் அர்ப்பணிப்பு, தொடரும் நிலையான பயிற்சிகள் மூலம் நமக்கான வாய்ப்புகளை உருவாக்கி இத்தகைய பிரீமியர் போட்டி லீக்குகளில் நுழைய அனைவரின் கவனத்தையும் ஈர்க்கலாம்.