ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார்?பெங்களூரு - பஞ்சாப் இன்று இறுதி பலப்பரீட்சை!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் தங்களின் முதல் கோப்பைக்காக பெங்களூரு- பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Bengaluru vs Punjab
Bengaluru vs Punjabimg credit - www.ipl.com
Published on

2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), உலகின் முதன்மையான டி20 கிரிக்கெட் போட்டியாகும். இந்தியாவில் நடைபெறும் 10 அணிகள் இடையிலான உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். 18-வது சீசன் கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கி பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது. 10 அணிகள் இடையே நடந்த இந்த போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் வெளியேறிய நிலையில் 2 அணிகள் இன்று இறுதிசுற்றுக்கு நுழைய உள்ளன. நடுவில் இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக சில போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டன. அதாவது 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் ‘பிளே-ஆப்’ சுற்று முடிவில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டத்தில் இன்று ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்த இரு அணிகளும் மல்லுக்கட்டுகின்றன.

இரு அணிகளுமே சம பலத்துடன் இருப்பதாலும் கோப்பையை வெல்ல இரு அணிகள் வெறிகொண்டு மோதும் என்பதாலும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது.

அறிமுக சீசனில் இருந்து தொடர்ந்து 18-வது ஆண்டாக பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர விராட் கோலி இந்த முறையாவது கோப்பையை கையில் ஏந்தி தனது நீண்ட கால ஏக்கத்தை தணிப்பதோடு, அணியின் நெடுங்கால கோப்பை வறட்சிக்கு வடிகால் அமைப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத 3 தனிநபர் சாதனைகள்!
Bengaluru vs Punjab

அதேபோல் பஞ்சாப் அணி பெங்களூருவுடன் சமநிலை வகித்தாலும், ரன்-ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்று முதலிடத்தை பிடித்தது. கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான ஸ்ரேயாஸ் அய்யர் இந்த முறை தனது நேர்த்தியான திட்டமிடுதல் மற்றும் அணுகுமுறையால் பஞ்சாப் அணியை கோப்பையின் பக்கம் வரை அழைத்து சென்று விட்டார். அவர் இன்னும் ஒரு தடையை வெற்றிகரமாக கடந்தால் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளுக்கு கோப்பையை வென்று கொடுத்த முதல் கேப்டன் என்ற மகத்தான பெருமையை பெறுவார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை மோதி இருக்கின்றன. முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், அடுத்த 2 ஆட்டங்களில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஏறக்குறைய சரிசம பலத்துடன் முதல்முறையாக கோப்பையை முத்தமிட இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

போட்டிக்கான பரிசுத் தொகை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.20 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.12½ கோடியும் பரிசாக வழங்கப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில் இன்று இறுதிப்போட்டி நடைபெற உள்ள நிலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று AccuWeather தெரிவித்துள்ளது. அப்படி மழை பெய்தால் நடுவர்கள் சில முடிவுகளை எடுக்க நேரிடும். அதாவது சிறிய அளவில் மழை பெய்தால் பிரச்சனையாக இருக்காது. ஏனெனில் இழந்த நேரத்தை ஈடுசெய்ய ஆட்டத்தில் கூடுதலாக 120 நிமிடங்கள் சேர்ப்பார்கள். அதுவே மழை அதிகமாக இருந்து இன்று விளையாட முடியாவிட்டால், போட்டியை முடிக்க மாற்று நாள் திட்டமிடப்படும்.

இதையும் படியுங்கள்:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களைக் குவித்த தொடக்க வீரர் அல்லாத டாப் 4 வீரர்கள்!
Bengaluru vs Punjab

போட்டியை திட்டமிடப்பட்ட நாளிலோ அல்லது ரிசர்வ் நாளிலோ கூட விளையாட முடியாவிட்டால், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணி சாம்பியன்களாக அறிவிக்கப்படும். அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் 14 போட்டிகளில் ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்று லீக் நிலையை முதலிடத்தில் முடித்தது. எனவே, இரண்டு நாட்களிலும் மழை ஆட்டத்தை நிறுத்தினால், ஷ்ரேயாஸ் ஐயரின் அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்று கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com