இன்ஸ்டாகிராமில் சிஎஸ்கேவை வீழ்த்திய ஆர்சிபி: 10 அணிகளின் முழுபட்டியல்

இன்ஸ்டாகிராமில் அதிகம்பேர் பின்தொடர்பவர்களில் சிஎஸ்கே-வை பின்னுக்கு தள்ளி, ஆர்சிபி முதலிடம் பிடித்துள்ளது.
MS Dhoni, Virat Kohli
MS Dhoni, Virat Kohli img credit - indiatoday.in
Published on

ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டிக்கு உள்ள வரவேற்பு தனிதான். 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ம் தேதி கொல்கத்தா ஈடன்கார்டனில் கோலாகலமாக தொடங்கி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அத்துடன் மே 25-ம் தேதி இறுதிப்போட்டி இதே மைதானத்தில் அரங்கேறுகிறது.

வழக்கம் போல் 10 அணிகள் களம் காணுகின்றன. ஒவ்வொரு அணி நிர்வாகமும் தேவையில்லாத வீரர்களை கழற்றி விட்டும், வியூகத்துக்கு ஏற்ப புதிய வீரர்களை ஏலத்தில் கண்டெடுத்தும் பட்டை தீட்டியுள்ளன. இந்த சீசனில் மொத்தம் 65 நாட்கள் 13 நகரங்களில் 74 ஆட்டங்கள் நடக்கின்றன.

இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே, பெங்களூரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 21-ல் சென்னையும், 11-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை. அதேபோல் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பெங்களூரு அணி இதுவரை சிஎஸ்கேக்கு எதிராக 9 ஆட்டங்களில் விளையாடி அதில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 8-ல் தோல்வியை தழுவியது. அந்த ஒரு வெற்றியும் 2008-ம் ஆண்டு தொடக்க சீசனில் கிடைத்தது.

அதன் பிறகு கடந்த 17 ஆண்டுகளில் ஒரு முறை கூட சென்னை அணியை பெங்களூரு அதன் சொந்த மண்ணில் தோற்கடித்ததில்லை. கடந்த சீசனில் சென்னை அணி பெங்களூருவில் நடந்த லீக்கில் 27 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சிடம் தோற்றதால் தான் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பை பறிகொடுத்தது. இந்நிலையில் 28-ம்தேதி நடந்த போட்டியில் பெங்களூரு அணி சிஎஸ்கே-ஐ வீழ்த்தி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பெங்களூரு அணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2008-ம் ஆண்டுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்சை தோற்கடித்ததில்லை என்ற 17 ஆண்டுகால ஏக்கத்தை ஒரு வழியாக தணித்துக் கொண்டது.

இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிபட்டியலில் பெங்களூரு அணி முதல் இடத்தில் உள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அணிகள் போட்டிகள் தங்களது அணிகள் தொடர்பான செய்திகள், படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன. இந்த அணிகளின் வலைதளப்பக்கங்களை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அண்மையில் படைத்தது.

அந்த சமயத்தில் சிஎஸ்கேவுக்கு அடுத்தபடியாக ஆர்சிபி அணி (16.3 மில்லியன்) இரண்டாவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி (15.4 மில்லியன்) மூன்றாவது இடத்திலும் இருந்தன. இந்நிலையில், மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே அடுத்ததாக பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலமாக பெங்களூரு அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது மட்டுமில்லாமல் சிஎஸ்கேவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்தது சாதனை படைத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
தோனி சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்!
MS Dhoni, Virat Kohli

தற்போது பெங்களூரு அணி மொத்தம் 17.8 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் சென்னை அணி 17.7 மில்லியனுடன் சற்று பின்தங்கியுள்ளது. ஐபிஎல் சீசன் தொடங்கியதிலிருந்து, சிஎஸ்கேவுடன் ஒப்பிடும்போது ஆர்சிபி சிறப்பாக விளையாடி வருகிறது. இப்போது அவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்கிலும் இதுவே தெரிகிறது.

இந்த 2008-ம் ஆண்டு வெற்றி பெற்ற போது ஆர்சிபி அணியில் இருந்த ஒரே ஒரு வீரரான விராட் கோலியின் முகத்தில் இருந்த பரந்த புன்னகையிலிருந்து வெற்றியின் மதிப்பை அளவிட முடியும்.

அதே சமயம் எக்ஸ் பக்கத்தில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த ஒரே அணி என்ற சாதனையை சிஎஸ்கே தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

10 அணிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் முழு பட்டியல் :

1. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 17.8 மில்லியன் பின்தொடர்பவர்கள்

2. சென்னை சூப்பர் கிங்ஸ் - 17.7 மில்லியன்

3. மும்பை இந்தியன்ஸ் - 16.2 மில்லியன்

4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 7 மில்லியன்

5. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 5.1 மில்லியன்

6. ராஜஸ்தான் ராயல்ஸ் - 4.7 மில்லியன்

7. குஜராத் டைட்டன்ஸ் - 4.5 மில்லியன்

8. டெல்லி தலைநகரங்கள் - 4.3 மில்லியன்

9. பஞ்சாப் கிங்ஸ் - 3.7 மில்லியன்

10. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 3.5 மில்லியன்

இதையும் படியுங்கள்:
வெற்றி தோல்வி எல்லாம் சகஜம்: நட்பு தான் பெருசு - விராட் கோலி!
MS Dhoni, Virat Kohli

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com