

2026 ஆம் ஆண்டிற்கான ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கத்தாரில் நடைபெற உள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் , ஐக்கிய அரபு அமீரகம், நேபாள், இலங்கை , ஹாங்காங் உள்ளிட்ட நாடுகள் கலந்து கொள்ள உள்ளது. நவம்பர் 19ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெறுகிறது.
பிசிசிஐ அறிவித்துள்ள ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய ஏ அணியில் வைபவ் சூரியவன்ஷி இடம்பெற்றுள்ளார். இந்த தொடருக்கான இந்திய ஏ அணியில் அபிஷேக் சர்மா, வைபவ் சூரியவன்ஷி, ரிங்கு சிங், சூரியான்ஷ் ஷெட்ஜ், திலக் வர்மா , ஷாபாஸ் அகமது, விப்ராஜ் நிகாம், ஹர்ஷ் துபே,ரஜத் படிதார், தனுஷ் கோட்டியான், ஹர்ஷித் ராணா, பிரின்ஸ் யாதவ், அர்ஷத் கான் ,விக்கெட் கீப்பர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் குமார் குஷாக்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த அணிக்கு கேப்டனாக திலக் வர்மா பொறுப்பேற்றுள்ளார் , துணைக் கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். திலக் வர்மா கேப்டன் பொறுப்பேற்று இலங்கை தொடரில் ஏற்கனவே வெற்றி பெற்று சாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கான அட்டவணை:
நவம்பர் 19 அன்று காலை 9 மணிக்கு தொடங்கும் முதல் நாள் லீக் போட்டியில் , ஹாங்காங் மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. அன்று பிற்பகல் 1:00 மணிக்கு தொடங்கும் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
நவம்பர் 20 அன்று காலை 9 மணிக்கு தொடங்கும் லீக் போட்டியில் , ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அன்று பிற்பகல் 1:00 மணிக்கு தொடங்கும் போட்டியில் இந்தியாமற்றும் நேபாள் அணிகள் மோதுகின்றன.
நவம்பர் 21 அன்று காலை 9 மணிக்கு தொடங்கும் லீக் போட்டியில் , ஹாங்காங் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. அன்று பிற்பகல் 1:00 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.
நவம்பர் 22 அன்று காலை 9 மணிக்கு தொடங்கும் லீக் போட்டியில் , ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நேபாள் அணிகள் மோதுகின்றன. அன்று பிற்பகல் 1:00 மணிக்கு தொடங்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
நவம்பர் 23 அன்று காலை 9 மணிக்கு தொடங்கும் லீக் போட்டியில் , ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. அன்று பிற்பகல் 1:00 மணிக்கு தொடங்கும் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.
நவம்பர் 24 அன்று காலை 9 மணிக்கு தொடங்கும் லீக் போட்டியில் , இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன. அன்று பிற்பகல் 1:00 மணிக்கு தொடங்கும் போட்டியில் நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறும். நவம்பர் 26 அன்று மதியம் 1 மணியளவில் முதல் அரையிறுதிப் போட்டியும் , நவம்பர் 27 அன்று மதியம் 1 மணிக்கு இரண்டாவது அரையிறுதிப் போட்டியும் நடைபெற உள்ளது. அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் நேரடியாக இறுதிப் போட்டியில் களமிறங்கும். இறுதிப் போட்டி நவம்பர் 29 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு நடைபெறுகிறது.