

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக பேசி இருந்தது, தேசிய அளவில் கவனம் பெற்றது. முன்னாள் சகவீரருக்கு ஆதரவாக அவர் பேசிய கருத்துகள், இக்கட்டான நேரத்தில் ஒரு வீரருக்கு தேவைப்படும் ஆறுதலான கருத்துக்களாகவும் இருக்கின்றன. அதே இன்னொரு முன்னாள் கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்கும் ரோஹித்திற்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இங்கிலாந்து தொடரின் முதல் இரண்டு போட்டிக்கு பிறகு ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்த வதந்திகளை உறுதி செய்யும் விதமாக அவரது பெற்றோர்கள் இங்கிலாந்துக்கு வருகை தந்தது மேலும் அதிக பரபரப்பை தூண்டியது. ஆனால் , இறுதிப் போட்டியில் நிதானமாக தொடங்கிய ரோஹித்தின் ஆட்டம் சிறிது சிறிதாக வேகம் எடுத்து லார்ட்ஸ் மைதானத்தில், ஒரு இந்தியர் முதன்முதலாக சதம் அடிக்கும் வாய்ப்பையும் பெற்று தந்தது.
முகமது கைஃப் இது குறித்து " ரோஹித் ஓய்வு பெற்றுவிட்டாரா? இப்போதும் அவமானமாக இருக்கிறதா? அவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் , அதற்கான உரிமையை அவர் பெற்றுள்ளார். நாட்டிற்காக அவர் எவ்வளவோ செய்துள்ளார்.அதனால், சொந்த முடிவை எடுக்கும் தகுதியையும் அவர் பெற்றுள்ளார். நாட்டின் சிறந்த வெள்ளை பந்து பேட்ஸ்மேன்களில் அவரும் ஒருவர். அவரது கேப்டன்ஷிப் காலத்தில் அணியை ஒருபோதும் தோற்கடிக்க விட்டதில்லை. அவரை முடக்குவதற்காக அத்தனை அழுத்தங்கள் கொடுத்த பின்னரும் கூட லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்துள்ளார்" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
முகமது கைஃப் மேலும் கூறுகையில் "ஊடகங்களுக்கு முன்னால், உலகக் கோப்பைக்கு ரோஹித் இந்திய அணிக்கு தேவை என்று, சுப்மன் கில் கூறினால், பிசிசிஐயிடமும் ரோஹித்தை நோக்கி இனி யாரும் விரலை நீட்ட வேண்டாம். அவர் விரும்பும் வரையில் விளையாட அனுமதிக்கிறோம் என்று கூறினால் , ரோகித் இன்னும் தனது திறமையை சுதந்திரமாக விளையாடி வெளிப்படுத்துவார்.
யோசித்துப் பாருங்கள், "தற்போது அவர் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது, அவருடன் யாரும் நிற்கவில்லை அவர் தோல்வியடைந்து வெளியேற வேண்டும் என்று மக்கள் விரும்புவது போல தெரிகிறது. இந்த சூழலில் தான் அவர் சதம் அடித்து தன்னை வெளிப்படுத்தியுள்ளார். முழு அணியும் நிர்வாகமும் தனக்கு ஆதரவாக நிற்பதை அவர் உணர்ந்தால், அவரால் எட்ட முடியாத சிகரம் இல்லை. அணிக்காக தனது உயிரையும் கூட தியாகம் செய்யக்கூடிய ஒரு வீரர் ரோகித் சர்மா, அவரை நிம்மதியாக விளையாட விடுங்கள் " என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ரோஹித் மற்றும் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். "ரோஹித்தும் விராட்டும் தற்போது எந்த நிலையில் இருக்கிறார்களோ? அதே நிலையில் நானும் இருந்துள்ளேன். அதனால் , அவர்கள் விளையாட வேண்டுமா? இல்லையா? என்பதை நாம் தீர்மானிக்க கூடாது. அதைத் தீர்மானம் செய்வது அணி நிர்வாகம், பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வு குழுவினர் தான்.
அவர்கள் உலகக் கோப்பையில் விளையாட நீங்கள் விரும்பினால் , நீங்கள் அவர்களின் தோளில் கைவைத்து ,நண்பர்களே! நீங்கள் உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் உங்களுக்கு முழு ஆதரவு கொடுக்கிறோம் நீங்கள் களத்திற்கு சென்று இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்று கூறவேண்டும். பயிற்சியாளர், கேப்டன் அல்லது தேர்வுக்குழு ஆகியோரிடம் அந்த தெளிவு இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.