

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மைதானத்தில் இன்று நடைபெறும் 52-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ராஜஸ்தான் அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறது.
குஜராத் அணியும் 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.
7-வது வெற்றியை குறிவைத்து இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
இதில் 6 ஆட்டங்களில் குஜராத் அணியும், 3 ஆட்டங்களில் ராஜஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்களை குவித்தது.
அதனை தொடர்ந்து 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய ராஜஸ்தான் அணியால் குஜராத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 77 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதன் மூலம் குஜராத் அணி 7-வது வெற்றியை பதிவு செய்ததுடன் புள்ளிப்பட்டியலில் முன்னினேறியது.