சிங்கிள்ஸ் எடுப்பது ரொம்ப முக்கியம்! ஏன் தெரியுமா?

Running Between the Wicket
Singles
Published on

கிரிக்கெட் வரலாற்றில் அந்தந்த காலகட்டத்தில் சர்வதேச அளவில் ஒருசில வீரர்கள் சிறந்து விளங்கினார்கள். விவியன் ரிச்சர்ட்ஸ், டான் பிராட்மேன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் என ஆல் டைம் பெஸ்ட் கிரிக்கெட்டர்களின் இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவர்கள் அனைவரும் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை மட்டுமே நம்பி கிரிக்கெட்டை விளையாடவில்லை. சிங்கிள்ஸ் எடுத்து ஸ்டிரைக்கை மாற்றுவதில் கூட இவர்கள் திறன் மிக்கவர்களாக இருந்தனர். தற்போதைய நவீன கால கிரிக்கெட்டிலும் ஒருசில வீரர்கள் திறன் மிகுந்து காணப்படுகின்றனர். இருப்பினும் சிங்கிள்ஸ் எவ்வளவு முக்கியம் என்பதை ஒருசில வீரர்கள் இன்னும் உணரவில்லை.‌

கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடுவதற்கு ஒவ்வொரு வீரரும் உடல்தகுதியை சீராக பராமரிக்க வேண்டியது அவசியமாகும். இந்த விஷயத்தில் மிகவும் கைதேர்ந்தவர் விராட் கோலி. சிங்கிள்ஸ் எடுத்து ஓடுவதில் கூட ஃபிட்னஸ் வெளிப்படும். கிரிக்கெட்டில் ஒவ்வொரு ரன்னும் முக்கியம். ஏனெனில் ஒரு ரன்னில் போட்டியை இழந்த அணிகள் இங்கு ஏராளம்.

ஒரு வீரர் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடிப்பது மட்டும் போதாது. தேவையான நேரங்களில் ஒன்று, இரண்டு என வேகமாக ஓடியும் ரன்களை எடுக்க வேண்டும். இதற்கு ஃபிட்னஸ் மிகவும் முக்கியம். இதைத் தொடர்ந்து செய்வதால் தான் இன்றும் விராட் கோலி வேகமாக ரன்களை எடுக்கிறார். சமீபத்தில் இவர் அடித்த மொத்த ரன்களில் கிட்டத்தட்ட 70 முதல் 75% ரன்களை ஓடியே எடுத்துள்ளார். இதுதவிர எதிரில் நிற்கும் பேட்ஸ்மேன் ரன் அடிக்கும் போதும் ஓடுகிறார்.

ஓர் அணி மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்கவும், அடையவும் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் மட்டும் போதாது. ஏனெனில் அனைத்துப் பந்துகளையும் ஒரு வீரரால் சிக்ஸருக்கு விளாச முடியாது அல்லவா! பந்தை அடித்து விட்டு ஓடி எடுக்கும் போது ரன்கள் கூடுவதோடு, ஸ்டிரைக்கும் மாறுகிறது. ஒன்று, இரண்டு ரன்களை அடிக்கடி எடுப்பது ஸ்டிரைக்கை மாற்ற உதவும். இதனால் பந்து வீச்சாளருக்கும், ஃபீல்டர்களுக்கும் சற்று தொய்வை ஏற்படுத்தும். இதுவே இடது மற்றும் வலது பேட்ஸ்மேன்களாக இருந்தால், ஸ்டிரைக் மாறும் போதெல்லாம் ஃபீல்டிங்கை மாற்ற வேண்டும். இதுவும் எதிரணிக்கு கொடுக்கப்படும் ஒருவிதமான நெருக்கடி தான்.

அதிரடிக்கு மாறி விட்ட இன்றைய நவீன கிரிக்கெட் யுகத்தில் தடுப்பாட்டமும், சிங்கிள்ஸ் எடுப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை டெஸ்ட் கிரிக்கெட்டைப் பார்த்து கற்றுக் கொள்ளலாம். விக்கெட்டுகள் சரியும் போது, தடுப்பாட்டம் தான் அணியை சரிவில் இருந்து மீட்க வழி கொடுக்கும். அதோடு இந்நேரத்தில் எடுக்கப்படும் ஒன்று, இரண்டு ரன்கள் நிச்சயமாக பவுண்டரிகளுக்கு சமமாகவே கருதப்படும்.

இதையும் படியுங்கள்:
கிரிக்கெட்டின் பாட்ஷா விராட் கோலி: சொன்னது யார் தெரியுமா?
Running Between the Wicket

அதேசமயம் அருகில் இருக்கும் ஃபீல்டர் கைக்கு நேராக அடித்து விட்டு ஒரு ரன் எடுக்க முயற்சிப்பது, விக்கெட்டை இழக்க வழிவகுக்கும். 1.5 ரன்களை வேகமாக ஓடினால் கூட 2 ரன்களாக மாற்றுவது கடினம். ஏனெனில் விக்கெட்டை இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் 1.7 மற்றும் 1.8 என வாய்ப்பிருக்கும் போது வேகமாக ஓடினால், நிச்சயமாக 2 ரன்களை எடுக்க முடியும் என கேப்டன் கூல் தோனி ஒருமுறை தெரிவித்திருந்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதும், தொடர்ந்து பல ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் தோனியின் ஃபிட்னஸ் அபாரமானது. இப்போதும் அவர் வேகமாக ரன்களை ஒடி எடுக்கும் திறன் கொண்டவர். ஒரு ரன் தானே என வீரர்கள் அலட்சியமாக இல்லாமல் ரன் எடுக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால், நிச்சயமாக அதிக ரன்களைக் குவிக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
தல தோனியின் அறிவுரையால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த இளம் வீரர்!
Running Between the Wicket

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com