இந்திய மகளிர் அணியின் புதிய கேப்டன் நியமனம்!

அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக உயர்ந்துள்ளார் நட்சத்திர வீராங்கனை.
New captain
Smirthi Mandannaimage credit: BCCI
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரித் கவுர் விலகியதை தொடர்ந்து, இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பை பிசிசிஐ ஸ்மிருதி மந்தனாவிற்கு வழங்கியுள்ளது. 37 வயதான ஹர்மன்பிரித் கவுர் 2009 ஆம் ஆண்டு இந்திய தேசிய மகளிர் அணியில் இடம் பிடித்தார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வளர்ச்சியை தொடங்கிய காலகட்டம் அது. 2012 ஆம் ஆண்டு, ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் , அப்போதைய கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் துணைக் கேப்டன் ஜூலியன் கோஸ்வாமி உள்ளிட்டோர் காயம் காரணமாக போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டபோது , தற்காலிகமாக இந்திய மகளிர் அணி கேப்டனாக ஹர்மன் நியமிக்கப்பட்டார்.

ஹர்மன் அந்த போட்டியில் பாகிஸ்தானுடன் மோதிய இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி, தன் முதல் சதத்தையும் அடித்து, 81 ரன்கள் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெற வைத்தார். அவரது தலைமையின் கீழ் இந்திய மகளிர் அணி மிகப்பெரிய இலக்குகளை எட்டியது. அதுவரை இந்திய மகளிர் அணிக்கு என்று பெரிய ரசிகர்களும் ஆதரவும் இல்லாத நிலையில இருந்து, மாறத் தொடங்கியது.

ஹர்மன் தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி பல தொடர்களை வென்றது. மிகவும் குறிப்பாக ஆசிய கோப்பை, ஆசியன் விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றது. இந்திய மகளிர் அணி வரலாற்றில் முதன்முறையாக 2025 ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வென்றது போன்ற பல சாதனைகளை செய்துள்ளார்.

இந்நிலையில், இந்திய மகளிர் அணியின் வெற்றிகரமான கேப்டனாக இயங்கிக் கொண்டிருந்த ஹர்மன் நேற்று முன்தினம் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்திய மகளிர் அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா தேர்வாகி இருக்கிறார். இவர் டெஸ்ட், ஒருநாள் , டி20 ஆகிய அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்படுவார். இடது கை அதிரடி ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா, இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனையாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

Smirti and Harman
Smirti and HarmanFacebook

2014 ஆம் ஆண்டு இந்திய மகளிர் அணியில் இணைந்த ஸ்மிருதி, தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி பல மேட்ச்களில் அணியை வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றி உள்ளார். மகளிர் கிரிக்கெட் உலகில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை , அதிக சதங்கள் அடித்த வீராங்கனை உள்ளிட்ட பல்வேறு சாதனை பட்டியலில் முன்னணி இடத்தில் அவர் இருக்கிறார். மகளிர் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வந்த அவர், ஹர்மன் விளையாட முடியாத சூழலில் கேப்டனாக பொறுப்பேற்று மிகச் சிறப்பான முறையில் அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார்.

இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக 4 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று அனைத்திலும் ஸ்மிருதி வெற்றி பெற்றுள்ளார். 18 டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்து 11 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளார். டி 20 போட்டிகளில் இரண்டு முறை சதம் அடித்த சாதனையையும் தன் வசம் வைத்துள்ளார். மேலும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதமடித்தவர்கள் பட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கிறார். பேட்டிங்கில் ஏராளமான சாதனைகளை தன் வசம் வைத்துள்ள ஸ்மிருதி கேப்டனாகவும் தனது பொறுப்பை திறம்பட நிர்வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்..! : ஹர்மன்பிரீத் கவுரின் திடீர் அறிவிப்பு!
New captain
logo
Kalki Online
kalkionline.com