தோனியின் நகைச்சுவையான திருமண அறிவுரை இணையத்தில் வைரல்...

சமீபத்தில் திருமண விழாவில் கலந்து கொண்ட தோனி மணமகனுக்கு வழங்கிய திருமண வாழ்க்கை தொடர்புடைய வேடிக்கையான ஆலோசனை இணையத்தில் வைரலாகி வருகிறது.
MS Dhoni
MS Dhoni
Published on

இந்திய கிரிக்கெட்டின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராகக் கருதப்படும் மகேந்திர சிங் தோனி. தோனி, பல வருடங்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், இப்போது ஐ.பி.எல் போட்டிகளில் மட்டுமே விளையாடினாலும், அவரது புகழ் மற்றும் செல்வாக்கு எப்போதும் உச்சத்திலேயே இருந்து வருகிறது. தோனி என்ற பெயரை கேட்டாலே கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகி விடுவார்கள். சச்சினுக்கு அடுத்ததாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஃபேவரைட் ஆக திகழ்ந்தவர் என்றால் அது தோனி தான்.

பதற்றமான சூழலில் கூட செம கூலாக விளையாடுவது, ஜெயிக்க முடியாத போட்டியில் அணியை உற்சாகப்படுத்தி ஜெயிக்க வைப்பது என அவரின் முடிவுகளுக்கும் கூட இங்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு என்றே சொல்ல வேண்டும்.

தோனி கிரிக்கெட் மைதானத்தில் அமைதியான குணத்திற்கு பெயர் பெற்றவர், ஆனால் அவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இருக்கும்போது ஒரு மகிழ்ச்சியான நபராக மாறி விடுவார் என்பது ஒரு சிலக்கு மட்டுமே தெரியும்.

இதையும் படியுங்கள்:
952 கேட்சுகளுக்கும், 46 ஸ்டம்பிங்குகளுக்கும் சொந்தக்காரர்... யார் இவர்? MS தோனி ?
MS Dhoni

இந்நிலையில் சமீபத்தில் உத்கர்ஷ் சங்வி மற்றும் த்வானி கனுங்கோ ஆகியோரின் திருமணத்தில் தோனி பங்கேற்றபோது மணமகனுக்கு வழங்கிய திருமண வாழ்க்கை தொடர்புடைய வேடிக்கையான ஆலோசனை இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது வேடிக்கையான ஆலோசனை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததுடன் அவரை 'திருமண ஆலோசகர்' என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் உத்கர்ஷ் சங்க்வி மற்றும் த்வானி கனுங்கோ ஆகியோரின் திருமணத்தில் தோனி கலந்து கொண்டார். அப்போது திருமண மேடையில் திருமண ஜோடியுடன் நின்று கொண்டு மணமகன் உத்கர்ஷை நகைச்சுவையாக, ‘திருமணம் என்பது மிகவும் நல்ல விஷயம். நீங்கள் அவசரப்பட்டு அதைச் செய்தீர்கள். சிலர் நெருப்புடன் விளையாட விரும்புகிறார்கள், அவரும்(உத்கர்ஷ்) அவர்களில் ஒருவர்’ என்று கூறினார். மேலும் இங்குள்ள ஒவ்வொரு கணவரும் ஒரே படகில் இருக்கிறார்கள். நீங்கள் உலகக் கோப்பையை வென்றீர்களா இல்லையா என்பது முக்கியமில்லை, திருமணத்திற்குப் பிறகு எல்லா கணவர்களின் நிலையும் ஒன்றுதான் என்று கூறினார். தோனி பேசி முடிப்பதற்குள் மணமகன் உத்கர்ஷ், என் மனைவி வித்தியாசமானவர் அல்ல என்றார். இதைக் கேட்டதும் தோனி உட்பட அனைத்து விருந்தினர்களும் சிரிப்பொலியில் அதிர்ந்தனர்.

மணப்பெண்ணிடம் பேசிய தோனி, ‘உங்கள் கணவர் கோபமாக இருந்தால், அந்த நேரத்தில் எதுவும் சொல்லாதீர்கள். நாங்கள் ஐந்து நிமிடங்களில் அமைதியாகிவிடுவோம். எங்கள் சக்தி எங்களுக்குத் தெரியும்’ என்றார்.

தனது உரையை முடித்த தோனி, எனது உரையை கேட்டு ஆண்கள் மட்டும் ஏன் சிரிக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று நகைச்சுவையாக கூறினார்.

அதுமட்டுமின்றி தோனி மேடையில் இருந்து இறங்கும்போது, கிரிக்கெட் மைதானத்தில் எப்படி தோனி வரும் போது ‘தோனி, தோனி’ என்று கூச்சலிடுவார்களே, அப்படி கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.

தோனியின் இந்த ஆலோசனை நகைச்சுவையாக தெரிந்தாலும், அதில் மறைந்திருக்கும் வாழ்க்கையின் அனுபவத்தை ஒவ்வொரு திருமணமானவரும் புரிந்து கொள்ள முடியும்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் காட்டுத் தீ போல் வேகமாக பரவி 4.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், பதிவேற்றப்பட்டதிலிருந்து 328,000 லைக்குகளையும் பெற்றது. மேலும் தோனியின் பணிவு மற்றும் நகைச்சுவையை பாராட்டி வருகின்றனர். அதில் ஒரு பயனர், ‘தோனி கிரிக்கெட்டில் மட்டும் கேப்டன் கூல் அல்ல, வாழ்க்கையிலும் கேப்டன் கூல் தான்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
‘கேப்டன் கூல்’ புனைபெயருக்கு டிரேட் மார்க் கேட்கும் ‘தோனி’! ஆட்சேபம் இருக்குமா என்ன?
MS Dhoni

மகேந்திர சிங் தோனி கடந்த 2010-ம் ஆண்டு சாக்ஷி சிங் ராவத்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜிவா என்ற மகள் உள்ளார். நாடு முழுவதும் விரும்பப்படும் இந்த ஜோடி இந்தாண்டு தங்களது திருமணத்தின் 15வது ஆண்டு நிறைவை கொண்டாடினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com