டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு: ஒரே ஸ்கோரில் இரண்டு முறை சுருண்ட தென் ஆப்பிரிக்கா!

Lowest Test Scores - டெஸ்ட் கிரிக்கெட்
Lowest Test Scores - டெஸ்ட் கிரிக்கெட்AI Image
Updated on

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரையில் ஒரு இன்னிங்சில் குறைந்த பட்சம் ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆன அணிகளில் முதல் இடத்தில் இருப்பது நியூஸிலாந்து அணி 26 ரன்கள்.

அடுத்தது மேற்கு இந்திய தீவுக்கள் அணி. 27 ரன்கள்.

அடுத்த குறைந்தபட்ச ரன்கள் எண்ணிக்கையான 30 ரன்கள் சாதனை இரண்டு முறை படைத்துள்ள ஒரே அணி தென்ஆப்ரிக்க அணியாகும்.

முதல் முறை 1896 ல் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், இரண்டாம் முறை 1924 லும் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் இரண்டு முறையும் 30 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகினார்.

அந்த டெஸ்டுக்கள் சாதனைகள் குறித்து ஒரு பார்வை.

1896. தென் ஆப்பிரிகாவின் போர்ட் எலிசபத் டெஸ்ட்

(13 - 14,. பிப்ரவரி, 1896)

இரண்டே தினங்களில் இந்த டெஸ்ட் முடிவு பெற்று இங்கிலாந்து அணி 288 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வழி வகுத்தது.

ஸ்கோர்

இங்கிலாந்து

185 மற்றும் 226 ரன்கள்

தென் ஆப்பிரிக்கா

93 மற்றும் 30 ரன்கள்

வெற்றிபெற 319 ரன்கள் என்ற இலக்குடன் நான்காவது இன்னிங்சில் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி (அவர்களது இரண்டாவது இன்னிங்ஸ்) முதல் இன்னிங்ஸ் போல இரட்டை பட எண்ணிக்கை ரன்களில் இங்கிலாந்து அணி பவுளிலிங்கை எதிர் கொண்டு தாக்கு பிடிக்க முடியாமல் 30 ரன்களுக்கு சுருண்டது.

இங்கிலாந்து வேகபந்து வீச்சாளர் ஜார்ஜ் லோஹ்மண்

இந்த டெஸ்டில் எடுத்தது 15 விக்கெட்டுக்கள்.

முதல் இன்னிங்சில் ஆதிக்கம் செய்த ஜார்ஜ்

லோஹ்மண், இரண்டாவது இன்னிங்சில் தனது அதிரடி பவுலிங்கால் தென் ஆப்பிரிக்க வீரர்களை திணற அடித்தார். இவரது பவுலிங் புள்ளி விவரங்கள் இவரது திறமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றது.

இதையும் படியுங்கள்:
இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி! எழுச்சி பெறாத இந்திய அணி : சரியும் சாம்பியன் அணி
Lowest Test Scores - டெஸ்ட் கிரிக்கெட்

இவரது இரண்டாவது இன்னிங்ஸ் 7 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுக்கள் எடுத்தது ஒரு அரிய சாதனை ஆகும்.

இதில் இவர் ஹாட்ரிக் எடுத்தார். குக், மிடில்டன் மற்றும் வில்லோக்பி வீரர்கள் விக்கெட்டுக்களை வரிசையாக கைப்பற்றினார்.

இந்த டெஸ்டில் 15 அறிமுக வீரர்கள் விளையாடினார்கள். சிலர் சிறந்து விளையாடிய புகழ் பெற்றவர்கள்.

இங்கிலாந்து அணி 8 மற்றும் தென் ஆப்ரிக்க அணி 7 வீரர்கள் தங்களது முதல் டெஸ்டை இந்த ஆட்டத்தில் ஆரம்பித்தனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு விளையாடிய எஸ் எம் ஜே வுட்ஸ் என்ற வீரர் இங்கிலாந்து அணிக்காக தனது முதல் டெஸ்டில் இதில் ஆடினார்.

30 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன தென் ஆப்பிரிக்க அணியில் அதிக பட்ச ரன்கள் 10 (இவர் ஒருவரே இரட்டைப் பட எண்ணிக்கை ரன்கள்) எடுத்தவர் ராபர்ட் பூரே.

உபரி ரன்கள் உட்பட மொத்தம் 4 பூஜியங்கள்.

இங்கிலாந்து வீரர்கள் வுட்ஸ் 53, ஆர்த்தூர் ஹில் 37, சி பி ப்ரே 43, சார்லஸ் ரைட் 33 அதிக பட்ச ரன்கள் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்க அணியில் அதிக பட்ச ரன்கள் எடுத்தவர்கள் பிரேங்க் ஹெர்னே 23, டொம்மி ரூடியேட்ஜ் 22 ரன்கள்.

பவுலிங்

15 விக்கெட்டுக்கள் அள்ளிய இங்கிலாந்து வீரர்

ஜார்ஜ் லோஹ்மண் தவிர ஹூக்ஹ் ப்ரோம்லே டவன்போர்ட் 3, டோம் ஹய்வார்ட் 2 விக்கெட்டுக்கள் எடுத்தனர்.

அதிக பட்ச விக்கெட்டுக்கள் எடுத்த தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் பான்னோர் மிடில்டன் 9, ஜிம்மி சின்கிளைர் 4, ஜோசப் வில்லோக்ஹ்பி 4.

இரண்டாவது முறை அதே 30 ரன்கள் ஆன குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆன டெஸ்ட் பற்றிய விவரங்கள்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நேர்ந்த வரலாற்று சரிவு;

1924

தென் ஆப்பிரிக, இங்கிலாந்து அணிகள் (14 - 17, ஜூன், 1924) (எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்)

ஒரு இன்னிங்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி எடுத்த ரன்கள் 438.

தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்கோர் 30 ரன்கள்.

பாலோவ் ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி தங்களது பேட்டிங் வலிமையை பதிவு செய்தனர்.

இதையும் படியுங்கள்:
மீண்டும் மகுடம் சூடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி: இங்கிலாந்தை வீழ்த்தி 7வது முறையாக உலக சாம்பியன் பட்டம்!
Lowest Test Scores - டெஸ்ட் கிரிக்கெட்

இங்கிலாந்து அணி வீரர்கள் எதிர்பார்த்தபடி எளிதாக எதிரணி வீரர்களை அவுட் செய்ய முடியவில்லை.

பாப் கேட்டரால் என்ற வீரர் சதம் வேறு எடுத்தார். 120 ரன்கள் (15 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்). ஜிம்மி பிளங்கேன் பெர்க் 56, பிரெட் சஸ்ஸ்கிண்ட் 51 ரன்கள் எடுத்தனர்.

ஆல் அவுட் 390 ரன்கள்

பேட்டிங்கில் அசத்திய இங்கிலாந்து வீரர்கள் ஜாக் ஹாப்ப்ஸ் 76, பாஸ்டி ஹென்றேன் 74, பிரேங்க் வுல்லி 64, ராய் கிளனர் 59 ரன்கள்.

தென் ஆப்பிரிக்க அணி பவுலிங்

துவக்க பந்து வீசிய ஜார்ஜ் பார்க்கர் 6, சிட் பேகியர் 2, ஜிம்மி பிளங்கேன் பெர்க் 2 விக்கெட்டுக்கள்.

இங்கிலாந்து அணி கேப்டன் ஆர்த்தூர் கில்லிகன் அற்புதமாக பந்துக்கள் வீசினார். அவரது மற்றும் அவர் ஜோடி பவுலர் மௌரைஸ் டேட் இருவரின் பந்து வீச்சுக்களை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் அடுத்து அடுத்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய வண்ணம் இருந்தனர்.

Lowest Test Scores - டெஸ்ட் கிரிக்கெட்
Lowest Test Scores - டெஸ்ட் கிரிக்கெட்AI Image

தென் ஆப்பிரிக்க அணி அவர்களது ஒரு இன்னிங்சின் குறைவான 30 ரன்கள் எண்ணிக்கையை பதிவு செய்த இரண்டாவது டெஸ்ட் இது ஆகும்.

ஒரு வீரர் கூட இரட்டை எண்ணிக்கை ரன்கள் எடுக்கவில்லை.

அதிக பட்ச 11 ரன்கள் உபரிகள் (Extras) பகுதியில் வந்தது.

அவர்கள் அணி கேப்டன் துவக்க வீரர் ஹெர்பி டைலர்

அதிக பட்ச ரன்கள் ஆன 7 எடுத்தார். 4 பூஜியங்கள்.

இங்கிலாந்து அணியில் இருவர் மட்டுமே முதல் இன்னிங்க்சில் பவுலிங் செய்தனர்.

அதைப் பற்றிய புள்ளி விவரங்கள் அவர்கள் முறையே, ஆர்த்தூர் கில்லிகன் , மௌரைஸ் டேட்

ஓவர்கள் / மெய்டன்கள்/ ரன்கள் / விக்கெட்டுக்கள்

6.3 / 4 / 7 / 6

6 / 1 / 12 / 4

இரண்டாவது இன்னிங்சிலும் இருவரும் சிறப்பாக

பந்துக்கள் வீசினர்.

ஆர்த்தூர் கில்லிகன் ( 5 ) மற்றும் மௌரைஸ் டேட் (4) விக்கெட்டுக்கள் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் அபார வெற்றிக்கு துணை நின்றனர்.

இங்கிலாந்து அணியில் 5 மற்றும் தென்ஆப்பிரிக்க அணியில் 3 அறிமுக வீரர்கள் பங்கு பெற்றனர்.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆரம்பகால வரலாற்றைப் பற்றியும், கிரிக்கெட் உலகம் கண்டிராத அரிய பந்துவீச்சு சாதனைகள் மற்றும் மோசமான இன்னிங்ஸ் சரிவுகள் குறித்த துல்லியமான வரலாற்றுப் புள்ளிவிவர அறிவையும் நீங்கள் முழுமையாகப் பெறமுடியும்.

logo
Kalki Online
kalkionline.com