#BREAKING IPL 2026: CSK-ஐ வீழ்த்தி ஐதராபாத் அணி அபார வெற்றி!

ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் அரங்கேறிய இன்றைய போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி வாகை சூடியது.
SRH team
SRH vs CSKimage credit-outlookindia.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

ஐபிஎல் போட்டியில் இன்று 2 லீக் போட்டிகள் நடக்கிறது.

ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடக்கும் 27-வது லீக் போட்டியின் 2-வது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15-ல் சென்னையும் 7-ல் ஐதராபாத்தும் வெற்றி பெற்றுள்ளன.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணி 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 தோல்வியை கண்டுள்ளது. சென்னை அணி 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 தோல்வியை சந்தித்துள்ளது.

இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்களை குவித்தது.

195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய சென்னை அணி, ஆரம்பம் முதலே பொறுப்பாக விளையாடிய போதிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 4-வது தோல்வியை பதிவு செய்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com