ஒலிம்பிக்கில் ஒரு விசித்திர தங்கம்: ஸ்டீவன் பிராட்பரியின் தந்திர வெற்றி!

ரத்தக் காயங்களுடன் களமிறங்கி, உலகத்தரம் வாய்ந்த வீரர்களை முறியடித்த அசாத்திய கதை.
Steven Bradbury | ஸ்டீவன் பிராட்பரி
Steven Bradbury | ஸ்டீவன் பிராட்பரிAI Image
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

முன்னாள் செல்பவர்கள் எப்போது வீழ்வார்கள் என்று தக்க நேரத்தினை எதிர்பார்த்து, சமயம் பார்த்து முன்னேறிச் சென்று வெற்றிபெறும் யுக்திதான் Doing a Bradbury. இதனை கையாண்டு பல விபத்துக்களை சந்தித்து, இளம் வீரர்களிடம் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரு சுவாரசிய கதைதான் இப்போது பார்க்கவுள்ளோம்.

ஷார்ட்-டிராக் ஸ்பீட் ஸ்கேட்டர், ஸ்டீவன் பிராட்பரி என்பவர் பனிச்சறுக்கு மைதானத்தில் இரண்டு கொடூரமான விபத்துக்களை சந்தித்தார். அவற்றிலிருந்து உயிர் தப்பியதே பெரிய அதிர்ஷ்டம் என்றிருந்த நிலையில், 1994ம் ஆண்டு சக வீரரின் ஸ்கேட்டிங் கத்தி பட்டு தொடையில் காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில், 4 லிட்டர் ரத்தத்தை சம்பவ இடத்தில் இழந்ததோடு, அவருக்கு 111 தையல்களும் போடப்பட்டன. இதனையடுத்து மீண்டும் 2000-ல் நடந்த ஒரு விபத்தில் அவரது கழுத்து எலும்பு முறிந்தது.

2002ம் ஆண்டு போட்டிகளில் மீண்டும் களமிறங்கலாம் என்று எண்ணிய பிராட்பரிக்கு வயது 28. இந்த விளையாட்டுக்கு இது சற்று அதிக வயது என்பதால், தன்னைவிட இளமையான, வேகமான வீரர்களுடன் நேருக்கு நேர் மோதி ஜெயிக்க முடியாது என்பதை பிராட்பரி உணர்ந்திருந்தார். எனவே, அவரும் அவரது பயிற்சியாளரும் ஒரு விசித்திரமான வியூகத்தை வகுத்தனர். 'முன்னால் செல்லும் வீரர்களுடன் போட்டி போடாமல், சற்று தள்ளியே பின்னால் செல்ல வேண்டும்; முன்னால் செல்லும் வீரர்கள் தங்களுக்குள் மோதி கீழே விழுந்தால், அதை சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்.'

இதெப்படி, ஒரு மிகப்பெரிய போட்டியில், தன்னை நம்பாமல், தன் முன் செல்பவர்களின் நிலையை நம்பி இருப்பது என்பது பலருக்கும் முட்டாள்தனமாக தோன்றிற்று. இப்படி பனிச்சறுக்கு போட்டிகளில் வீரர்கள் அதிவேகமாக வளைவுகளில் திரும்பும்போது ஒருவர் மீது ஒருவர் மோதி விழும் வழக்கமான இந்த 'நெகட்டிவ்' வியூகம் ஒலிம்பிக் அளவில் பலிக்காது என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால், அதிர்ஷ்டம் அப்போது அவர் பக்கம் இருந்தது.

Steven Bradbury | ஸ்டீவன் பிராட்பரி
Steven Bradbury | ஸ்டீவன் பிராட்பரிAI Image

கால் இறுதி போட்டியில் பிராட்பரி மூன்றாம் இடத்தையே பிடித்திருந்தார். ஒருவேளை அவருக்கு முன்னாள் சென்ற வீரர் விதிமுறை மதித்திருந்தால், பிராட்பரி போட்டியிலிருந்து அப்போதே வெளியேறியிருப்பார். ஆம்! பிராட்பரி அரை இறுதி போட்டிக்கு தகுதிபெற்றார்.

அதேபோல் அரை இறுதி போட்டியில், திட்டமிட்டபடி பிராட்பரி பின் தங்கியே சென்றார். எதிர்பாராதவிதமாக, முன்னால் சென்ற மூன்று முன்னணி வீரர்கள் தங்களுக்குள் மோதி கீழே விழுந்தனர். பிராட்பரி அசால்ட்டாக அவர்களைக் கடந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிபோட்டியில் ப்ராட்பரியுடன் அமெரிக்காவின் அதிவேக வீரர்கள் அபோலோ ஓனோ, சீனாவின் லி ஜியாஜுன் போன்ற அசாத்திய வீரர்களுடன் பிராட்பரி களம் இறங்கினார். இறுதியாக தனியாக வந்துக் கொண்டிருந்த ப்ராட்பரி கடைசி சுற்றின் கடைசி வளைவு வந்து, சில நொடிகளில் போட்டி முடியபோகிறது என்றிருந்த நிலையில் ஒரு பெரிய அதிர்ச்சி பார்வையாளர்களுக்கு காத்திருந்தது. முன்னால் சென்ற சீன வீரர் லி ஜியாஜுன் முந்த முயன்று நிலைதடுமாறி விழுந்தார்.

இதையும் படியுங்கள்:
FIFA 2026: இந்திய வம்சாவளி கால்பந்து வீரர்கள் பட்டியல் மற்றும் விவரங்கள்!
Steven Bradbury | ஸ்டீவன் பிராட்பரி

அவர் விழும்போது அமெரிக்க வீரர் அபோலோ ஓனோவை வாரிவிட, அவர் கனடா மற்றும் கொரிய வீரர்களின் மீது விழ... அடுத்த ஒரு நொடியில், பதக்கத்திற்காகப் போராடிய அந்த நான்கு உலகத்தரம் வாய்ந்த வீரர்களும் ஒருவரோடு ஒருவர் மோதி, பனியில் சுருண்டு விழுந்தனர்.

வேகமாக சென்று இவர்களுடன் தானும் விழுந்துவிட கூடாது என்றிருந்த ப்ராட்பரி, நிதானமாக அவர்களை கடந்து தங்க பதக்கத்தை வென்றார்.

ஆஸ்திரேலியாவில் இன்றுவரை, ஒருவர் கடினமாக உழைத்து, இறுதிவரைப் போராடி, எதிர்பாராத அதிர்ஷ்டத்தால் வெற்றி பெற்றால், அதை 'டூயிங் ஏ பிராட்பரி' (Doing a Bradbury) என்று ஒரு பழமொழியாகவே பயன்படுத்துகிறார்கள்.

ஆனால், அனைவருக்கும் இந்த பழமொழி பொருந்த வாய்ப்பே இல்லை. லக்கை நம்பி அனைவரும் ப்ராட்பரி பழமொழியை பின்பற்றினால், உழைப்பிற்கும் முயற்சிகளுக்கும் எந்தவித தகுதியும் இல்லாமல் போய்விடும்.

ஸ்டீவ் ப்ராட்பரி போல், முழு உழைப்பையும் முயற்சியையும் போட்டுவிட்டு, இறுதியாக அதிர்ஷ்ட்டத்தை நம்புவோம்.

logo
Kalki Online
kalkionline.com