வலிமையே அதன் மகிமை!

வலிமையே அதன் மகிமை!

வலியில்லாத  உறுப்பு! 

டலின் எந்த பகுதியில் உள்ள தசையை கிள்ளினாலும் வலிக்கும். ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் எவ்வளவு கிள்ளினாலும் வலியை உணர முடியாது. அது கையின் மூட்டு பகுதி. 

வலிமை:

சுண்டுவிரல், கட்டை விரல் இரண்டும் பார்ப்பதற்கு அதிக அளவில் சிறியதாக இருக்கலாம். ஆனால் அவை கையின் வலிமையில் 50 சதவீதத்திற்கும் மேல் பங்களிப்பு செய்கிறது என்றால் நம்ப முடிகிறதா? கை விரல்களின் வலிமையை கொண்டுதான் எந்த ஒரு பொருளையும் தூக்க முடியும். சுண்டு, கட்டைவிரலை தவிர்த்து ஒரு பொருளை தூக்குவதற்கு முயற்சித்தால் அது கடினமாகிவிடும். ஏனெனில் விரல்களில் சுண்டு, கட்டை விரலுக்குத்தான் வலிமை அதிகம்.

கண்களின் அசைவு:

டலில் உள்ள தசைகளிலேயே கண் தசைகள்தான் அதிக நேரம் செயல்பாட்டில் இருக்கக்கூடியது. அது ஒரு நாளைக்கு ஒரு லட்சம் தடவைக்கு மேலேயே அசைவில் இருக்கும். ஒரு வினாடிக்குள்ளேயே மூணு தடவை இயங்கி விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:

புல்வெளியில் வெறுங்காலுடன் நடப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ரத்த அழுத்தத்தை குறைக்கவும், இதயத் துடிப்பை  கட்டுக்குள் வைக்கவும் துணை புரியும். தினமும் பூமியில் நடக்கும் வழக்கத்தை பின்பற்றுவதன் மூலம் இதயம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம். 

காயங்களால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைப்பதற்கான எளிய வழி பூமியுடன் தொடர்பு கொள்வதுதான். புல்வெளியில் நடைபயிற்சி செய்வது பலன் தரும். ரத்தத்தை உடல் முழுவதும் திறம்பட கொண்டு செல்வதற்கு உதவும். ஒட்டுமொத்த வலியையும் குறைக்கும்.

கால்களின் வலிமையை கூட்டும்:

புல்வெளியில் வெறுங்காலுடன் நடப்பது பாதங்களில் உள்ளங்கால்களில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவும். சருமத்தின் மேற்பரப்பில் ஆரோக்கியமான நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை உயர்த்தி பாதங்களில் சுகாதாரத்தை மேம்படுத்தும். கணுக்கால் மட்டும் கால்களில் உள்ள தசைநார்களை வலுப்படுத்தும். முழங்கால் வலி மற்றும் முதுகு வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும். 

நரம்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்தும்:

புல் மீது வெறுங்காலுடன் நடக்கும் போது காலில் உள்ள சில அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படும். இவை நரம்புகளை தூண்டி நரம்பு மண்டலத்தின் செயல் பாடுகளை மேம்படுத்த உதவும். தினமும் குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது வெறுங்காலுடன் புல் மீது நடப்பதற்கு பயிற்சி செய்யுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com