டி20 தொடர் - வெற்றியின் விளிம்பிலிருந்து தோல்வியைத் தட்டிப் பறித்ததா இலங்கை அணி?

T20 series - India vs Sri Lanka
T20 series - India vs Sri Lanka
Published on

முதல் மேட்சில் முப்பது ரன்களுக்கு ஒன்பது விக்கெட்கள், இரண்டாவதில் முப்பத்தியொரு ரன்களுக்கு ஏழு விக்கெட்கள், மூன்றாவதில் இருபத்தி ஏழு ரன்களுக்கு ஏழு விக்கெட்கள்.... இப்படி விளையாடும் அணி ஜெயிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா? இலங்கை இப்படித் தான் இந்த மூன்று டி 20 தொடரை இந்தியாவுடன் விளையாடியது. வெற்றியின் விளிம்பிலிருந்து தோல்வியைத் தட்டிப் பறிப்பது என்று சொல்வார்கள். அது இலங்கை அணியினருக்கு கச்சிதமாகப் பொருந்தும். உலகக் கோப்பை வென்ற கையோடு விளையாடும் அனைத்து சீரிஸ்களும் கொஞ்சம் வில்லங்கமாகவே பார்க்கப்படும் சூழலில் தான் ஜிம்பாப்வேயை வென்றது இந்தியா.

இந்த இலங்கைத் தொடரில் புதிய கேப்டன், புதிய கோச், புதிய அணி என்று சென்றது. காம்பிர் இந்திய அணியின் புதிய கோச்சாகவும், சூர்ய குமார் யாதவ் அணித்தலைவராகவும் நியமிக்கப்பட்டது சில முணுமுணுமுப்புகளைக் கொண்டு வந்தது. இருந்தும் இறுதியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. 

ஒவ்வொரு ஆட்டத்திலும் ஜெயிப்பது போன்ற தோற்றம் அளித்த இலங்கை மிடில் ஆர்டரின் பரிதாபமான ஆட்டத்தால் தோல்வியைத் தழுவியது. முதல் மூன்று ஆட்டக்காரர்களான குசால் மெண்டிஸ், குஷால் பெரேரா, நிசாங்கா தவிர ஒருவரும் ஆடவில்லை. இவர்கள் மூவரும் ஒரு மதிக்கத் தக்க ஸ்கோரைக் கொண்டு வர மற்றவர்கள் ஏனோ தானோ என்று ஆடி விக்கெட்களைப் பறிகொடுத்து அணிக்குத் தோல்வியைப் பரிசளித்தனர். இது அணியின் ஒருங்கிணைப்பு இல்லாத தன்மையையும், தன்னம்பிக்கைக்கு குறைவையும் காட்டியது. பந்து வீச்சும், பீல்டிங்கும் கூடச் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

இதையும் படியுங்கள்:
டி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளைச் சந்தித்த 5 அணிகள் எவை தெரியுமா?
T20 series - India vs Sri Lanka

மூன்றாவது ஆட்டமான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின்  ரன் குவிப்பைக் கட்டுப் படுத்தி ஒரு ஜெயிக்கத் தக்க ஸ்கோரில் இந்திய அணியை எதிர்கொண்டனர். கடைசி ஐந்து ஓவர்கள்வரை கூட ஆட்டம் அவர்கள் பக்கம் இருந்தது. பின்னர் நடந்தது யாரும் எதிர்பார்க்காத திருப்பம். இதுவரை பந்தே வீசியிராத ரிங்கு சிங்கிடம் பந்தைக் கொடுத்தார் சூர்யா. அவரும் சளைக்காமல் போட்டு இரண்டு விக்கெட்களை சாய்த்து கடைசி ஓவரில் ஆறு பந்துகளில் ஆறு ரன்கள் என்ற தேவையுடன் பரபரப்பான கட்டத்தை எட்டியது. சிராஜிற்கு ஒரு ஓவர் இருந்தும் கூடக் கடைசி ஓவர் போடும் முடிவைத் தானே எடுத்துக் கொண்டார் அணித்தலைவர் சூர்ய குமார் யாதவ். இந்த முயற்சி பலனளிக்காமல் இல்லை. ஐந்து ரன்களை மட்டும் கொடுத்து இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றி மேட்ச் சூப்பர் ஓவர் செல்வதற்கு காரணமாக இருந்தார். இந்தியா மிகச் சுலபமாகச் சூப்பர் ஓவரில் வென்று தொடரைக் கைப்பற்றியது. சூர்யா தொடர் நாயகனாகவும், வாஷிங்டன் சுந்தர் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com