1. ஊட்டச்சத்துக்கள்: வெள்ளை டர்னிப்பில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம். இதில் கணிசமான அளவு வைட்டமின் சி, கே மற்றும் ஃபோலேட், பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன. இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம், உயிர்சக்தி மற்றும் நல்வாழ்வுக்கு வித்திடுகின்றன.
2. செரிமான ஆரோக்கியம்: டர்னிப்பில் உள்ள அதிக நார்ச்சத்து ஆரோக்கியமான குடல் இயக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கலைத் தடுக்கிறது. நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. இது உடல் எடையையும் கட்டுக்குள் வைக்கிறது.
3. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு: வெள்ளை டர்னிப்பில் காணப்படும் ஒரு முக்கியமான சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றி வைட்டமின் சி ஆகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடலின் தொற்று நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை ஆதரிக்கிறது.
4. எலும்பு ஆரோக்கியம்: வைட்டமின் கே மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற வெள்ளை டர்னிப்பில் உள்ள தாதுக்கள் வலுவான எலும்புகளை பராமரிக்கவும், ஆஸ்டியோபோரோஸிஸை தடுக்கவும் உதவுகிறது. எலும்பு அடர்த்தியை அதிகரிக்கவும் ஒட்டுமொத்த எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் இந்த ஊட்டச்சத்துக்கள் இணைந்து செயல்படுகின்றன.
5. ஆக்சிஜனேற்ற பண்புகள்: டர்னிப்களில் ஃபிளாவனாயுடுகள் மற்றும் குளுக்கோசினோலேட்டுகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இவை உடலைப் பாதுகாக்க உதவுகின்றன. ஃப்ரீ ரேடிக்கில்களை நடுநிலையாக்குவதன் மூலம் இந்தக் கலவைகள் இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்கும்.
6. அழற்சி எதிர்ப்புப் பண்புகள்: இதில் உள்ள சத்துக்கள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளுக்கு பங்களிப்பது மட்டுமல்லாமல் அழற்சி எதிர்ப்பு விளைவுகளையும் வழங்குகிறது. இது உடலின் வீக்கத்தை குறைக்கவும் நாள்பட்ட அழற்சி நிலைகளின் ஆபத்தை குறைக்கவும் உதவும்.
7. இதய ஆரோக்கியம்: டர்னிப்பில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்துவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஃபைபர் உள்ளடக்கம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவதன் மூலம் இருதய ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கிறது.
8. எடை மேலாண்மை: குறைந்த கலோரிகள், அதிக நார்ச்சத்து மற்றும் அதிகளவு நீர் உள்ளடக்கம் போன்றவை வெள்ளை டர்னிப்பை எடையை கட்டுப்படுத்த விரும்புபவருக்கு ஒரு சிறந்த உணவாக மாற்றுகிறது. அவை உடலில் அதிகப்படியான கலோரிகளை சேர்க்காமல் உடல் எடையை சரியான நிலையில் வைக்க வைக்கிறது.
9. சரும ஆரோக்கியம்: இதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின்கள் சூரியக்கதிர்களில் இருந்து சருமத்தை சேதம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதனால் ஆரோக்கியமான சருமத்திற்கு பங்களிக்கிறது. வைட்டமின் சி கொலாஜன் உற்பத்திக்கு நன்மை பயக்கிறது. இது சரும நெகிழ்ச்சி மற்றும் தோற்றத்தை பராமரிக்க உதவுகிறது.
10. அறிவாற்றல் செயல்பாடு: இதில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் அறிவாற்றல் ஆரோக்கியத்தில் பாதுகாப்பான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது நியூரோ டிஜெனரேட்டிவ் நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
எனவே, வெள்ளை டர்னிப்பை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வித்திடும். மேலும், இது உடல் மற்றும் மன நலனை ஆதரிக்கும்.