கிட்டிப் புள்ளு முதல் கில்லி தண்டா வரை: மறக்கடிக்கப்பட்ட சிறுவர் விளையாட்டின் முழு விதிமுறைகள்!

நவீன திரைகளில் தொலைந்துபோன நம் பாரம்பரிய மண் சார்ந்த விளையாட்டின் சுவாரஸ்யமான பக்கங்கள்!
தள்ளும் புள்ளும் - Tamil Traditional Games
தள்ளும் புள்ளும் - Tamil Traditional GamesAI Image
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on: 

தமிழர் பாரம்பரிய சிறுவர் விளையாட்டான தள்ளும் புள்ளு/கிட்டிப் புள்ளு குறித்து விரிவாக விளக்கும் கட்டுரை இது. எளிய மரக்குச்சிகளால் விளையாடப்படும் இந்த மண் சார்ந்த விளையாட்டின் உபகரணங்கள், மைதான அமைப்பு, தள்ளுதல், அடித்தல், அவுட் விதிகள், புள்ளி கணக்கீடு ஆகிய அனைத்தையும் படிப்படியாகச் சொல்கிறது. உடல் நலம், கவனச்செறிவு, குழு உணர்வு போன்ற நன்மைகளையும் வலியுறுத்துகிறது.

நவீன தொழில் நுட்பத்தின் வருகைக்கு முன், கிராமத்துச் சிறுவர்களின் மாலைக் காலப் பொழுதுகளை உற்சாகப்படுத்திய மரபுசார் விளையாட்டுகளில் ‘தள்ளும் புள்ளும்’ முக்கியமானது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ‘கிட்டிப் புள்ளு’ என்றும், வட இந்தியாவில் ‘கில்லி தண்டா’ (Gilli Danda) என்றும் அழைக்கப்படும் இந்த விளையாட்டு, சிறுவர்களின் கைகளிலும் கிராமத்து வீதிகளிலும் உயிர்ப்போடு இருந்த ஒரு மண் சார்ந்த விளையாட்டு ஆகும்.

விளையாட்டிற்குத் தேவையான பொருட்கள்: இவ்விளையாட்டிற்கு ஆடம்பரமான எந்தப் பொருட்களும் தேவையில்லை. இயற்கையோடு இயைந்து, மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் எளிய உபகரணங்களே போதுமானவை.

புள்ளு (குட்டி): இரண்டு பக்கமும் கூர்மையாக்கப்பட்ட, சுமார் 2 முதல் 3 அங்குல நீளமுள்ள சிறிய மரக்கட்டை.

தள்ளும் கோல்: புள்ளைத் தூக்கி வீசவும் அடிக்கவும் பயன்படும் சுமார் 1.5 அடி நீளமுள்ள வலுவான மரக்குச்சி.

விளையாடும் முறை: தள்ளும் புள்ளும் விளையாட்டு பொதுவாக இரு அணிகளாகப் பிரிந்து திறந்தவெளி மைதானத்தில் விளையாடப் படுகிறது. தரையில் சிறிய படகு வடிவில் ஒரு சிறு குழி (இதை ‘மனை’ அல்லது ‘வடு’ என்பர்) தோண்டப்படும். அத குறுக்கே ‘புள்ளு’ வைக்கப்படும்.

தள்ளுதல் (Push): முதல் கட்டமாக, குழியில் இருக்கும் புள்ளின் அடியில் பெரிய குச்சியைக் கொடுத்து, அதை முன்னோக்கித் தள்ளி அல்லது தூக்கி வீசுவார்கள்.

அடித்தல்: காற்றில் அல்லது தரைக்கு மேலே எழும் புள்ளை, பெரிய குச்சியால் ஓங்கி அடித்து மைதானத்தின் தொலைதூரப் பகுதிக்கு அனுப்புவார்கள்.

தள்ளும் புள்ளும் - Tamil Traditional Games
தள்ளும் புள்ளும் - Tamil Traditional GamesAI Image

மறுமுறை வாய்ப்பு (இரண்டாம் முறை): புள்ளு தரையில் விழுந்த பிறகு, அதன் கூர்மையான ஒரு முனையில் குச்சியால் தட்டி, அது காற்றில் எழும்பும்போது மீண்டும் ஓங்கி அடிப்பார்கள்.

அவுட் (Out) ஆகும் முறைகள்

தள்ளப்பட்ட அல்லது அடிக்கப்பட்ட புள்ளைக் காற்றில் வரும்போதே எதிரணி ஆட்டக்காரர் பிடித்துவிட்டால் அடித்தவர் ‘அவுட்’ ஆவார். எதிரணியினர் புள்ளை எடுத்து, குழியின் மேல் வைக்கப்பட்டிருக்கும் பெரிய குச்சியை நோக்கி எறிந்து, அதில் பட்டுவிட்டாலும் ‘அவுட்’ எனக் கருதப்படும்.

புள்ளிகள் கணக்கிடுதல்: புள்ளு போய் விழுந்த இடத்திலிருந்து, குழியின் எல்லை வரை பெரிய குச்சியால் தூரத்தை அளப்பார்கள். ஒவ்வொரு குச்சியின் நீளமும் ஒரு புள்ளியாகக் (Point) கணக்கிடப்படும். நிர்ணயிக்கப்பட்ட புள்ளிகளை முதலில் எடுக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
மேட்ரியோஷ்கா பொம்மைகள், ரஷ்ய பாலே, வெங்காயக் கோபுரங்கள்: ரஷ்யாவின் காலத்தால் அழியாத கலை மரபு!
தள்ளும் புள்ளும் - Tamil Traditional Games

உடலுக்கும் மனதுக்கும் தரும் நன்மைகள்

கூர்மை நோக்கு மற்றும் கவனிப்பு: காற்றில் எழும்பும் சிறிய புள்ளைக் துல்லியமாகக் கணித்து அடிப்பது சிறுவர்களின் கவனச் செறிவை அதிகப்படுத்துகிறது.

உடற்பயிற்சி: ஓடுதல், குனிந்து நிமிர்தல், கைகளை வேக வீச்சுடன் இயங்குதல் என முழு உடலுக்கும் நல்லதொரு நெகிழ்வுத்தன்மையைத் தருகிறது.

கூட்டுறவும் தோழமையும்: அணியாக இணைந்து விளையாடுவதால் குழு மனப்பான்மையும், சகிப்புத்தன்மையும் வளர்கிறது.

கிரிக்கெட் விளையாட்டின் தொடக்க கால வடிவமாகப் பார்க்கப்படும் இந்தத் ‘தள்ளும் புள்ளும்’ விளையாட்டு, இன்று வீதி எங்கும் செல்போன் திரைகளாக மாறிய சூழலில் மெல்ல மறக்கப்பட்டு வருகிறது. நம் மண்ணின் தனித்துவத்தையும், கைவினைப் பொருட்களற்ற எளிய மகிழ்ச்சியையும் பறைசாற்றும் இதுபோன்ற பாரம்பரிய விளையாட்டுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது நமது கடமையாகும்.

இதையும் படியுங்கள்:
பாரம்பரிய கட்டு சாதக் கூடை: அன்றைய மாட்டு வண்டி முதல் இன்றைய ஆன்லைன் டெலிவரி வரை!
தள்ளும் புள்ளும் - Tamil Traditional Games

விளையாட்டின் துல்லியமான விதிமுறைகளையும் புள்ளிகள் கணக்கிடும் முறைகளையும் அறிந்து கொள்வதன் மூலம், எந்தவித செலவுமின்றி வீதியிலும் திறந்தவெளியிலும் உங்கள் குழந்தைகளுடன் விளையாடி, குடும்பத்தோடு மகிழ்ச்சியான தருணங்களை மீண்டும் உருவாக்கும் திறன் உங்களுக்குக் கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com