
கிரிக்கெட் வரலாற்றில் முதல் டையான டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே பிரிஸ்பேனில் உள்ள பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் (கப்பா) டிசம்பர் 1960 இல் நடைபெற்றது.
இறுதி ஸ்கோர்கள்:
வெஸ்ட் இண்டீஸ்: 453 & 284
ஆஸ்திரேலியா: 505 & 232
போட்டி முடிவு: டையானது (இரு அணிகளும் ஒரே ஸ்கோருடன் ஆட்டமிழந்தன).
டெஸ்ட் வரலாற்றில் இது மிகவும் வியத்தகு முடிவுகளில் ஒன்றாகும், ஆஸ்திரேலியா வெற்றி பெற ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் ஸ்கோர்கள் சமநிலையில் இருக்கும்போது கடைசி விக்கெட்டை இழந்தது.
1960 டிசம்பர் 9, 10, 12, 13, 14 ஆகிய அஞ்சு தினங்களில் பிரிஸ்பேன் நகரில் ஆஸ்திரேலியா போட்டி வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒரு விளையாட்டு ஆகும்.
ஒவ்வொரு டெஸ்டிலும் நடந்த நிகழ்ச்சிகள் இன்றும் பல மனதை விட்டு அகன்று இருக்க முடியாது. அதுவும் இந்த பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் டை என்பது இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
அப்போதெல்லாம் இந்த போட்டி நடைபெறும் போது தொலைக்காட்சியில் பெட்டியில் பார்க்க முடியாது.
கிரிக்கெட் commentary சரியாக கேட்காது. அன்றைய தினம் கிரிக்கெட் உலகில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலை. செய்தி ஒலி பரப்பும் போது தான் ரிசல்ட் தெரிய வரும்.
எப்போதும் இப்படி படமாக்க பட்ட cricket match தமிழகத்தில் அனைத்து திரையரங்களிலும் காண்பிக்கப்பட்டு வரும்.
பிரிஸ்பேன் match tie காண்பிக்கப்படுகிறது என்ற விளம்பரம் தியேட்டர் வாசலில் காணப்படும்.
காண்பிக்கப்படும் படம் எவ்வளவு மோசமாக இருந்தாலும், இந்த காட்சியை பார்ப்பதற்காக திரையரங்கம் நிரம்பி வழியும்.
இப்போது ஸ்டார் கிரிக்கெட் ESPN போன்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் பல்வேறு டெஸ்ட் ஒன் டே 20 20 ஆட்டங்களை இடைவிடாது ஒளிபரப்பு வருகின்றன
ஆனால் 1960 காலகட்டத்தில் அந்த வசதிகள் கிடையாது.
இரண்டாவது சமநிலை டெஸ்ட் 26 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 1986 இல் சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் (சேப்பாக்கம்) இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் நடந்தது.
இறுதி ஸ்கோர்கள்:
ஆஸ்திரேலியா: 574/7 டிக்ளேர் & 170
இந்தியா: 397 & 347
1 விக்கெட் மீதமுள்ள நிலையில் இந்தியா வெற்றி பெற 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது, ஆனால் கடைசி வீரர் மனிந்தர் சிங் கிரெக் மேத்யூஸிடம் எல்பிடபிள்யூ செய்யப்பட்டார். ஸ்கோர்கள் சமநிலையில் இருந்தபோது - அதனால் அது இந்திய வெற்றிக்கு பதிலாக டையில் முடிந்தது. அன்று மணிந்தர் சிங்கை பாகிஸ்தான் tail enders உடன் ஒப்பிட்டு கண்டபடி திட்டி தீர்த்தனர்.
எனவே டெஸ்ட் வரலாற்றில் (இப்போது வரை), இரண்டு சமநிலை டெஸ்ட்கள் மட்டுமே நடந்துள்ளன:
1. 1960 - ஆஸ்திரேலியா vs மேற்கிந்திய தீவுகள் (பிரிஸ்பேன்)
2. 1986 - இந்தியா vs ஆஸ்திரேலியா (சென்னை)
என்ன கல்கி ஆன்லைன் வாசகர்களே இந்த செய்தி பிடித்து இருந்ததா?