சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்த அணிக்கு எதிராக எங்களால் விளையாட முடியாது என்றும், இந்த அணியை ஐசிசி தடை செய்ய வேண்டும் என்றும், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் கூட்டாக கோரிக்கை விடுத்திருக்கின்றன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் 8 அணிகள் மோதவுள்ளன. 29 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் முதல்முறையாக சாம்பியன்ஸ் ட்ராபி நடைபெறவுள்ளது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு பல நூறு கோடிகளையும் செலவிட்டுள்ளது. பாகிஸ்தானில் ராவல்பிண்டி, லாகூர் மற்றும் கராச்சி ஆகிய மூன்று இடங்களில் போட்டிகள் நடத்தப்படும். ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபியின் ஒன்பதாவது தொடர் மொத்தமாக 19 நாட்கள் நடைபெறும். இந்த ஐசிசி சாம்பியன்ஷிப் தொடர் பிப்ரவரி 19ம் தேதி கராச்சியில் தொடங்குகிறது. இறுதிப் போட்டி மார்ச் 9 அன்று நடைபெறும்.
8 அணிகள் போட்டியிடும் இந்த தொடரில் 15 போட்டிகள் நடைபெறும். அதன்படி குரூப் ஏ வில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் இடம் பெற்றிருக்கிறது. குரூப் பி யில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பிடித்திருக்கிறது.
இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடத்தப்படும்.
இப்படியான நிலையில், இந்த அணி சாம்பியன்ஸ் தொடரில் விளையாட கூடாது என்று இரண்டு அணிகள் தெரிவித்துள்ளன. தென்னாப்பிரிக்கா நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹெய்டன் மெக்கென்ஷி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
அதாவது, “எனக்கு மட்டும் முழு அதிகாரம் இருந்தால், நிச்சயம் தென்னாப்பிரிக்க அணியை, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாட விட மாட்டேன். இனப்பாகுபாட்டை எதிர்க்கும் தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாட கூடாது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக அடக்குமுறை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. படிக்க கூட கூடாது என சொல்வதை எப்படி ஏற்றுகொள்ள முடியும். மகளிர் கிரிக்கெட் அணியையும் தடை செய்துவிட்டார்கள். இதனால், தென்னாப்பிரிக்க அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடக் கூடாது என்பது தான் எனது விருப்பம். அதற்கேற்றவாரு ஐசிசி, அட்டவணையை மாற்ற வேண்டும்.” என்று பேசினார்.
அதேபோல் இங்கிலாந்தில் 160 பேர்க் கொண்ட அரசியல்வாதி குழு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறது. “டெஸ்ட் விளையாடும் அனைத்து நாட்டு அணிகளிலும், மகளிர் அணி கட்டாயம் இருக்க வேண்டும். இதனை ஐசிசி உறுதி செய்ய வேண்டும். இந்த விதிமுறையை பின்பற்றாத ஆப்கானிஸ்தான் அணியை, ஐசிசி தொடர்களில் தடை செய்ய வேண்டும்.” என்று கூறியிருக்கிறது.
ஏற்கனவே இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்ற பிரச்னை எழுந்து முடிந்த நேரத்தில், இப்படி மீண்டும் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.