
உலகின் மின்னல் வேக மனிதன் என பாராட்டப்பட்ட உசைன் போல்ட்டின் தற்போதைய நிலை சற்று வேதனையை கொடுத்துள்ளது. இதுகுறித்த தகவல்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜமைக்கா தடகள ஜாம்பவான் உசைன் போல்ட், 39, ஒலிம்பிக் தடகளத்தில் 8 தங்கம் வென்றார். தடகளத்தில் 100 மீ., (9.58 வினாடி), 200 மீ., (19.19) ஓட்டத்தில் உலக சாதனை படைத்து 'மின்னல் வேக மனிதன்' என புகழ் பெற்றார். இவரது இந்த சாதனைகளை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உசைன் போல்ட் ஓட்டப்பந்தய போட்டிகளில் 2008 முதல் 2016-ம் ஆண்டு வரை, அவர் எட்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களையும், 11 உலக சாம்பியன் பட்டங்களையும் வென்று உலகின் வேகமான வீரர் என பாராட்டப்படுகிறார்.
உலக சாம்பியன்ஷிப்பில் 5 தங்கம் வென்றுள்ளார். 2017ல் சர்வதேச தடகள அரங்கில் இருந்து விடை பெற்றார். இப்படி ஒலிம்பிக் தடகளப்போட்டிகளில் பல சாதனைகளை படைத்த உசைன் போல்ட், தற்போது படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு சிரமப்படுகிறார் என செய்திகள் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைச்செய்துள்ளது.
இதை ஒப்புக்கொண்ட உசைன் போல்ட், இதுகுறித்து அவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘2017ல் ஓய்வு பெற்ற பின் என் வாழ்க்கையே மாறிவிட்டது. உடற்பயிற்சி முன்புபோல் செய்ய முடியவில்லை. தனது உடல் தகுதிக் குறைந்துவிட்டதாகவும், அவ்வப்போது ஓடுவதுகூட கடந்த ஆண்டு ஏற்பட்ட அகில்லெஸ் தசைநார் கிழிதலுக்குப் பிறகு நின்றுவிட்டதாகவும், இதனால், தற்போது மாடிப்படி ஏறவே சிரமப்படுகிறேன். வழக்கமான உடற்பயிற்சிகளைத் தொடர்வது கடினமாக இருக்கிறது. இதனால், மீண்டும் ஓட்டப்பயிற்சி, சரியான உடற்பயிற்சி மேற்கொள்ள உள்ளேன்’ என கூறியுள்ளார்.
சர்வதேச தடகள அரங்கில் இருந்து விடை பெற்ற பின்னர், உசைன் போல்ட் தற்போது அதிக உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருவதாலும், ஸ்கோலியோசிஸ் மற்றும் அகில்லெஸ் தசைநார் கிழிதல் ஆகிய 2 முக்கிய உடல்நலப் பிரச்சினைகள் காரணமாகவும் அவர் படிக்கட்டுகளில் ஏறக்கூட சிரமப்படுவதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுறது.
ஓட்டம் என்பது இதயம், நுரையீரல், தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தும் ஒரு உயர்-தீவிர பயிற்சியாகும். நீங்கள் பயிற்சியை நீண்ட காலம் நிறுத்தும்போது, உங்கள் உடலின் பிட்னஸ் அளவுகள் குறையும். இரத்த பிளாஸ்மா அளவு குறைந்து, இதய வெளியீடு மற்றும் தசைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கல் குறைகிறது. காலப்போக்கில், உங்கள் உடல் தசை நார்கள் குறைவான செயல்திறன் கொண்டதாக மாறும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஜமைக்காவில் உள்ள வீட்டில், உசேன் போல்ட் இப்போது மகள் ஒலிம்பியா லைட்னிங் மற்றும் இரட்டை சிறுவர்களான செயிண்ட் லியோ மற்றும் தண்டர் ஆகியோருக்கு முழுநேர தந்தையாக இருக்கிறார். தங்கள் தந்தை ஒரு காலத்தில் எவ்வளவு பெரிய நட்சத்திரம் என்பதை குழந்தைகளுக்குத் தெரியாது.
இந்நிலையில் ஜமைக்கா தடகள ஜாம்பவான் உசேன் போல்ட் அடுத்த மாதம் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் வரும் அக்டோபர் 1-ந் தேதி நடைபெற உள்ள பெங்களூரு எப்.சி.- மும்பை சிட்டி எப்.சி. அணிகளுக்கு இடையேயான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் உசேன் போல்ட் கலந்து கொண்டு விளையாட உள்ளார்.