மின்னலையும் தோற்கடிக்கும் உசைன் போல்டின் ஓட்டம்!

ஆகஸ்ட் 21: உசைன் போல்ட் பிறந்த நாள்
Usain bolt athlete
Usain bolt
Published on

உசைன் போல்ட் என்கிற உசேன் செயிண்ட் லியோ போல்ட் (Usain St. Leo Bolt) ஜமைக்காவின் டிரிலானி சபையிலுள்ள ஷெர்வூட் கான்டென்ட் எனும் சிறு நகரத்தில், 1986 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 21 அன்று, வெல்லெஸ்லீ மற்றும் ஜெனிஃபர் போல்டிற்குப் பிறந்தார்.

உசேனிற்கு சடிக்கி என்றொரு சகோதரரும், ஷெரீன் என்றொரு சகோதரியும் உள்ளனர். போல்ட்டின் பெற்றோர் ஊரில் மளிகைக் கடை நடத்தி வந்தனர். போல்ட் தன் சிறுவயதுகளில் சகோதரருடன் தெருக்களில் கிரிக்கெட் மற்றும் காற்பந்து விளையாடி வந்தார்.

2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 9.69 நொடி நேரத்தில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலகச் சாதனை பெற்றார். அத்துடன் 200 மீ ஓட்டம் (19.30 வினாடி) போட்டியிலும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளைப் புரிந்தவர்.

தன் நாட்டு சக வீரர்களுடன் இணைந்து 4 x 100 மீ தொடரோட்டத்தில் 37.10 வினாடிகளில் ஓடி சாதனை புரிந்தார். இவை அனைத்தையும் போல்ட்டு 2008 பெய்ஜிங் கோடை ஒலிம்பிக்கில் நிகழ்த்தினார்.

2003 ஆம் ஆண்டில் 200 மீட்டர் விரைவோட்டத்திலும் உலக இளையோர் சாதனை படைத்தார். ஒலிம்பிக்கின் மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் (100 மீ, 200 மீ மற்றும் 4 x 100 மீ) நடப்பு முதன்மை வீரன் (சாம்பியன்), ஒன்பது முறை உலக முதன்மை வீரன், ஒலிம்பிக் விரைவோட்டப் பந்தயங்களில் ஆறு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் வீரர், இம்மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் நடப்பு உலகச் சாதனைகளின் சொந்தக்காரர் எனப் பல சிறப்புகள் போல்ட்டுக்கு உண்டு.

இவரது விரைவோட்ட சாதனைகள் இவருக்கு 'மின்னல் வேக போல்ட்' (Lightning Bolt) என்ற ஊடகப் புனைப்பெயரையும், தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கத்தின் ஆண்டிற்கான சிறந்த வீரர் விருது, தடகள செய்திகள் நிறுவனத்தின் ஆண்டிற்கான சிறந்த வீரர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பன்முறை பெற்று தந்தன.

இதையும் படியுங்கள்:
உங்கள் நடத்தைதான் உங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும்!
Usain bolt athlete

'Bolt' என்பதற்கு 'இடி' என்றும் ஆங்கிலத்தில் பொருள் பெறுவதால், இவரது புனைப்பெயர் 'இடி மின்னல்' என்று பொருள்படுமாறு வழங்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

உலகத் தடகள வீரர்களில் அதிகப்படியான வருமானம் ஈட்டும் வீரர் இவரே. 2013 ஆம் ஆண்டிற்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்கள் வென்றதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் பந்தயங்களின் 30 ஆண்டு வரலாற்றின் அதிக வெற்றிகளைப் பெற்ற தலைச்சிறந்த வீரர்களுள் ஒருவரானார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com