ICC புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு: சுப்மன் கில் முதலிடம்.! விராட், ரோஹித் எத்தனாவது இடம் தெரியுமா?

ஐசிசி புதிய தரவரிசைப் பட்டியலில் சுப்மன் கில் நம்பர் 1 இடம்பிடித்துள்ளார். விராட் கோலி , ரோஹித் ஷர்மா , வைபவ் சூர்யவன்ஷி மற்றும் இந்திய வீரர்களின் தரவரிசைகள்:
ICC rank list
Subhman and Vaibhav
Updated on

ஐசிசி வெளியிட்ட புதிய தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் முன்னணி இடங்களைப் பெற்று சாதித்துள்ளனர். இந்த தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர்களான சுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் ஷர்மா, வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இரண்டு டி 20 தொடர்களில் மட்டுமே விளையாடியுள்ள வைபவ் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

​நம்பர் 1 பேட்ஸ்மேன் சுப்மன் கில்:

இந்தியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான சுப்மன் கில், ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் இந்தியா அணி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தாலும் , அந்த தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்த சுப்மன் கில் தரவரிசைப் பட்டியலில் உயர்ந்தார்.

Rohit Sharma and Virat kohli
Virat and RohitNdtv sports

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 80, 31, 77 என்று மூன்று போட்டிகளிலும் அவர் ரன் குவிப்பில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் டேரில் மிட்செல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இறுதிப்போட்டியில் காயம் காரணமாக பங்கேற்காததால், தர வரிசையில் பின் தங்க நேரிட்டது. இதனால், முதலிடத்தில் இருந்த நியூசிலாந்தின் டேரில் மிட்செலை பின்னுக்குத் தள்ளி கில் மீண்டும் முதலிடம் பெற்றார். தனது கிரிக்கெட் வரலாற்றில் கில் முதலிடம் பிடிப்பது மூன்றாவது முறையாகும்.

ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் விராட் கோலி 3 ஆம் இடத்தையும் , ரோஹித் ஷர்மா 4 ஆம் இடத்தையும் பிடித்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் 13 ஆம் இடத்தில் உள்ளார். இந்த பிரிவில் அணியின் பேட்ஸ்மென்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

​வைபவ் சூர்யவன்ஷியின் விரைவான முன்னேற்றம்!

​இந்தியாவின் இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியான ஆட்டத்தை ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் வெளிப்படுத்தி, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

ஜிம்பாப்வே தொடரில் ஆட்ட நாயகன் விருதையும் தொடர் நாயகன் விருதையும் வென்று இளம் வயதில் சாதித்துள்ளார். ஜிம்பாப்வே தொடரில் 18 பந்துகளில் அதிவேக அரை சதம் அடித்தும், கடைசிப் போட்டியில் 81 ரன்களும் எடுத்திருந்தார்.

தரவரிசைப் பட்டியலில் மற்ற இந்திய வீரர்களின் நிலை:

டி20 போட்டிகளில் தரவரிசை பட்டியலில் மற்ற இந்திய வீரர்களும் இடம்பிடித்து உள்ளன.​டி20 அணியின் துணைக் கேப்டன் திலக் வர்மா இரண்டு இடங்கள் முன்னேறி 6வது இடத்தை பிடித்துள்ளார். டி20 கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஏழு இடங்கள் முன்னேறி 24வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ரவி பிஷ்னோய் ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக பந்துவீசி தரவரிசையில் 31 இடங்கள் முன்னேறி 41வது இடத்தைப் பிடித்துள்ளார்.

​ஐசிசி தரவரிசைப் பட்டியலில் பேட்டிங்கில் இந்திய அணி முதலிடம் பிடித்து அசத்தி உள்ளது. ஆனாலும் பந்து வீச்சாளர்களை பொறுத்த வரையில் இந்திய அணி முன்னணி இடங்களை பிடிக்காதது ரசிகர்களை வருத்தமடைய வைத்துள்ளது.

ஒட்டு மொத்தமாக டி 20 அணிகள் தர வரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. இங்கிலாந்து அணி இரண்டாம் இடத்தையும் ஆஸ்திரேலியா அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலும் இந்திய அணி இன்னும் முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி இரண்டாம் இடத்திலும் , ஆஸ்திரேலியா அணி மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இதையும் படியுங்கள்:
ஒரே நாளில் 500 ரன்கள், 8 மெய்டன் ஓவர்கள்: கிரிக்கெட் வரலாற்றின் டாப் 3 மர்மங்களும் சாதனைகளும்!
ICC rank list
logo
Kalki Online
kalkionline.com