ஞாபக சக்தியினை தூண்டும் வல்லாரை !

ஞாபக சக்தியினை தூண்டும் வல்லாரை !
Published on

கைப்பிடி அளவு வல்லாரை இலை இதே அளவு மணத்தக்காளி கீரை எடுத்து அரைத்து சாறு எடுத்து காலை, மாலை ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வர இரண்டுவாரத்தில் ரத்த சோகை நோய் தீரும். வல்லாரை இலையை தின்று வர உடல் உஷ்ணம் தணியும்.

வல்லாரை இலைகளை அரைத்து புண்கள் மீது தடவி வர, புண்கள் சீக்கிரத்தில் ஆறும்.

வல்லாரையை இடித்தெடுத்துப் பிழிந்த சாறு அரைலிட்டர் நல்லெண்ணெய் அல்லது தே.எண்ணெய் அரைலிட்டர் இரண்டையும் கலந்து அடுப்பில் வைத்துஎரிக்க, அடிமண்டி மெழுகு போல விரலால் உருட்டும் போது திரளும் பதத்தில்இறக்கி வடிகட்டி தினந்தோறும் தலையில் தடவியும், தேய்த்துக் குளித்தும் வர, மூளைத்தெளிவு, குளிர்ச்சி தந்து நரையைத் தடுக்கும்.

வல்லாரை இலையை பால் கலந்து அரைத்து, விழுதை நெல்லிக்காய் அளவுஉண்டு வர நரை, திரை அகலும். இளமைத் தோற்றம் திரும்பும். எந்த விதமானகாய்ச்சலாக இருந்தாலும் வல்லாரை இலையால் செய்யப்பட்ட மாத்திரைகுணமாக்கும். இந்த இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் யானைக் கால்நோய் நீங்கும் என்று கூறுவார்கள்.

வல்லாரைச் சாறு, தேனுடன், மணத்தக்காளிச் சாறையும் கலந்து காமாலைகண்டவர்களுக்குக் கொடுப்பார்கள். இதனால் அதிவிரைவில் காமாலைகுணமாகும்.

வல்லாரை இலையுடன் வெந்தயமும் சேர்த்துக் குடிநீரிட்டு, 1 அல்லது 2 சங்குகுழந்தைகளுக்குப் புகட்ட, ஜுரம், வயிற்றுக் கோளாறுகள் தீரும்.

வல்லாரை கீரையை அனுதினமும் உணவில் சேர்த்து வர நோய் எதிர்ப்பு சக்திகூடும். உடல் வலிமை பெறும்.

வல்லாரையை பால் விட்டு அரைத்து காலை, மாலை சாப்பிட இளமை பெருகும்.

10 கிராம் வல்லாரைப் பொடியுடன், 5 கிராம் அதிமதுரத் தூள் கலந்து இரவில்தூங்கப் போகும் முன் தின்று வெந்நீர் குடிக்க மலச்சிக்கல் தீரும்.

வல்லாரைக் கீரையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், வாய்ப்புண், வாய் நாற்றம் போன்றவை குணமாகும்.

அதிகாலையில் வல்லாரை இலைச்சாறு 60 மி.லி. அளவில் குடித்துவர, காமாலைகுணமாகும்.

வல்லாரை இலைச்சாற்றில் அரிசித் திப்பிலியை ஊறவைத்து உலர்த்தித்தூள்செய்து வைத்துக்கொள்ளவும். இதில் நான்கு சிட்டிகை அளவு தேனில்குழைத்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர, நாள்பட்ட கபநோய்கள், இரைப்பு, இருமல் ஆகியவை குணமாகும்.

வல்லாரை இலைத் தூளுடன் சோம்புத் தூள் (சிட்டிகை அளவு) எடுத்து கலந்துதின்று வெந்நீர் குடித்து வர உஷ்ண வயிற்று வலி தீரும்.

நரம்புத் தளர்ச்சி, தாது விருத்திப் பிரச்சனை, காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளித் தொல்லை, சிறு நீர்க் கோளாறு போன்றவற்றைகுணப்படுத்துவதிலும் வல்லாரை சிறந்த மூலிகையாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com