அதிகமாக நடந்தால் முதலுக்கும் மோசமாகிவிடும், ஜாக்கிரதை!

Walking
Walking
Published on

வாக்கிங் என்பது உடற்பயிற்சியின் மிகவும் எளிமையான ஒரு வடிவம். இது நம்முடைய இதய ஆரோக்கியம், தசைகள் மற்றும் மன நலனை மேம்படுத்துகிறது. இந்த உடற்பயிற்சியை அளவுக்கு அதிகமாக செய்வதால், உடல் அசௌகரியம் மற்றும் ஆரோக்கியத்திற்கு பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.

நீங்கள் அளவுக்கு அதிகமாக நடக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்:

தொடர்ச்சியாக உங்களுக்கு சோர்வு அல்லது கால்களில் கனமான உணர்வு, வலி போன்றவை ஏற்படும்.

உங்களுடைய தசைகளுக்கு போதுமான அளவு ஓய்வு கிடைக்காவிட்டால் அவை எளிதாக காயமடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

நீண்ட நேரத்திற்கு சமமற்ற மேற்பரப்புகளில் நடக்கும் பொழுது இடுப்பு குறிப்பாக முட்டி மற்றும் கால்கள் அதிகமாக வலிக்கும். இது, அளவுக்கு அதிகமாக நடப்பதையும் அல்லது நீங்கள் தவறான காலணிகளை பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் உணர்த்துகிறது.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியம் நிறைந்த பனங்கிழங்கில் சத்தான 2 ரெசிபிகள்...
Walking

சொரசொரப்பான மேற்பரப்புகளில் நீண்ட நேரத்திற்கு நடக்கும் பொழுது கால்களில் திரவங்கள் தக்கவைக்கப்பட்டு வீக்கம் உண்டாகும். இந்த நிலை எடிமா என்று அழைக்கப்படுகிறது.

அளவுக்கு அதிகமாக நடப்பது உங்களுடைய கீழ் முதுகில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக நீங்கள் தவறான தோரணையோடு நடந்தாலோ அல்லது கனமான பொருட்களை சுமந்து கொண்டு நடந்தாலோ கீழ் முதுகில் அதிக வலியை அனுபவிப்பீர்கள். தொடர்ச்சியாக உங்களுக்கு முதுகு வலி இருந்தால் உங்களுடைய நடைபயிற்சி வழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

நடைப்பயிற்சி என்பது நீங்கள் மகிழ்ச்சியோடு அனுபவிக்கக் கூடிய ஒரு செயலாக இருக்க வேண்டுமே தவிர, உங்களுக்கு வலியை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கக் கூடாது. அளவுக்கு அதிகமான நடைபயிற்சி சில சமயங்களில் உங்களுடைய தூக்கத்தை கூட பாதிக்கலாம்.

அளவுக்கு அதிகமாக நடப்பது எலும்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி விரிசல்களை உண்டாக்கும். இதனால் எலும்பு முறிவுகள் ஏற்படலாம்.

அதிகமாக நடந்து உங்களுடைய மூட்டுகளுக்கு நீங்கள் அதிக வேலை கொடுக்கும் பொழுது அதனால் ஆஸ்டியோஆர்தரைட்டிஸ் போன்ற நிலை வருவதற்கு வாய்ப்புள்ளது.

நடைப்பயிற்சியின் போது நம்முடைய கீழ் உடலை நாம் பயன்படுத்துகிறோம். மேலும், கால்களை அதிகமாக பயன்படுத்துவதால் வீக்கம் ஏற்படலாம். அதேபோல், குதிகாலில் வலி உண்டாகி, நடப்பதே வலி மிகுந்ததாக மாறும்.

அளவுக்கு அதிகமாக நடக்கும்பொழுது உங்களின் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவிழக்க செய்யும். இதனால் உங்களுக்கு நாள்பட்ட சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் இதனால் உங்களுடைய இதய ஆரோக்கியம் குன்றுவதற்கும் வாய்ப்புள்ளது. நெஞ்சு வலி, மயக்கம் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் அதனை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை ஆலோசிப்பது அவசியம்.

தினமும் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நடைபயிற்சி மேற்கொள்வது போதுமானது. ஆனால் இந்த சமயத்தில் நீங்கள் நடக்கும் பொழுது ஏதேனும் அசௌகரியத்தை உணர்ந்தால் உடனடியாக நடைபயிற்சியை நிறுத்தவும்.

இதையும் படியுங்கள்:
இரண்டாம் உலகப் போரின் நாயகன் வின்ஸ்டன் சர்ச்சில் பொன்மொழிகள்...!
Walking

நடைபயிற்சிக்கு பயன்படுத்தும் ஷூக்களை மாற்றுவது அவசியம். நடைப்பயிற்சிக்கு இடையே போதுமான அளவு பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள்.

நடக்கும் பொழுது உங்களுடைய தோள்பட்டைகளை தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள்.

கைகளை வீசி இயற்கையான முறையில் நடப்பது நல்லது.

நடப்பதற்கு உங்களுக்கு ஆற்றலை கொடுப்பதற்கு நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவு மற்றும் தண்ணீர் குடிப்பது அவசியம்.

புரோட்டின் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை உங்களுடைய அன்றாட டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நடக்கும் படிகளை கணக்கிடுவதற்கு ஃபிட்னஸ் டிராக்கரை பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com