விராட் கோலி - டிராவிஸ் ஹெட் கைகுலுக்கல் சர்ச்சை: மௌனம் கலைத்த ஆஸ்திரேலிய வீரர்!

சமூக வலைத்தள வைரல் வீடியோவும், அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மைகளும்.
கைகுலுக்கல் சர்ச்சை - Virat Kohli
கைகுலுக்கல் சர்ச்சை - Virat Kohli
Updated on

2026 ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஆர்சிபி அணிகள் மோதியபோது விராட் கோலி டிராவிஸ் ஹெட்டின் கைகுலுக்கலை தவிர்த்த காட்சி வைரலாகி பெரிய சர்ச்சையாக மாறியது. மைதானத்தில் நடந்த வார்த்தை பரிமாற்றம், போட்டி தீவிரம், தனிப்பட்ட கோபம் என ரசிகர்கள் விவாதித்த நிலையில், ஹெட் இது பெரிதல்ல என்று விளக்கம் அளித்தாலும், அவரது மனைவிக்கு எதிரான ஆன்லைன் தாக்குதல்கள் விவகாரத்தை மேலும் தீவிரப்படுத்தின.

கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் ஒவ்வொரு சிறிய சம்பவமும் சில நேரங்களில் மிகப்பெரிய சர்ச்சையாக மாறிவிடும். அதற்கு சமீபத்திய உதாரணம் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டிராவிஸ் ஹெட் இடையிலான "கைகுலுக்கல்" விவகாரம்.

2026 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில் விராட் கோலி மற்றும் டிராவிஸ் ஹெட் இடையே மைதானத்தில் சில வார்த்தைப் பரிமாற்றங்கள் நடந்ததாக கூறப்பட்டது. போட்டி முடிந்ததும் வீரர்கள் வழக்கம்போல ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டனர்.

அப்போது டிராவிஸ் ஹெட் கையை நீட்டியபோது விராட் கோலி அவரைக் கடந்து சென்ற காட்சிகள் கேமராவில் பதிவாகின.. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. "இருவருக்கும் இடையே என்ன நடந்தது? இது விளையாட்டு போட்டியின் தீவிரமா அல்லது தனிப்பட்ட கோபமா? "என்று ரசிகர்கள் விவாதிக்க தொடங்கினர்.

சம்பவம் நடந்து சில காலம் கடந்த நிலையில் டிராவிஸ் ஹெட் தற்போது இந்த விவகாரம் குறித்து மௌனம் கலைத்துள்ளார். "இதில் சரி செய்ய வேண்டியது எதுவும் இல்லை. போட்டி எப்படி சென்றதோ அதற்கேற்ப நடந்தது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை" என்ற பொருளில் அவர் பதில் அளித்துள்ளார். இதன் மூலம் இந்த சம்பவத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை டிராவிஸ் ஹெட் தெளிவுபடுத்தி உள்ளார். ஆனால் சர்ச்சை இத்துடன் முடிந்து விடவில்லை.

இதையும் படியுங்கள்:
நிலவில் விளையாடப்பட்ட முதல் விளையாட்டு எது தெரியுமா? வியக்க வைக்கும் உண்மைகள்!
கைகுலுக்கல் சர்ச்சை - Virat Kohli

இந்த விவகாரத்துக்குப் பிறகு ஹெட்டின் மனைவியும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் மோசமான தாக்குதல்களை எதிர்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து பேசிய ஹெட் "இதுதான் நாம் வாழும் உலகம்" என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மைதானத்தில் நடக்கும் போட்டி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றுக்கு இடையே ஓர் எல்லை இருக்கவேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. ஒரு கை குலுக்கல் இல்லாத சம்பவம் இவ்வளவு பெரிய சர்ச்சையாக மாறுமா? கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளாகி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து ரசிகர்கள் இருவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் போட்டி முடிந்த பிறகு வீரர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்குவது விளையாட்டு மரபு என்றும் அந்த மரபை அனைவரும் மதிக்கவேண்டும் என்றும் கூறுகின்றனர். மற்றொரு தரப்பினர் மைதானத்தில் போட்டி உணர்வு அதிகமாக இருக்கும்போது இது போன்ற சம்பவங்கள் நடப்பது இயல்புதான் என்கின்றனர்.

கைகுலுக்கல் சர்ச்சை - Virat Kohli
கைகுலுக்கல் சர்ச்சை - Virat Kohli

கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் ஒருவருக்கொருவர் கடுமையாகப் போட்டியிடுவது புதிதல்ல. ஆனால் போட்டி முடிந்த பிறகு தனிப்பட்ட விரோதங்களை மறந்து மீண்டும் நட்புடன் இருப்பதே விளையாட்டின் அழகு. அதனால்தான் ஒரு கை குலுக்கல் நடந்ததா இல்லையா என்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது.

குறிப்பாக விராட் கோலி மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலமான வீரர்கள். இருவருக்கும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இதனால் அவர்களுக்கிடையே நடக்கும் ஒவ்வொரு சிறிய சம்பவமும் உடனடியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடுகிறது.

ஒரு போட்டியில் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கக் கூடாது என்பதே பலரின் கருத்தாக உள்ளது. வீரர்களை விமர்சிப்பது விளையாட்டின் ஒரு பகுதியாக இருந்தாலும் அவர்களின் குடும்பத்தினரைத் தேவையில்லாமல் விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. டிராவிஸ் ஹெட்டின் தற்போதைய விளக்கம் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா? அல்லது ரசிகர்கள் இதை தொடர்ந்து விவாதிப்பார்களா?

இதையும் படியுங்கள்:
லார்ட்ஸ் மைதானமும் இந்திய கிரிக்கெட்டும்: கபில்தேவ் முதல் ஹர்மன்பிரீத் வரை படைத்த காவிய சாதனைகள்!
கைகுலுக்கல் சர்ச்சை - Virat Kohli

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஒரு சிறிய வீடியோ எவ்வளவு பெரிய சர்ச்சையை உருவாக்க முடியும் என்பதற்கு இந்த கைகுலுக்கல் விவகாரமே மற்றொரு உதாரணமாக மாறியுள்ளது. இந்த சம்பவம் கிரிக்கெட்டில் வெற்றி தோல்வியைத்தாண்டி வீரர்களின் நடத்தை குறித்தும் ரசிகர்களை சிந்திக்க வைத்துள்ளது.

இந்த நிகழ்வின் பின்னணி, வீரர்களின் நிஜமான மனநிலை மற்றும் சமூக வலைத்தள விவாதங்களின் தாக்கம் குறித்த தெளிவான பார்வையைப் பெறுவதோடு, விளையாட்டு உணர்வுக்கும் எல்லை மீறிய விமர்சனங்களுக்கும் இடையிலான வேறுபாட்டைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.

logo
Kalki Online
kalkionline.com