தோனி குறித்து யோக்ராஜ் பேசிய கருத்துக்கு ஏன் யுவராஜ் வாய்த் திறக்கவில்லை? எழும் கேள்விகளுக்கு பதில் இதோ!

Yograj and Yuvaraj singh
Yograj and Yuvaraj singh
Published on

யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ், தோனி குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறிய நிலையில், அதற்கு ஏன் யுவராஜ் பதில் கருத்துகளை கூறவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்தவகையில், யுவராஜ் இதுகுறித்து முன்பு குறிப்பிட்டிருப்பதைப் பார்ப்போம்.

யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் பலமுறை தோனியை தாக்கிப் பேசியிருக்கிறார். ஆனால், சமீபத்தில் அதைவிடவும் மேலாக கடுமையாகத் தாக்கி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, “தோனி தனது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். ஆனால், எனது மகனுக்கு எதிராக செயல்பட்டு இருக்கிறார். எல்லா விஷயமும் இப்போது வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அதை என் வாழ்வில் மன்னிக்கவே முடியாது. நான் என் வாழ்க்கையில் இரண்டு விஷயங்களில் கவனமாக இருப்பேன். ஒன்று என்னை எதிர்த்தவர்களை அணைக்க மாட்டேன். மற்றொன்று எனக்கு எதிராக செயல்பட்டவர்களை மன்னிக்கவே மாட்டேன்.

அது என் குடும்ப உறுப்பினராக இருந்தாலும் சரி, மகனாக இருந்தாலும் சரி. தோனி எனது மகனின் வாழ்க்கையையே அழித்துவிட்டார். யுவராஜ் சிங் இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் விளையாடி இருப்பார். யுவராஜ் சிங் போன்ற ஒரு மகனை முடிந்தால் நீங்கள் பெற்று எடுங்கள். அவர் புற்று நோய்க்கு எதிராக போராடி பின் மீண்டும் விளையாடியதற்காகவும், நாட்டுக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்ததற்காகவும் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். வீரேந்திர சேவாக் மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோரே 'இன்னொரு யுவராஜ் சிங் வரவே முடியாது' என்று கூறியிருக்கின்றனர்.” என்று கடுமையாகப் பேசினார்.

இதற்கு யுவராஜ் சிங் ஏன் பதிலடிக் கொடுக்கவில்லை என்ற கருத்துக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், யுவராஜ் சிங் தனது சுயசரிதையில், தனது அப்பா குறித்து குறிப்பிட்டுள்ளதைப் பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:
கிரிக்கெட்டில் நடுவரே புகழ்ந்த 'ஒன் மேன் ஆர்மி' யார் தெரியுமா?
Yograj and Yuvaraj singh

"எனது அப்பா மிகவும் கடுமையானவர். சிறுவயதில் ரன் சேர்க்கவில்லை என்றால், வீட்டிற்குள்ளேயே விடமாட்டார். ஆகையால், வளரந்தப்பின் ரன் சேர்க்காத நாட்களில் வீட்டுக்குச் செல்லாமல், காரிலேயே தூங்கிவிடுவேன். சதம் அடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் அவரிடம் கூறவந்தால், ஏன் இரட்டை சதம் அடிக்கவில்லை என்று கோபமாக கேட்பார். எனது தாயும் தந்தையும்கூட எப்போது சண்டையிட்டுக் கொண்டேதான் இருப்பார்கள். ஒருகட்டத்தில் இருவரும் பிரிந்து வாழும் சூழல் ஏற்பட்டது. அப்போது நான் அதிகம் என் தாயிடம்தான் இருப்பேன். நான் அவரிடம் அவ்வளவாக பேசமாட்டேன்.” என்று குறிப்பிட்டிருப்பார்.

தனது தந்தை இப்படித்தான் என்று ஏற்கனவே யுவராஜ் கூறியபின், மீண்டும் அதை ஒவ்வொருமுறையும் குறிப்பிட வேண்டுமா என்ன??

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com