ஐசிசி எச்சரிக்கை.! திட்டமிட்டபடி IND vs PAK போட்டி நடக்குமா..??

Ind vs Pak
T20 Worldcup
Published on

வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி பத்தாவது டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் கொழும்புவில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இந்தியாவில் விளையாட மாட்டோம் என வங்கதேசம் அறிவித்த நிலையில், அந்த அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்தை சேர்த்தது ஐசிசி.

இந்நிலையில் எங்களுக்கு ஆதரவாக நீங்களும் உலக கோப்பையை புறக்கணிக்க வேண்டும் என பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டது வங்கதேசம். ஆனால் பாகிஸ்தான் இந்தியாவுடன் மட்டும் விளையாட மாட்டோம் என்று நேற்று அறிவித்திருந்தது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வருகின்ற பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்புவில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அறிவித்திருந்த நிலையில், அந்த அணிக்கு ஐசிசி இன்று கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பாகிஸ்தானின் இந்த அறிவிப்பால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறும் போட்டி நடைபெறுமா அல்லது ரத்தாகுமா? என்ற கவலையில் ரசிகர்கள் ஆழ்ந்துள்ளனர். கிரிக்கெட்டை பொருத்தவரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும்.

இவ்விரு அணிகளும் ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடி வருவதால், இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு எப்போதுமே எதிர்பார்த்ததை விடவும் அதிக வரவேற்பு கிடைக்கும். இந்நிலையில் பாகிஸ்தான் இந்த முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட அறிக்கையில், “ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக மட்டும் விளையாட மாட்டோம் என்று சொல்வது விளையாட்டின் நேர்மை மற்றும் சமத்துவத்திற்கு எதிரான செயலாகும். T20 உலகக்கோப்பையில் இந்தியாவை புறக்கணிக்கும் பாகிஸ்தான் அணி, கிரிக்கெட்டில் நீண்ட கால பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆகையால் பாகிஸ்தான் அணி மீண்டும் ஒருமுறை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்” என ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் அறிவித்த பிறகு, திட்டமிட்டபடி பிப்ரவரி 15ஆம் தேதி இந்திய அணி கொழும்புவிற்கு செல்லும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் ஐசிசி-யின் அனைத்து விதிமுறைகளையும் பிசிசிஐ பின்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி எச்சரிக்கையால் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாட சம்மதிக்குமா? அல்லது புறக்கணிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கிரிக்கெட் வீரராக ஆசைப்பட்ட உசேன் போல்ட்..! ஓட்டப்பந்தய வீரரானது எப்படி தெரியுமா?
Ind vs Pak

கடந்த ஆண்டு நடைபெற்ற லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் லீக் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய முன்னாள் வீரர்கள், பாகிஸ்தான் அணியுடன் விளையாட மறுத்தனர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் ஏற்கனவே டி20 போட்டியில் இருந்து வங்கதேசத்தை நீக்கிய ஐசிசி, தற்போது பாகிஸ்தான் அணியையும் நீக்குமா அல்லது இந்தியா பாகிஸ்தான் போட்டி மட்டும் ரத்தாகுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஒருவேளை உலகக்கோப்பை டி20 தொடரில் இந்தியா பாகிஸ்தான் போட்டி ரத்தானால், இந்தியாவுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்.

இருப்பினும் அடுத்தடுத்த சுற்றுகளில், பாகிஸ்தான் இந்திய அணியுடன் விளையாடும் சூழல் ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
இன்றைய கிரிக்கெட் விதிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருப்பது நியாயமா?
Ind vs Pak

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com