டி20 தொடரை வென்றது இந்தியா!

T20 Match
T20 Match
Published on

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மே.இந்திய தீவுகள் அணி 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் இந்தியாவை எதிர்கொண்டது. தொடரின் இறுதி போட்டி டிச.19 (வியாழக் கிழமை) அன்று நவி மும்பையில் உள்ள DY.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகடமியில் தொடங்கியது. டாஸ் வெல்வதில் எப்போதும் அதிர்ஷ்டம் மே.இந்திய தீவுகள் அணி பக்கமே இருந்தது. இம்முறையும் டாஸ் வென்ற மே.இந்திய தீவுகள் அணி வழக்கம் போல பவுலிங்கை தேர்வு செய்தது. ஆனால் , இம்முறை இந்தியாவின் பேட்டிங் அசுரத்தனமாக இருந்தது.

இந்திய அணியின் சார்பாக கேப்டன் ஸ்மிருதியும் உமா செத்ரியும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரிலே உமா அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து ஸ்மிருதியுடன் ஜெமிமா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அருமையாக விளையாடி 99 ரன்களை சேர்த்தது. ஜெமிமா நன்றாக விளையாடி 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் ஸ்மிருதி 13 பவுண்டரிகளையும் ஒரு சிக்சரையும் பறக்க விட்டு 77 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ரக்வி பிஸ்ட் நிதானமாக ரன்களை சேர்க்க, மறுபுறம் ரிச்சா கோஷ் வந்து அட்டகாசம் செய்தார். ரிச்சாவின் ஆட்டம் சூறாவளியை போன்று இருந்தது. ரிச்சா (54) 21 பந்துகளில் 5 சிக்ஸர்களையும் 3 பவுண்டரிகளையும் அடித்து மே.இந்திய பவுலர்களை அழ வைத்து விட்டார். இப்படி ஒரு அதிரடியை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. இறுதியில் ஒரு பந்துக்கு மட்டும் களமிறங்கிய சஞ்சனா பவுண்டரி அடிக்க இந்திய அணி 217/4 என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.

இதையும் படியுங்கள்:
இக்கட்டான சூழ்நிலைகளில் கை கொடுக்கும் உள்ளுணர்வு!
T20 Match

இந்திய அணியின் ஸ்கோரை விரட்ட களமிறங்கிய மே.இந்திய அணிக்கு இம்முறை அதிர்ஷ்டம் கை கொடுக்க வில்லை. போன மேட்ச்க்கு நேர் எதிராக இந்த மேட்சில் விக்கெட்டுகள் சரிந்தன. ஹெய்லி ஜோசப் 22 , கியானா 11 ,டீன்டிரா 25 , ஷெமைன் கேம்பல் 17 என மே.இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் தொடர்ச்சியாக வெளியேறினர். ஹென்றி மட்டும் ரிச்சாவுக்கு போட்டியாக மிகவும் அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 43 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

ஹென்றி விளையாடும் போது அதிவேகமாக ஆட்டத்தின் போக்கு மாறியது. ஆயினும் அது நிலைக்க வில்லை.ஹென்றிக்கு பின் வந்த அனைவரும் இரட்டை இலக்கத்தை தாண்ட முடியாமல் பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தனர். இறுதியில் மே.இந்திய தீவுகள் அணியினர் 157/9 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவினர். இந்தியா சார்பில் ராதா யாதவ் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் மே.இந்திய தீவுகள் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 5 வருடங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் இந்திய மகளிர் அணி முதல் டி20 தொடரை கைப்பற்றி சாதித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
சாம்பியன்ஸ் ட்ராபி: பாகிஸ்தானில் இந்தியா விளையாடாது… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
T20 Match

இந்த போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடிய ரிச்சா கோஷ் ஆட்ட நாயகியாக தேர்வானார். இந்த தொடர் முழுக்க ஆதிக்கம் செலுத்தி 193 ரன்களை குவித்த ஸ்மிருதி தொடர் நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்மிருதி ஒரு ஆண்டில் டி20 போட்டியில் அதிக ரன்கள் (763) அடித்தவர், ஒரு ஆண்டில் அதிக அரை சதங்கள் (30) அடித்தவர், ஒரு ஆண்டில் அதிக பவுண்டரிகளை (100) அடித்தவர் என்ற சாதனைகளையும் படைத்தார்.

அடுத்ததாக வதோராவில் நடைபெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன்  இந்திய அணி மோதுகிறது. இந்த போட்டிகள் வரும் டிசம்பர் 22, 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com