
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் குகேஷ் 11 வது சுற்றில் வெற்றி பெற்று தற்போது முன்னிலையில் இருக்கின்றார்.
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றை டிங் லிரெனும், 3-வது சுற்றை குகேசும் வென்றனர். மற்ற சுற்றுகள் அனைத்தும் டிராவில் முடிந்தன.
இந்த நிலையில் ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு 7-ம்தேதி நடந்த 10-வது சுற்று ஆட்டத்தில் 36-வது நகர்த்தலில் இருவரும் டிராவில் முடிக்க ஒப்புக்கொண்டனர். இதனால் இருவரும் ½ புள்ளியை பெற்றனர். இந்த தொடரில் தொடர்ச்சியாக டிராவில் முடிந்த 7-வது ஆட்டம் இதுவாகும்.
10-வது சுற்று முடிவில் இருவரும் தலா 5 புள்ளிகளுடன் சமநிலையில் நீடிக்கிறார்கள். சாம்பியன்ஷிப்பை வெல்வதற்கு ஒரு வீரர் 7.5 புள்ளிகளைப் பெற வேண்டும். 14 ஆட்டங்களுக்குப் பிறகு போட்டி டிராவில் முடிந்தால், வெற்றியாளரைத் தீர்மானிக்க மறுநாள் டைபிரேக் நடத்தப்படும். இன்னும் 3 ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில் இறுதிப் போட்டியில் அங்குலங்கள் குகேஷ் முன்னிலையில் உள்ளார்.
நடப்பு தொடரில் முதல்முறையாக முன்னிலை பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த 18 வயதான குகேசுக்கு பட்டம் வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாகியுள்ளது. எஞ்சிய 3 சுற்றில் குகேஷ் டிரா செய்தாலே போதும்.
இரு வீரர்களின் தொடர் டிராவுக்குப் பிறகு, நேற்று (டிசம்பர் 8-ம்தேதி) நடந்த 11-வது ஆட்டத்தில் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரெனையும் தோற்கடித்தார். இந்த ஆட்டத்தில் லீரன் செய்த தவறை குகேஷ் பயன்படுத்தி 6-5 என முன்னிலை பெற்றார். உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெறும் வெற்றியாளருக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும்.
குகேஷுக்கு இது வரவேற்கத்தக்க வெற்றியாகும். உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் குகேஷ் இப்போது 6-5 என முன்னிலை வகிக்கிறார். மேலும், இந்த சாம்பியன்ஷிப்பில் அவர் முன்னிலை பெறுவது இதுவே முதல் முறை. குகேஷ் வெற்றியை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
போட்டி முடிவில் குகேஷ் கூறுகையில், "இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் நான் நிதானத்தை இழந்தேன். அதன் பிறகு வெற்றி வாய்ப்பு இருப்பதை உணர்ந்து சுதாரித்துக் கொண்டு சட்டென்று வெற்றியும் பெற்று விட்டேன். எஞ்சிய 3 ஆட்டங்களும் மிகவும் முக்கியமானது," என்றார்.
தோல்விக்கு பின் டிங் லிரென் "இது எனக்கு மிகவும் கடினமான ஆட்டமாக இருந்தது" என்று கூறினார்.
இன்று பிற்பகலில் நடக்கும் 12-வது சுற்றில் குகேஷ் கருப்புநிற காய்களுடன் விளையாட உள்ளார்.