நேற்று ஒரே நாளில் மூன்று இந்திய அணிகள் மூன்று விதமான தோல்விகளை சந்தித்திருக்கிறது. அந்தவகையில் எந்தெந்த அணிகள் எந்த போட்டிகள் விளையாடியது என்று பார்ப்போம்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வந்தது. இந்த போட்டி நேற்று முடிவடைந்த நிலையில், இந்திய அணி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் மட்டும் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 337 ரன்கள் எடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி 175 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணிக்கு வெறும் 19 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டிசம்பர் 8 அன்று அந்த இலக்கை 3.2 ஓவர்களில் எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியை பெற்றது.
இதனையடுத்து இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியா மகளிர் அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் எடுத்தது.
அடுத்து பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி 44.55 ஓவர்களில் 249 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து இந்திய அண்டர் 19 அணி ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேச அண்டர் 19 அணியுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. இத்தனை எளிதான இலக்கை அடைய இந்திய அணி தடுமாறி வந்தது. அந்தவகையில் இந்திய அணி 35.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 139 ரன்கள் மட்டுமே எடுத்து 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.
எனவே, இந்திய அணிகள் ஒரே நாளில் மூன்று படுமோசமான தோல்விகளை நேற்று சந்தித்திருக்கிறது.