

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிஃபா) மூலம் (FIFA) 4 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிதான் உலகின் மிக உயர்ந்த விளையாட்டு திருவிழாவாக கருதப்படுகிறது. தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் கால்பந்து போட்டியில் வீரர்களின் வாழ்நாள் லட்சியமான உலகக்கோப்பை கால்பந்து கோப்பை குறித்த பலரும் அறிந்திராத தகவல்களை இப்பதிவில் காண்போம்.
கோப்பையின் சிறப்புகள்
பொதுவாக விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி அல்லது தங்க முலாம் பூசப்பட்ட உலோகங்களால் செய்யப்பட்ட கோப்பைகள் வழங்கப்படும். ஆனால் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் உலகக்கோப்பை முழுக்க முழுக்க சுத்தமான 18 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட தனித்துவம் உடையது.
தற்போது தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில் உலக கோப்பையின் மதிப்பும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. ஆறு கிலோவிற்கும் அதிகமான எடையை கொண்ட இந்த டிராபி சுமார் 36.5 சென்டிமீட்டர் உயரமுடையது. மேலும் இந்த கோப்பையில் சுத்தமான தங்கம் மட்டுமே 5 கிலோ அளவிற்கு இருக்கிறது.
இரண்டு அடுக்குகள் கொண்ட மலாட்கிட் எனப்படும் விலை உயர்ந்த பச்சை நிற கற்கள் இந்த டிராபியின் அடிப்பகுதியில் பதிக்கப்பட்டுள்ளன. உலகத்திலேயே மிகவும் விலை உயர்ந்த மதிப்பு மிக்க கோப்பையாக தயாரிப்பு பொருட்களின் இன்றைய மதிப்பின்படி உலகக்கோப்பை கால்பந்து கோப்பை கருதப்படுகிறது. தங்கத்தின் விலை அதிகரிப்பு காரணமாக தற்போது இந்த கோப்பையில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு சுமார் 6.75 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் உலகக் கோப்பை கோப்பையின் மதிப்பு இருமடங்கு உயர்ந்தது எப்படி?
4 ஆண்டுகளில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு, பொருளாதார மாற்றங்கள், பணவீக்கங்கள் காரணமாக அதிகரித்துள்ளதால் 2022 ஆண்டு கோப்பையின் மதிப்பைவிட தற்போது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் கோப்பையின் வரலாற்றுச் சிறப்பு டிசைன் மதிப்பு, உலகம் முழுவதிலும் கால்பந்து கோப்பைக்கு இருக்கும் மதிப்பு போன்றவற்றை கணக்கிட்டால் சர்வதேச மதிப்பில் பல நூறு கோடிகள் தாண்டும் என்பது நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.
கோடிக்கணக்கான மக்களின் கனவு கோப்பை
உலகெங்கும் பல்வேறு விளையாட்டுகள் இருந்தாலும் கால்பந்து விளையாட்டுதான் அதிக ரசிகர்களை கொண்டுள்ளது. பல தலைமுறைகளாக கோப்பை வெல்வது மட்டுமே குறிக்கோளாக பல நாடுகளும் ரசிகர்களும், வீரர்களும் இருக்கின்றனர். இந்த கோப்பையை கையில் தொட்டுப்பார்க்க வேண்டும் என்பது உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ஏக்கமாகவே உள்ளது.
பிரேசில், ஜெர்மனி, இத்தாலி, அர்ஜென்டினா, பிரான்ஸ், உருகுவே இங்கிலாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகள் உலகக் கோப்பை கால்பந்து கோப்பையை வென்றுள்ளன.
ஜூலை 19, 2026 அன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் 23 வது கால்பந்து கோப்பையை வெல்லப்போகும் அணி சாம்பியன் பட்டத்துடன் கோப்பையை கையில் ஏந்தும்போது மறக்க முடியாத நிகழ்வாக இதில் பங்கேற்ற வீரர்களுக்கு அமைந்துவிடும்.
உலகெங்கிலும் இருந்து 48 நாடுகள் பங்குபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வழங்கப்படும் பரிசுத் தொகையின் மதிப்பு 871 மில்லியன் டாலராக ஃபிஃபா நிர்ணயித்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பில் இது 8200 கோடி ரூபாய் ஆகும். கனடா, மெக்ஸிகோ, அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் 2022 கத்தார் தொடரைவிட 50 சதவிகித பரிசுத்தொகை அதிகமாக வழங்கப்படுகிறது.
பரிசுத்தொகையின் அடிப்படையிலும் தங்கக் கோப்பையைவிட வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை விளையாட்டின் அடிப்படையில் இந்தத் தொடர் பிடித்துள்ளது.
கால்பந்து விளையாட்டின் மீதான உங்கள் தேடலுக்கு இந்தத் தொகுப்பு ஒரு புதிய பரிமாணத்தைத் தரும். உலகக் கோப்பை டிராபியின் பின்னணியில் இருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் 2026 தொடரின் அசுரத்தனமான 50% கூடுதல் பரிசுத்தொகை பற்றிய அரிய உண்மைகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும்.