ஐபிஎல் போட்டி: ரிட்டயர்ட் அவுட் ஆகி வெளியேறிய அஸ்வின்! வைரல் வீடியோ!

ஐபிஎல் போட்டி: ரிட்டயர்ட் அவுட் ஆகி வெளியேறிய அஸ்வின்! வைரல் வீடியோ!
Updated on

ஐபிஎல் 15-வது சீசன் போட்டி நடந்து வரும் நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் நேற்று மோதிக் கொண்டன. இப்போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் ராஜஸ்தான் வீரர் அஸ்வின் வேண்டுமென்றே ரிட்டயர்ட் அவுட் ஆகி வெளியேறினார். இப்படி ஐபிஎல்லில் ரிட்டயர்ட் அவுட் ஆகி வெளியேறும் முதல் வீரர் அஸ்வின்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அஸ்வின் ரிட்டையராகி வெளியேறும் வீடியோ வைரலாகியுள்ளது.

அஸ்வின் 28 ரன்கள் எடுத்திருந்த போதே ரிட்டயர்ட் அவுட் ஆகி வெளியேறினார். அஸ்வின் ரன்கள் குவிக்கும் வேகம் குறைவாக இருந்ததால், அந்த அஸ்வினுக்கு பதிலாக இளம் வீரர் ரியான் பராக்கை களத்தில் இறக்க விரும்பியது ராஜஸ்தான் அணி.

இதையடுத்து  அஸ்வின் 28 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டயர்ட் அவுட் ஆகி வெளியேறினார். எனினும் ரியான் பராக் 4 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com