வெறும் வயிற்றில் முளைகட்டிய தானியங்களை உண்பதால் உண்டாகும் 10 பயன்கள்!

Sprouted grains
Sprouted grains
Published on

காலை உணவை தவிர்க்கக் கூடாது என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் சிறு தானியங்களை முளைகட்டி காலையில் உண்பதால் உண்டாகும் பயன்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. செரிமானம்: முளைகட்டிய தானியங்களில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் செரிமான மண்டலத்தின் ஆற்றலை அதிகரித்து மலச்சிக்கலைப் போக்கி. உடல் இயக்கம் சீராக நடைபெற உதவுகிறது.

2. ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதை அதிகரிக்கிறது: ஊறவைத்து முளைகட்டப்பட்ட தானியங்களில் அதிகளவு இரும்பு, கால்சியம் மற்றும் ஜிங்க் ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இவை எளிதில் ஊட்டச்சத்தை உறிஞ்சும் ஆற்றல் பெறுகிறது.

3. அதிக புரதம்: முளைகட்டிய பாசிப்பருப்பில் தாவரப்புரதம் அதிகளவில் உள்ளதால்  சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுவோரின் புரதத் தேவையை பூர்த்தி செய்கிறது. அதிக புரதச்சத்துக்கள் கொண்ட காலை உணவு தசைகளின் வளர்ச்சியை அதிகரித்து  நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது.

4. எடை குறைப்பு: முளைகட்டிய தானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால்  காலையில் சாப்பிட்டால் பின்னர் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்பட்டு,  உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது.

5. நோய் எதிர்ப்பாற்றல்: முளைகட்டிய தானியங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை  வலுப்படுத்தி உடலில் தொற்று மற்றும் நோய்கள் அடிக்கடி ஏற்படுவதைத் தடுக்கிறது. இது ஃப்ரிரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது.

6. இரத்தச் சர்க்கரை அளவு பராமரிப்பு: முளைகட்டிய தானியங்கள் குறைந்த கிளைசெமிக் இண்டக்ஸ் பட்டியலில் இருப்பதால் இரத்த சர்க்கரையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதைத் தடுக்கும்.

இதையும் படியுங்கள்:
புதுமணத் தம்பதிக்கு பால் பழம் கொடுப்பதன் ரகசியம் தெரியுமா?
Sprouted grains

7. சரும பளபளப்பு: முளைகட்டிய தானியங்களில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளதால் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி, சரும பிரச்னைகளுக்கு காரணமான முகப்பருக்கள் மற்றும் சுருக்கங்களைப் போக்கி, சருமத்தை பொலிவாக வைக்கிறது.

8. இதய ஆரோக்கியம்: முளைகட்டிய தானியங்களில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், உடலில் எல்டிஎல் கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை காக்கிறது.

9. ஆற்றல் அளவை அதிகரிக்கிறது: ஊறவைத்து முளைகட்டப்பட்ட தானியங்களில் மெக்னீசியம், இரும்பு மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் சத்துக்கள் உள்ளதால் இயற்கையான ஆற்றல் கிடைப்பதுடன், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

10. உடலை ஆல்கலைஸ் செய்கிறது: முளைகட்டிய தானியங்கள் ஆல்கலைனை சமப்படுத்தி, எலும்பை வலுப்படுத்தி, ஆர்த்ரைடிஸ் போன்ற நிலைகளை சரிப்படுத்துகிறது.

உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் முளைகட்டிய தானியங்களின் பங்கு வெகுவாக உள்ளதால் காலை உணவாக இதை எடுத்துக்கொள்வது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com