வெள்ளை மிளகின் பத்து பயன்கள்

வெள்ளை மிளகில் உள்ள 10 ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
white pepper
white pepperimage credit- Colegiossantoangel.com
Published on

* வெள்ளை மிளகு செரிமானத்தை எளிதாக்கும். இதிலுள்ள பைப்பரின், செரிமான நொதிகளின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இது ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

* மூட்டு வலிக்கான சிகிச்சையில் வெள்ளை மிளகு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை மிளகை மையாக அரைத்து மூட்டு வலி உள்ள இடங்களில் பற்று போட்டால் மூட்டு வலி குணமாகும்.

* இது தோல் சுருக்கங்களைத் தடுக்கவும், கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை நீக்கவும், சருமம் தொங்குவதைத் தடுக்கவும், சரும வறட்சியை நீக்கவும், சருமத்தின் உயிர்ச்சக்தியை மீட்டெடுக்கவும் உதவுகிறது.

* வெள்ளை மிளகு அறிவாற்றல், மூளை செயல்பாடுகளை மேம்படுத்தவும், மூளை செல்கள் சிதைவதைத் தடுக்கவும் உதவுகிறது.

* இதில் அதிகமாக காணப்படுகின்ற பைபரின் வலி நிவாரணியாகவும் உள்ளது. இது உடலில் வீக்கத்தைக் குறைத்து, வலியைக் குறைக்கிறது.

* வயிற்றுப்புண் வராமல் தடுக்க வெள்ளை மிளகு பயன்படுகிறது. மேலும் வயிற்றில் பாக்டீரியா உருவாவதை தடுக்கிறது.

* வெள்ளை மிளகு, உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலை பராமரிக்கவும் உதவுகிறது.

* வெள்ளை மிளகினை தயிருடன் கலந்து உச்சந்தலையில் தடவி, முப்பது நிமிடங்கள் வைத்திருந்த பின்னர் கூந்தலை கழுவ வேண்டும், இவ்வாறு செய்தால் பொடுகு வராமல் தடுக்கலாம். வெள்ளை மிளகு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் முடி வளர்ச்சியும் மேம்படுகிறது.

* வெள்ளை மிளகினை உணவில் சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் சக்தி வெள்ளை மிளகுக்கு உண்டு.

* வெள்ளை மிளகில் உள்ள கேப்சைசின், இன்று உலகளவில் பல ஆண்களை பாதிக்கக்கூடிய புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
வெள்ளை மிளகு Vs கருப்பு மிளகு: எந்த சமையலுக்கு எது சிறந்தது?
white pepper

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com