10 Foods That Help Muscle Growth and Health
10 Foods That Help Muscle Growth and Healthhttps://manithan.com

தசை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவும் பத்து வகை உணவுகள்!

Published on

ம் உடலுக்கு வாளிப்பான வடிவம் கொடுக்க வல்லது தசைகள். தசைகளின் கட்டமைப்பிற்கு உதவக்கூடிய பத்து  வகை உணவுகளை இந்தப் பதிவில் காண்போம்.

ஸ்வீட் பொட்டட்டோவிலிருக்கும் காம்ப்ளெக்ஸ் கார்போ ஹைட்ரேட்ஸ் உடற்பயிற்சியின்போது தேவைப்படும் சக்தியைத் தருவதோடு, தசைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்களையும் தருகிறது.

பன்னீரில் தசைகளின் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டீன், கால்சியம், ஆரோக்கியம் தரக்கூடிய கொழுப்புகள் ஆகியவை அதிகளவில் நிறைந்துள்ளன.

உடலின் கட்டமைப்புக்கு உதவும் எல்லாவித அமினோ அமிலங்களும் அடங்கிய, முழுமையுற்ற புரோட்டீன் குயினோவாவில் அதிகம் உள்ளது.

பசலைக் கீரையில் தசைகளுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லக்கூடிய  இரும்புச் சத்து நிறைந்துள்ளது. மேலும் இக்கீரையில் நிறைந்துள்ள வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் உடலின் மொத்த ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடியவை.

புளூ பெரியிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள், அதிகளவு உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது உண்டாகும் ஆக்சிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கின்றன; வைட்டமின்கள் மற்றும் ஃபைட்டோகெமிக்கல்கள், இழந்த சக்தியை மீட்டெடுக்க உதவி புரிகின்றன.

பாதாம் கொட்டைகளிலுள்ள நல்ல கொழுப்புகளும் புரோட்டீனும் தசைகளுக்கு சக்தி அளிக்கின்றன.

பருப்பு மற்றும் பயறு வகைகளில் நிறைந்துள்ள தாவர வகை புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் தசைகளின் வளர்ச்சிக்குத் தேவையான சக்தியை தொடர்ச்சியாகத் தந்து கொண்டிருப்பவை.

இதையும் படியுங்கள்:
நீண்ட மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஜப்பானிய இக்கிகை சொல்லும் பத்து விதிகள்!
10 Foods That Help Muscle Growth and Health

உயர் தரமான புரோட்டீன் சிக்கனில் அதிகம் உள்ளது. சிக்கனில் கலோரி மற்றும் கொழுப்பின் அளவு குறைவாகவே உள்ளது. ஆகவே, தசை வளர்ச்சிக்கு உதவக்கூடிய சிறந்த உணவாக சிக்கனைத் தேர்ந்தெடுக்கலாம்.

கட்டுமஸ்தான உடலமைப்பு பெற சால்மன் மீன் உண்பது மிகச் சரியான வழியாகும். இந்த மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளை வளர்ச்சிக்கு உதவி புரிகின்றன.

பாலில்  தசைக் கட்டமைப்பிற்கு உதவும் புரோட்டீன் அதிகளவு உள்ளது. பாலில் உள்ள கால்சியம் உடலிலுள்ள கால்சியத்தின் அளவை மேம்படுத்துகிறது.

மேற்கண்ட உணவுகளை உட்கொண்டு வலுவான தசைகள் பெற்று ஆரோக்கியம் காப்போம்.

logo
Kalki Online
kalkionline.com