'எக்ஸ்டென்டெட் பீரியடில்' எடுத்துக்கொள்ள வேண்டிய 10 வகை உணவுகள்!

Foods that increase lifespan
Foods that increase lifespan

ட்கொள்ளும் உணவுகளில் விழிப்புணர்வு மற்றும் நவீன மருத்துவ உதவி போன்ற காரணங்களால் மனிதர்களின் சராசரி வாழ்நாள் வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் உடம்புக்கு பெரிதாக நோய்நொடி எதுவும் வராமல் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகிறது. அதற்கு உட்கொள்ளும் உணவை தேர்ந்தெடுத்து உண்பது நல்லது. அவ்வாறான 10 உணவுகள் எவை என்பதை இங்கு பார்க்கலாம்.

* ப்ளூ பெரி, ஸ்ட்ரா பெரி, ராஸ்பெரி, பிளாக் பெரி போன்ற பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக பிளவனாய்ட் மற்றும் அந்தோஸியானின் போன்றவை அதிகம் உள்ளன.

* பச்சை இலைக் காய்கறிகளை உண்பதால் இதய நோய், நீரிழிவு நோய், சில வகை கேன்சர் போன்ற நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயம் தடுக்கப்படும்.

* புரோக்கோலி, முட்டைக்கோஸ், பிரஸ்ஸல் ஸ்பிரௌட் போன்ற க்ரூஸிஃபெரஸ் காய்களில் சல்ஃபோரஃபேன் என்ற கூட்டுப்பொருள் உள்ளது. இது ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆன்டி இன்ஃபிளமேட்டரி, ஆன்டி மைக்ரோபியல் குணங்கள் கொண்டது. இவை ஆட்டிஸம், கிட்னி மற்றும் இதய நோய் போன்ற நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவும். இதய நோய், ஸ்ட்ரோக் மற்றும் கேன்சர் போன்ற வியாதிகள் வரும் அபாயத்தைத் தடுக்கக் கூடியது.

* லைக்கோபீன் என்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் தக்காளிப் பழத்தில் மிக அதிகம் உள்ளது.

* ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களிலுள்ள பிளவனாய்ட் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் காக்கக் கூடியவை.

இதையும் படியுங்கள்:
‘புனிதர்’ என்று அறிவிக்கப்படும் இத்தாலிய இளைஞர்!
Foods that increase lifespan

* ஆப்பிள் பழத்தை தினசரி உட்கொண்டு வந்தால் இதய நோய், ஸ்ட்ரோக் மற்றும் கேன்சர் போன்ற வியாதிகள் வரும் அபாயம் குறையும்.

* அவகாடோ பழத்தை உண்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும்; வீக்கங்கள் குறையும் ; எடை பராமரிப்பும் சாத்தியமாகும்.

* சிவப்பு மற்றும் பர்ப்பிள் நிற கிரேப்ஸ் பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் கொண்ட ரெஸ்வெராட்ரல் (Resveratrol) என்ற கூட்டுப்பொருள் அதிகம் உள்ளது. இது உடலின் பல வகை நோய்களைக் குணப்படுத்தும் சக்தியுடையது.

* பருப்பு வகை உணவுகளை உண்ணும்போது இரத்த சர்க்கரை மற்றும் எடை அளவுகளை சமநிலையில் வைத்துப் பராமரிக்க முடியும்; நாள்பட்ட வியாதிகள் உண்டாகும் அபாயமும் நீங்கும்.

* வைட்டமின் Aயின் பிரீகர்சர் (Precursor) ஆன பீட்டா கரோடீன் என்ற சத்து ஸ்வீட் பொட்டட்டோவில் அதிகம் உள்ளது. இது கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளை  ஊக்குவிக்கும்.

மேற்கண்ட உணவுகளை தவறாமல் அடிக்கடி உட்கொண்டு நோய்த் தாக்குதலின்றி, வாழும் நாட்களை வளமாக்குவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com