
வயது முதுமை காரணமாகவும் கால்சிய சத்து குறைபாடு காரணமாக பெரும்பாலானோருக்கு மூட்டு வலி வருகிறது. சில ஆரோக்கிய உணவுகள் மூட்டு எலும்பின் அடர்த்தியை அதிகரித்து மூட்டு வலியை குறைக்கின்றன. அந்த வகையில் மூட்டு வலி பிரச்னைக்கு முடிவு கட்ட உதவும் 10 உணவுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1) நெய்
கால்சியம் சத்து நிறைந்த பானமாக பால் இருக்கிறது. இந்த பாலில் இருந்து கிடைக்கும் நெய்யை உருக்கி சூடான சாதத்தோடு சாப்பிட்டு வர மூட்டு வலிமை அதிகரிக்கிறது.
2) பன்னீர்
பன்னீர் என்ற உணவுப் பொருள் பாலை திரித்து தயாரிக்கப்படுகிறது. இந்த பன்னீரில் சுவையான உணவுகள் செய்யலாம். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர மூட்டு பலம் பெறுகிறது .
3) முளைக்கட்டிய பயிர்
தானிய வகைகளான பச்சை பயறு, கொண்டைக்கடலை போன்ற பயறு வகைகளை முளைகட்டி, தாளித்து, சாப்பிட்டு வர, மூட்டு எலும்பு வலிமை பெற்று மூட்டு வலி குணமாகிறது .
4) முட்டை
முட்டையில் கால்சிய சத்து இருப்பதால் தினமும் ஒரு முட்டையை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் மூட்டு எலும்பு வலிமை பெறுகிறது. ஆகவே முட்டையை சாப்பிட்டு மூட்டுகளை பலம் பெறச் செய்யுங்கள்.
5) பச்சை பட்டாணி
பச்சை பட்டாணியில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் இதனை வைத்து பொரியல், குருமா கிரேவி போன்ற பல்வேறு சுவையான உணவுகளை செய்து சாப்பிட்டு வர மூட்டு வலி குறையும்.
6) முருங்கை கீரை
முருங்கைக்கீரையில் கால்சியம் சத்தும், இரும்பு சத்தும் அதிகம் உள்ளதால் வாரத்திற்கு இரண்டு முறை இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர மூட்டுகள் பலம் பெற்று மூட்டு வலி குறையும்.
7) பிரண்டை
பிரண்டை எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவும் உணவுப் பொருளாக இருக்கிறது. ஆகவே பிரண்டை கசாயம், பிரண்டை துவையல், பிரண்டை பொடி செய்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வர எலும்பு வலிமை அதிகரித்து மூட்டு வலி குறைகிறது.
8) ராகி
கால்சியம் சத்து நிறைந்த சிறு தானியமான ராகி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலியே வராது. இந்த ராகி மாவை அவித்து புட்டாக சாப்பிடலாம். ராகி களி, ராகி லட்டு செய்து சாப்பிட்டால் மூட்டுகள் பலம் பெறும்.
9) கறிவேப்பிலை
கறிவேப்பிலை மூட்டு வலியை குறைக்கும் சிறந்த மருந்தாக இருப்பதால், தினமும் ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலையை பொடி செய்து தண்ணீரில் கலந்து குடித்து வர மூட்டு வலிமை அதிகரிக்கிறது.
10) சுண்டைக்காய்
சுண்டைக்காயில் கசப்பு சுவையோடு கால்சியம் சத்தும் அதிக அளவில் இருக்கிறது . இந்த சுண்டைக்காயை பொடித்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் மூட்டுகள் வலிமையாக இருப்பதோடு மூட்டு வலியையும் குறைக்கும்.
மேற்கூறிய 10 உணவுப் பொருட்களுமே எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து மூட்டு வலியை குறைப்பதில் பெரும்பங்காற்றுகின்றன.