
பூசணிக்காய் சமையலுக்கு பயன்படுத்திவிட்டு அதன் விதைகளை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால், பூசணி விதைகளில் நம் உடலுக்கு நன்மை தரும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பூசணி விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்வோம்.
1. செரிமானத்தை மேம்படுத்துகிறது
பூசணி விதைகளில் உள்ள நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்தை அதிகப்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து நமக்கு வயிறு நிறைந்த உணர்வை தருகிறது. எலும்பு ஆரோக்கியத்திற்கும் சிறந்த உணவாக அமைகிறது. இதில் அதிக மெக்னீசியம் இருப்பதால், எலும்புக் குறைபாடு உள்ளவர்கள் இதனை உணவில் சேர்த்து சாப்பிடலாம்.
2. நல்ல தூக்கத்தை தரும்
இன்றைய காலத்தில் தூக்கம் வராமல் பலரும் திண்டாடுகின்றனர். இதில் இயற்கையாகவே ட்ரைப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. மெலோடினின் மற்றும் செரோடோனின் சேர்க்கைக்கு சிறந்தது என்பதால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
3. இதய நலம்
இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நலனை மேம்படுத்தும்.
4. நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்
இதிலுள்ள துத்தநாகம் நோய் எதிர்ப்பு செயல்கள் முறையாக செல்கள் செயல்பட உதவுகிறது. மெக்னீசியம், துத்தநாகம், இரும்புச்சத்து, காப்பர் போன்ற ஊட்டச்சத்துகளில் ஆரோக்கியத்தை தரும் கொழுப்பும், புரதமும் உள்ளது.
5. ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளது
வைட்டமின் இ, கரோடினாய்டு போன்ற ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகள் பூசணி விதையில் உள்ளது. இது ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைப்பதோடு ஃபிரீ ரேடிக்கல்ர்ஸுக்கு எதிராக உடலை போராட வைக்கிறது.
6. சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது
பூசணி விதையில் உள்ள மெக்னீசியம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. டயாபடீஸ் நோயாளிகள் பூசணி விதைகளை தங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது.
7. ப்ரோஸ்டேட் ஆரோக்கியம்
ப்ரோஸ்டேட் சுரப்பி வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
8. எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது
துத்தநாகம்,மெக்னீசியம் பாஸ்பரஸ் போன்றவை எலும்புகளை வலுப்படுத்த உதவுவதோடு, எலும்புகளை வலுப்படுத்தி எலும்புப் புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது.
9. மன நலனை மேம்படுத்தும்
இதில் உள்ள மெக்னீசியம் மனநிலையை மகிழ்ச்சியாக்க உதவுவதோடு மன அழுத்த அறிகுறிகளை குறைக்கவும் உதவுகிறது.
10. எடை குறைய
பூசணி விதைகளில் புரதம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் சாப்பிட்ட பின் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால் உணவு உட்கொள்வதை குறைக்கும். மேலும் உட்கொள்ளும் கலோரிகளின் எண்ணிக்கையையும் குறைக்கின்றன. இது உடல் எடை குறைய உணவில் ஒரு நல்ல கூடுதலாக அமைகிறது.
சாப்பிடும் முறை
பூசணி விதைகளை அப்படியே பச்சையாகவும் சாப்பிடலாம் வறுத்து மசாலா சேர்த்தும் சாப்பிடலாம். பழங்கள் மற்றும் காய்கறி சாலட்டுகளுடன் விதைகளை சேர்த்து சாப்பிடலாம், கஞ்சி வகைகளில் சேர்த்து பருகலாம். தயிர் அல்லது காலை உணவு தானியங்களுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
குக்கிஸ்கள், ரொட்டிகள், பேக்கிங் பொருட்களில் மாவில் கலந்தும் சமைக்கலாம். பாஸ்தாக்கள், சிக்கன் உணவுகள் போன்ற எந்த உணவின் மேலும் தூவி அலங்கரித்தும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது தூளாக்கி உணவில் சாப்பிட கொடுக்க வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)